வாசலுக்கு வரவேற்கிறேன்

இந்த வாசலுக்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.   நண்பர்களும் , தோழியரும் தோட்டம் அமைப்பது தொடர்பாக தொடர்ந்து எழுத சொன்னதின் பேரிலும் கவிதைகள் எழுத சொன்னதின் பேரிலும் இந்த தளத்திலும் தொடர்ந்து எழுதலாம் என்று உள்ளேன்.  


எனது பிற விருப்பங்களான சமையல், கலர் மீன் வளர்ப்பது, லவ் பேர்ட்ஸ் வளர்ப்பது, நாட்டு கோழி தவிர பிற இன கோழிகள் (வான் கோழி, கினி கோழிகள்) வளர்ப்பது, வீட்டிலேயே சாப்பிடும் மீன் இனங்கள் வளர்ப்பது, நாய் வளர்ப்பது எப்படி என்பதை பற்றியும் பகிர்ந்து கொள்ளலாம் என்று விரும்புகிறேன்.


உங்களின் ஆதரவை பொறுத்தே என் பதிவுகள்  வளரும் என்பதையும் அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.  
                                                                     *********
மைக்ரோவேவ் சமையல்  


இஞ்சி தொக்கு


தேவையான பொருட்கள்:

 இஞ்சி------------------  : 5 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் :  5 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய்----  :  1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தேங்காய் ------------  :  1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கி வறுத்தது)
கடுகு ------------------  :  1 டேபிள் ஸ்பூன் 
வத்தல் ---------------  :   2
புளி தண்ணீர் -------  :   ஒரு கப்
தனியா தூள் -------   :   ஒரு டீஸ்பூன் 
சீரக தூள் -------------  :   கால் டீஸ்பூன் 
வெந்தயம் -----------  :   அரை டீஸ்பூன் 
கருவேப்பில்லை --  :   ஒரு கொத்து
உப்பு --------------------  :   தேவையான அளவு 
                                                                 **************
செய்முறை :

மைக்ரோ பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிள்ளிய வத்தல், தனியா,  சீரகம் சேர்த்து பொன்னிறமாகும் வரை (2 or 3 minutes ) வைத்து  எடுத்து அதனுடன் மஞ்சள்  தூள், தண்ணீர்  சேர்த்து மிக்ஸ்யில் அரைக்கவும்.

பின்னர் மைக்ரோ பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய் , வெந்தயம் , கருவேப்பில்லை மட்டும் போட்டு இரு நிமிடம் கழித்து எடுக்கவும் பின் அதில் உப்பு, இஞ்சி, வெங்காயம்,  அரைத்த மசாலாவையும் போட்டு இரண்டு அல்லது மூணு நிமிடம் வைத்து எடுக்கவும்.  எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது சிறிது தண்ணீர் விட்டு இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.  பிறகு புளி தண்ணீர், உப்பு, தேங்காயை  போட்டு கெட்டியாகும் வரை 5 அல்லது 7 நிமிடம் கழித்து  எடுக்கவும்.

இந்த முறையை மைக்ரோவேவ் இல்லாதவர்கள் சாதாரணமாகவும்  செய்யலாம்.
விருப்பத்தை பொறுத்து இந்த அளவுகளை கூட்டி கொள்ளலாம்.  ஒரு வாரம் வரை கூட  கெட்டு போகாது.  இஞ்சி ஜீரணத்துக்கு நல்லது என்பதால் இதை செய்து வைத்து கொண்டோம் என்றால் தினமும் உணவில்  கொஞ்சமாக சேர்த்து கொள்ளலாம்.

                                                           ******************

டிப்ஸ்

ஹோட்டல் சாம்பார் போல் மனமும் ருசியும் நம் வீட்டு சாம்பாரும் இருந்தால் நல்லா இருக்குமே இன்று நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயன்படும்.  

ஒரு துண்டு தேங்காயை நன்கு துருவி அதனுடன், அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு அதில்  இதை நன்கு வறுத்து மிக்ஸ்யில் அரைத்து 
கொள்ளவும்.  சாம்பார் செய்து முடித்து இறக்க போகும் முன் இந்த அரைத்த விழுதை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.  இதோ  ஹோட்டல் சாம்பார் ரெடி...
                                                                 ***************


வருகைக்கு நன்றி, தொடர்ந்து வாங்க..........!



9 comments:

todarnthu eluthungal.. engal varaverpu atharavu undu

 

எப்பவும் போல நல்ல பதிவு அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

 

வாழ்த்துகிறேன், நிறைய எழுதுங்கள் வரவேற்கிறேன்....!!

 

//விருப்பத்தை பொறுத்து இந்த அளவுகளை கூட்டி கொள்ளலாம். ஒரு வாரம் வரை கூட கெட்டு போகாது. இஞ்சி ஜீரணத்துக்கு நல்லது என்பதால் இதை செய்து வைத்து கொண்டோம்//

 

LK...

இந்த வாசலுக்கு வந்து என்னை வாழ்த்தியதுக்கு மகிழ்கிறேன் கார்த்திக். :))

 

சசிகுமார்...

வாழ்த்துக்கு நன்றி சசி

 

jothi...

thanks for coming friend.

 

நல்ல டிப்ஸ் கொடுத்து இருக்கிங்க, நன்றி!

 

டிப்ஸ்

ஹோட்டல் சாம்பார் போல் மனமும் ருசியும் நம் வீட்டு சாம்பாரும் இருந்தால் நல்லா இருக்குமே இன்று நினைப்பவர்களுக்கு இந்த டிப்ஸ் பயன்படும்.////

இதுக்கு ஏதும் டிப்ஸ் தரணுமா?