தொட்டியில் ரோஜாக்கள் 1

தொட்டியில் ரோஜாக்களை சிறந்த முறையில் வளர்ப்பதை பற்றி பார்போம்.

பார்த்ததும் நம் மனதை மயக்ககூடியது ரோஜாப்பூக்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது இல்லியா? ஆனால் பார்த்ததும் ஆசை படுபவர்கள் வளர்க்க நினைத்து வாடிவிடுவார்கள். காரணம் சுலபமாக வளர்த்துவிட முடியாது என்ற கவலையில் சிலர் செடியே வாங்குவது கிடையாது. ஆனால் சில நுணுக்கங்களை தெரிந்துகொண்டால் யார்னாலும் சுலபமாக வளர்த்து அதிக பூக்களை தங்கள் வீட்டிலும் பார்க்கமுடியும். முறைகளை பார்போம் .

நர்செரிஇல் செடிகளை வாங்கும்போது கவனிக்கவேண்டியவை:

மிகவும் முக்கியமானது இதுதான். முதலில் செடி வாடாத விதத்தில் ஒட்டு ரகமாக இருக்க வேண்டும். சிலர் ரோஜா குச்சிகளை வைத்து பதியன் செய்து வைத்திருப்பார்கள் அதை வாங்கவே கூடாது. செடி ஒட்டு ரகமாகவும், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றியும், ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகளுடனும், பூவுடனும் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும்.

செடி நடும்போது கவனிக்க வேண்டியவை:

தொட்டியில் நடுவதாக இருந்தால் இரண்டு நாளுக்கு முன் அதில் நீர் ஊற்றி ஊற விடவேண்டும். செடியும் வாங்கி இரண்டு நாள் பிறகு தான் நட வேண்டும். நம் வீட்டு temparature க்கு அப்போதுதான் set ஆகும். பின் தொட்டி யின் உள்ளே சிறு கற்களை கொஞ்சம் போடவேண்டும் இதனால் அதிகபடியான நீர் வெளியேறிவிடும். செடியும் அழுகாமல் இருக்கும். பின்னர் ஒரு பங்கு மணல், ஒரு பங்கு செம்மண், ஒரு பங்கு ஆடு மாடு இரண்டின் கழிவு உரம் இவை மூன்றும் நன்கு கலக்க வேண்டும். பின் தொட்டியில் போட்டு செடி ஐ கவரில் இருந்து எடுத்து சரியாக வைத்து மண்ணை அணைக்க வேண்டும்.

18 comments:

thornthu rojaavai valara vidungal. vaazhathukkal.

 

மிக நல்ல பதிவு!! நீங்கள் சொல்லியபடி முயற்சி செய்து பார்க்கிறேன்,நன்றி!!

 

thank you menagasathia. intha pathivin thodarchiai thodarnthu manathodu mattum entra blog il padiungal. best wishes.

 

உபயோகமான பதிவு கௌசல்யா. எனக்குச் செடிகள்ன்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா இங்கே வந்ததும் அதைப் பற்றிய விபரங்கள் சரியா தெரியாததால ஒண்ணும் பண்ண முடியல. இது மாதிரி டிப்ஸ் நிறைய குடுங்க.

 

வாங்க விக்னேஸ்வரி. விவரங்களை கேளுங்கள் சொல்கிறேன். இனி தொடர்ந்து தோட்டகலை பற்றி எழுத முயற்சிக்கிறேன். நன்றி

 

அருமையாக சொல்லி இருக்கீங்க.நானே செடி வளர்ப்பது பற்றி ஒரு பகுதி ஆரம்பிக்கணும் என்று நினைத்திருந்தேன்,எனக்கு ரொம்ப இண்ட்ரெஸ்ட் நான் ஒரு வேளாண்பட்டதாரி,சந்தேகம் மட்டும் கேட்டிட வேண்டாம்,அனுபவப்பாடம் தான் சிறந்தது,ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதல்லோ !1989 -ல் முடித்துவிட்டு அந்தப்பக்கம் திரும்பி கூட பார்க்கலை.நிறைய ஆதங்கம் எனக்கு.

 

அப்படியே முட்டை ஓடுகள் போட்டால், ரோஜா செடி நன்கு வளருமாம்.. நல்ல பயனுள்ள பதிவு.நோட் பண்ணிக்கிறேன்..

நன்றி..

 

நன்றி பிரகாஷ், நிறைய முறைகள் இருக்கிறது. இனி தொடர்ந்து இன்னும் அதிக விதங்களை பற்றி பகிர்கிறேன். வருகைக்கு நன்றி.

 

நேற்று பின்னூட்டமிட்டதாக நினைவு.என்ன ஆச்சு.

 

மிக்க நன்றி தோழி. என்னுடைய நிறைவேறாத ஆசை அக்ரி படிக்கவில்லையே என்பதுதான். உங்கள் மேல் கொஞ்சம் பொறாமைதான் நான் படிக்காததை நீங்கள் படித்திருப்பதால்!
விருப்பம் இல்லாமல் தான் MA படித்து வைத்தேன். ஆனால் செடிகள் மேல் உள்ள காதல் எப்பவுமே குறையாது தோழி.
முதல் முறையா ப்ளாக் எழுதினபோது விவரம் தெரியாமல் சாதாரணமாக எழுதிவிட்டேன். இன்னும் கூட தெளிவாக எழுதி இருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. உங்களைபோல் சிலரும் இன்னும் தொடர்ந்து எழுதுங்கள் என்று சொல்கிறார்கள்.

அதனால் வாசல் ப்ளாகில் தோட்டகலை தொடர்பாக தொடர்ந்து எழுதுகிறேன். எங்கள் வீட்டு தோட்டத்தை படம் எடுத்து போட வேண்டும் என்றும் உள்ளேன். அந்த எண்ணம் உங்கள் பின்னூட்டத்தை பார்த்ததும் முடிவாக மாறிவிட்டது. நன்றி தோழி.

 

நல்ல பதிவு...மரங்கள் எப்படி வளர்க்க வேண்டும்
பதிவு போடுங்கள்

 

ஹை எனக்கும் செடிவளர்க்க கொள்ளைப்பிரியம் .
அதுவும் பூக்கள்ன்னா கேட்கவேணுமா. நல்லதொரு பதிவு..

 

அப்பா...வலையுலகில் தான் எத்தனை வித விதமான பதிவுகள்....நல்ல பதிவு...தேவையான பதிவும் கூட...

 

Set the RSS feed settings in your blogger...

 

ரொம்ப அழகா அழாகான ரோஜாவைப்பற்றி எழுதிருக்கீங்க ..நன்றி .

 

அருமையாக சொல்லி இருக்கீங்க. நல்லதொரு பதிவு.

 

சௌந்தர்...

அன்புடன் மலிக்கா...

ராச ராச சோழன்...

Gayaththri...

சே குமார்...

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வருக.

 
கோமதி

கூகுளே மூலமாக உங்கள் தளத்திற்கு வந்தடைந்தேன். தோட்டக்கலை பற்றி உங்கள் தளத்தில் வாசித்த்தேன். ஆனால் இப்போது ஏன் எழுதுவதில்லை.

தோட்டக்கலை பற்றி அறிய ஆவலாக உள்ளேன். உங்கள் பதிவுகள் எனக்கு பயனுள்ளதாக உள்ளன. தோட்டக்கலை பற்றி ரோஜா செடி வளர்ப்பு பற்றி மேலும் எழுதவும். இது என் வேண்டுகோள்.

இப்போது ரோஜா செடிகள் வாங்கி வைத்து உள்ளேன். உங்கள் யோசனைகள் எனக்கு உபயோகப்படும். தொடர்ந்து ரோஜாக்கள் பற்றி எழுதவும்.

நன்றி.