வீட்டு தோட்டம்


சிலர்  என்னிடம் வீட்டில் சின்னதாக ஒரு தோட்டம் போட ஏதாவது யோசனை சொல்லுங்கள் என்று கேட்டு இருந்தார்கள்.  மாடி வீடு  அல்லது அப்பார்மென்ட் மாதிரியான வீடுகளில்,   இருக்கும் கொஞ்ச  இடத்திலும் நம் சமையல் அறையில்  இருப்பதை வைத்தே, கண்ணுக்கும் மனதுக்கும்  குளிர்ச்சியாக செடிகளை வளர வைக்கமுடியும்.  கொஞ்சம் பொறுமையும், அதிகமான விருப்பமும் இருந்தாலே போதும் வீட்டை சுற்றி பசுமை சூழ செய்து விடலாம்.

சில விவரங்கள் நான் ஏற்கனவே கூறியதுதான், இருப்பினும் இங்கே மறுபடியும் விளக்குவது உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

வீட்டில் மண்தரையில் செடிகள் போட இடம் இல்லாதவர்கள் கவலை பட வேண்டாம். மண் தொட்டி, சிமென்ட் தொட்டி இல்லை என்றாலும் பரவாயில்லை, நல்ல நிலையில் உள்ள பிளாஸ்டிக் சாக்கே போதுமானது.  தொட்டிகளை வாங்கியதும் அதில் தண்ணீர் தெளித்து ஓர் நாள் முழுவதும் ஊற விடுங்கள். சாக்கை வெளி பக்கமாக நன்கு சுருட்டி அல்லது மடித்து பாதி சாக் அளவு  ரெடி பண்ணி வைத்து கொள்ளுங்கள்.

செடிகள் வளர்க்க செம்மண் சிறந்தது என்றாலுமே எல்லா இடத்திலும் அந்த மண் கிடைப்பது இல்லை. ஆகவே நீங்கள் எடுக்ககூடிய மண்ணையும் வளபடுத்த சில முறைகளை கையாண்டால் போதும்.  முதலில் மண்ணை மொத்தமாக தரையில் கொட்டி அதில் உள்ள கள், குச்சிகளை எடுத்து போட்டு விட்டு அதனுடன் காய்ந்த சாணம் (இல்லை என்றாலும் பரவாயில்லை ) கிடைத்தால் தூள் செய்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.

வேப்பமரம் வீட்டின் அருகில் இருந்தால் அதன் இலைகளை (காய்ந்த அல்லது பச்சை) முடிந்தவரை சேகரித்து தொட்டி , சாக்கில் பாதி அளவு போடுங்கள் அதன்பின் மண்ணை
போட்டு நிரப்புங்கள்.  இலை அப்படியே மக்கி உரமாகி விடும் மற்ற இலைகளும் போடலாம் ஆனால் வேப்பிலை மிக மிக சிறந்தது.  இதன் கொட்டைகளை சேகரித்து உடைத்து தூளாக்கி  போடலாம், வேறு வேதி உரங்கள் ஏதும் தேவை இல்லை.  செடிகளும் நன்கு செழித்து வளரும்.

இப்போது நமக்கு மிகவும் அவசியமான செடிகளை பற்றி மட்டும் பாப்போம். தக்காளி, கத்தரி, பாகற்காய், புதினா, கீரை , கொத்தமல்லி, பச்சை மிளகாய் , இவைகளுக்கு தேவையான விதை என்று வேறு எங்கும் தனியாக தேடி போக வேண்டாம் என்பது ஒரு வசதி.

புதினா, கீரை  ---------- நாம் உபயோகித்தது போல் மீதம் இருக்கும் அந்த தண்டுகளை மட்டும் சேகரித்து நல்லதாக பார்த்து எடுத்து அதை அப்படியே மண்ணில் ஊன்றி வைக்க வேண்டும் .கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும் , பின் தண்ணீர் தெளித்து விடுங்கள். பொன்னாங்கண்ணி கீரையையும் இந்த முறை படி வளர்க்கலாம்.

கொத்தமல்லி--  வாங்கும் மல்லி வேருடன் இருந்தால் மீண்டும் தளிர்க்க  வைக்க முடியும் , கட் பண்ணி எடுத்தது போக இருக்கும் வேர் பகுதியை அப்படியே மண்ணில் புதைத்து வைத்து விடுங்கள். பின் தண்ணீர்  விடுங்கள். தண்டு கீரையை  வேருடன் தான் விற்பார்கள் என்பதால் அதையும் இந்த முறையில் மறுபடி வளர்க்க முடியும்.

தக்காளி,கத்தரி,பாகை --------- கடையில் காய்கறி வாங்கும்  போதே இரண்டு அல்லது மூன்றை நன்கு  பழுத்ததாக வேண்டும் என்று கேட்டு வாங்கி கொள்ளுங்கள். பின் அதன் தோலை எடுத்து விட்டு விதைகளை மட்டும் ஒரு பேப்பரில் போட்டு வெயிலில் காய வைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.   சாணி கிடைத்தால் அதை தண்ணீரில் கரைத்து அதில் விதைகளை ஒரு நாள் ஊற வைத்தால் நல்லது, இல்லைஎன்றாலும் பரவாயில்லை.

பிறகு தக்காளி, கத்தரி விதைகளை கொஞ்சம் எடுத்து அப்படியே தொட்டியில் விதைத்து விடுங்கள்.  கொஞ்சம் வளர்ந்த பின்னர் தனியாக கன்றுகளை எடுத்து சாக்கு, தொட்டியில் நட்டு  விடுங்கள், தண்ணீர் விடுங்கள் . அவ்வளவுதான்.

பச்சை மிளகாய்க்கு, மிளகாய் வற்றலில் இருந்து விதைகளை எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது மழை காலமாக இருப்பதால் செடிகளை நட இதுவே உகந்த  நேரம். வாரத்துக்கு ஒரு முறை சுற்றி இருக்கும் மண்ணை மட்டும் லேசாக கிளறி விடுங்கள்.

அக்கறையும், கவனமும் இருந்தால் வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும்.

பிரெஷாக உருளைக்கிழங்கு நம் வீட்டிலா...?  எப்படி.....?   பதிலும்,  விளக்கமும்  அடுத்த பதிவில்....!!

இன்னும் வளரும்.........    



 

22 comments:

அருமையனா பதிவு வீட்டில் செடி வளர்க்க விரும்புவருக்கு இது உதவும். நிறைய எழுதுங்கள் :))

 

//அக்கறையும், கவனமும் இருந்தால் வேதி உரம் இல்லாத , பூச்சி மருந்து போடாத காய்கறிகளை நம் வீட்டில் இருந்தே பெற முடியும்.//

good advise...நல்ல பகிர்வு..தேவையான பதிவு..

 

நல்ல பதிவு வீட்டில் செடி வளர்ப்பது மிகவும் நல்ல விசயம் தொடர்ந்து டிப்ஸ் தரவும்

 

நிச்சயம் பயனுள்ள பதிவு ...!!
வாழ்த்துக்கள் அக்கா ...!! உங்களது இன்னொரு வலைபூவினையும் பார்த்தேன் அருமை ..!!

 

அருமையாச் சொல்லித் தாறீங்க கௌசி.சிரமப்பட்டாம சந்தோஷமா முயற்சிக்கலாம்.நன்றி

 

சௌந்தர்...

கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன். நன்றி.

 

கோவை குமரன்...

வருகைக்கு நன்றி .

 

ப. செல்வகுமார்...

முதல் வருகைக்கு நன்றி சகோதரா. தொடர்ந்து வாருங்கள்

 

ஹேமா...

//அருமையாச் சொல்லித் தாறீங்க கௌசி.சிரமப்பட்டாம சந்தோஷமா முயற்சிக்கலாம்.நன்றி//

தோட்டவேலை என்றதும் சிரமம் என்று எண்ணி அதில் பெரும்பாலும் யாரும் ஈடுபடுவது இல்லை. அந்த எண்ணத்தை மாற்றி பலரும் வீட்டில் சிறிய அளவிலாவது தோட்டம் அமைக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பமே.

வருகைக்கு நன்றி தோழி.

 

ரொம்ப அழகா, அறிவா சொல்லி இருக்கீங்க..
கலக்கிடீங்க போங்க,..

நிஜமா ரொம்ப உபயோகமா இருக்கிற மாதிரி சொல்லி இருக்கீங்க ..
வாழ்த்துக்கள்

நிறையா சொல்லுங்க , கேட்க நிறையா பேரு இருக்கோம் ..

:)

 

தேவையான பதிவு, செயற்கையான உணவு உலகில், இயற்கையான உணவு விரும்பும் ஒவோருதரும் முயற்சிக்கலாம்

 

ந‌ன்றாக‌ ஐடியா கொடுத்துள்ளீர்க‌ள்.

 

வாவ், இவ்வளவு ஈசியா... நன்றி கௌசல்யா. நான் முயற்சிக்கிறேன்.

விக்னேஷ்வரி.

 

Tanvi...

nanri விக்னேஷ்வரி.

 

விஜய்...

//நிறைய சொல்லுங்க , கேட்க நிறைய பேரு இருக்கோம் ..//

கண்டிப்பாக , உங்களின் வருகைக்கும், ஆர்வத்திற்கும் மகிழ்கிறேன்.

நன்றி friend.

 

வடுவூர் குமார்...

உங்களின் வருகைக்கு நன்றி frined.

 

jothi...

உண்மைதான், நன்றி நண்பரே.

 

எளிய வழிகளை எளிய சொற்களில் சொல்லி அசத்தி விட்டீர்கள். நன்றி ..

 

அருமை,ஆஹா தோழி தொடர்ந்து எழுதுங்கள்,நானும் நினைவு படுத்தி கொள்கிறேன்.

 
கோமதி

இணையத்தில் தோட்டம் போடுவது பற்றி செய்திகள் தமிழில் எதுவும் இல்லை.

உங்கள் இடுகைகள் மிகவும் பயன்படும். தயவு செய்து தொடர்ந்து எழுதவும். நன்றி.

 

இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழ்கண்ட முகவரியில் வந்து பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/2011/10/4102011.html