தொட்டியில் ரோஜாக்கள் 1

தொட்டியில் ரோஜாக்களை சிறந்த முறையில் வளர்ப்பதை பற்றி பார்போம்.

பார்த்ததும் நம் மனதை மயக்ககூடியது ரோஜாப்பூக்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது இல்லியா? ஆனால் பார்த்ததும் ஆசை படுபவர்கள் வளர்க்க நினைத்து வாடிவிடுவார்கள். காரணம் சுலபமாக வளர்த்துவிட முடியாது என்ற கவலையில் சிலர் செடியே வாங்குவது கிடையாது. ஆனால் சில நுணுக்கங்களை தெரிந்துகொண்டால் யார்னாலும் சுலபமாக வளர்த்து அதிக பூக்களை தங்கள் வீட்டிலும் பார்க்கமுடியும். முறைகளை பார்போம் .

நர்செரிஇல் செடிகளை வாங்கும்போது கவனிக்கவேண்டியவை:

மிகவும் முக்கியமானது இதுதான். முதலில் செடி வாடாத விதத்தில் ஒட்டு ரகமாக இருக்க வேண்டும். சிலர் ரோஜா குச்சிகளை வைத்து பதியன் செய்து வைத்திருப்பார்கள் அதை வாங்கவே கூடாது. செடி ஒட்டு ரகமாகவும், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றியும், ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகளுடனும், பூவுடனும் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும்.

செடி நடும்போது கவனிக்க வேண்டியவை:

தொட்டியில் நடுவதாக இருந்தால் இரண்டு நாளுக்கு முன் அதில் நீர் ஊற்றி ஊற விடவேண்டும். செடியும் வாங்கி இரண்டு நாள் பிறகு தான் நட வேண்டும். நம் வீட்டு temparature க்கு அப்போதுதான் set ஆகும். பின் தொட்டி யின் உள்ளே சிறு கற்களை கொஞ்சம் போடவேண்டும் இதனால் அதிகபடியான நீர் வெளியேறிவிடும். செடியும் அழுகாமல் இருக்கும். பின்னர் ஒரு பங்கு மணல், ஒரு பங்கு செம்மண், ஒரு பங்கு ஆடு மாடு இரண்டின் கழிவு உரம் இவை மூன்றும் நன்கு கலக்க வேண்டும். பின் தொட்டியில் போட்டு செடி ஐ கவரில் இருந்து எடுத்து சரியாக வைத்து மண்ணை அணைக்க வேண்டும்.

மீண்டும் நான்

தொடர்ந்து எழுத வேண்டும் என்று தான் இந்த வலைப்பதிவை உருவாக்கினேன். ஆனால் சரியான வழிமுறைகள் தெரியாததால் காலதாமதம் ஆகிவிட்டது. இனி தொடர்ந்து எழுதுவேன். எனது விருப்பங்களை சொல்வதை விட எனக்கிருக்கும் திறமைகளை முதலில் சொல்லலாம் என்று நினைக்கிறன். பலவித சமையல்களை சில நிமிடங்களில் விரைவாக செய்து விடுவேன். Tailoring, art, craft work, embroidary, interior decoration, woollen work, fabric painting. இவை அனைத்தும் அழகாக செய்வேன். அப்புறம் பிற வேலைகள்னு சொன்னா கலர் fish வளர்ப்பது , காளான் வளர்ப்பது, மண்புழு உரம் உற்பத்தி பண்வது, gardening முக்கியமா ரோஜா செடி வளர்ப்பது. அதாவது அதிகமான பூக்கள் வர செய்ற சில நுணுக்கங்கள் எனக்கு தெரியும். அதன்படி எங்கள் தோட்டத்தில் வருடம் முழுவது பூக்கள் மனம் வீசி கொண்டிருக்கும். இதை பற்றி ரோஜாக்கள் என்ற தலைப்பில் பார்க்கலாம்.