பெண்மை ??



















கவிதையில்லை...?!


அன்று,  
மூணாறு  தேனிலவு சென்ற இடத்தில் கணவன் கொலை ,
தனது காதலனுடன் வாழவேண்டும் என்பதற்காக
ஒன்றும்  அறியாத கணவனை கொன்றாள்....


நேற்று, 
சட்டம் படித்தவள் , காதலன் கரம் பிடிப்பதற்காக,
திருமண நாளை எதிர்பார்த்து ஆசையுடன் காத்திருந்த
அப்பாவியை, கண் முன்னால் கொன்று ரசித்தாள்....


இன்றோ,  
தன்னை ஏமாற்றிய ஆண் மகனை பழிவாங்க
அவனது இளந்தளிர் வாரிசை இரக்கமின்றி
கழுத்தை நெரித்து கொன்று பழி (பலி) வாங்கினாள்  ...


என்னவாயிற்று என் இனத்திற்கு ?
மென்மை, தாய்மை, இனிமை, அன்பு, பாசம், கருணை, 
இரக்கம் இவற்றின் மொத்த உருவம் தானே பெண்...! 
இந்த பெண்மையில்  மண் விழுந்தது எப்போது ??


பெண் தான் நினைத்தது நடக்க வேண்டும் 
என்ற வீம்பிற்காக 'எந்த நிலைக்கும் இறங்குவாள்'
அதற்கு உதாரணம் தானா இவை மூன்றும்?!
இருக்கட்டும்,  இதுவே 'கடைசி உதாரணமாக' என்ற 
நப்பாசையில் புலம்பும் அதே இனத்தில் 'ஒன்று'!


***************************
.   

32 comments:

பெண்கள் நாட்டின் கண்கள்..எந்தன் இக்கால பெண்கள் இப்படி மாறிவிட்டனரோ தெரியவில்லை. அதுவும் அந்த கடைசி செய்தி மனம் பதறுகிறது

 

//பெண் தான் நினைத்தது நடக்க வேண்டும்
என்ற வீம்பிற்காக 'எந்த நிலைக்கும் இறங்குவாள்'
அதற்கு உதாரணம் தானா இவை மூன்றும்?!
இருக்கட்டும், இதுவே 'கடைசி உதாரணமாக' என்ற
நப்பாசையில் புலம்பும் அதே இனத்தில் 'ஒன்று'!//

:))

 

ஒன்றும் ஆகவில்லை கெளசல்யா....! பெண் இனம் மிளிர்கிறது மேலும் அழகாக இருக்கிறது. ஆங்காங்கே ஒரிரு சம்பவங்கள் நடப்பதற்கு காரணம் வளர்ப்பும், புறச் சூழலும் காரணமாயிருக்கிறது. இது பெண் என்று மட்டும் மட்டுப் படுத்தக்கூடிய விசயம் இல்லை. மனித இனத்திலேயே முரண்பாடுகள் நிறைந்த மனிதர்கள் இருக்கவும் செய்கின்றனர்.


அதனால் முழுதாய் என்னால் விரக்தி அடைய முடியவில்லை.......! மற்ற படி ஒரு சிலர் திருந்த வேண்டிய வாய்ப்பை உருவாக்க வேண்டியது...... நாம்தான்...!

 

பெண் தான் நினைத்தது நடக்க வேண்டும்
என்ற வீம்பிற்காக 'எந்த நிலைக்கும் இறங்குவாள்'
அதற்கு உதாரணம் தானா இவை மூன்றும்?!
இருக்கட்டும், இதுவே 'கடைசி உதாரணமாக' என்ற
நப்பாசையில் புலம்பும் அதே இனத்தில் 'ஒன்று'!


...... எம்மாடி...... நச்னு சொல்லிட்டீங்க.... ம்ம்ம்ம்.....
தேவா இப்போதான், உங்கள் பதிவை பற்றி சொன்னார்.... ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்.
Follow பண்றேன். :-)

 

சில பெண்கள் ஏன் இப்படி மாறினார்கள் தெரியவில்லை

 

அந்த நியூஸ் கேட்டதும் மனசு தாங்க முடியவில்லை..

 

LK...

//அதுவும் அந்த கடைசி செய்தி மனம் பதறுகிறது//

மிக கொடுமை, எப்படித்தான் மனம் வந்ததோ?? :((

 

கோவை குமரன்...

நன்றி சதீஷ்.

 

//மனித இனத்திலேயே முரண்பாடுகள் நிறைந்த மனிதர்கள் இருக்கவும் செய்கின்றனர்.//

பொதுவாக மனிதர்கள் என்று இந்த விசயத்தில் சொல்வது சரி இல்லை, பெண்கள் என்றாலே தாய்மை தான் , இதில் ஆண்களையும் ஒன்று சேர்க்க கூடாது என்பது என் கருத்து. அந்த தாய்மை ஏன் இப்படி மாறியது என்பதுதான் என் ஆதங்கம்.

//மற்ற படி ஒரு சிலர் திருந்த வேண்டிய வாய்ப்பை உருவாக்க வேண்டியது...... நாம்தான்...!//

அது எப்படி நாம வாய்ப்பை ஏற்படுத்த முடியும்? இந்த மாதிரி விசயத்தில் ஒவ்வொருத்தருக்கும் சுய ஒழுங்கு, சுய கட்டுப்பாடு என்பது வேண்டும். தனது வாழ்க்கையை எப்படி அமைக்கணும் என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும், நல்லதை பார்த்து சாப்பிட தெரிந்தவர்களுக்கு , கேட்டதை தவிர்த்து வாழவும் தெரியவேண்டும்.

சரியா தேவா?

 

Chitra...

உங்களை இந்த வாசலுக்கு அழைத்துவந்த நண்பருக்கும் வந்த தோழிக்கும் நன்றி. வந்ததும் follow பண்ணுவதற்கு மகிழ்கிறேன்.

 

சௌந்தர்...

ஒரு கையில் விரல்கள் ஐந்தும் ஒன்றுபோல் இல்லையே சௌந்தர்.

 

ரமேஷ்...

உங்களின் முதல் வருகைக்கு நன்றி. பலரின் இதயங்கள் பதறித்தான் விட்டன...:((

 

நல்லவர்கள், கொடியவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். இந்த பிரிவு பாவப்பட்டவர்கள் அந்த பிரிவு அக்கிரமக்காரர்கள் என்ற தவறான வழிகாட்டுதல்களினால் தான் சட்டமும் சரிசமமாக இல்லாது போனது.
என்னத்த சொல்ல.....

:(

 

கெளசல்யா....

நான் சொல்லவந்தது...ஆண் பெண் மட்டும் இல்லை இந்த உலகின் படைப்பில் விதிவிலக்குகள் இருக்கின்றன்.....இந்த விதிவிலக்குகளுகு காரணம் வளரும் முறையும், புறச்சூழலும் போதிக்கப்படும் விசய்ங்களும்தான்...

ஒரு மனிதனின் செயல்பாட்டினை குணாதிசியத்தினை நிர்ணயிப்பது....குரோமோசோம்கள் குரோம்கள் ஜீன்களின் வழியே கொணர்ப்படுகிறது....ஆனால் இந்த ஜீன் வழித்தாக்கத்தைவிட புறச்சூழலின் தாக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகம்.....குண்டுவெடிப்புகளுக்கு நடுவே வாழ்ந்து தினம் 100 பேர் சாவதைப் பார்த்தவனுக்கு இறப்பு ஒரு பெரிய விசயம் அல்ல...காரணம் புறச் சூழல்.....புறச்சூழலுக்கு காரணம் சுற்றியுள்ள மனிதரின் இயல்பு.....


எறும்பை கொன்றால் கூட பாவம் என்ற புறச்சூழல் உள்ள இடத்தில் ஒரு ஈ செத்தால் கூட அந்த மனிதன் தூங்கமாட்டான்....காரணம் அவனின் பயிற்றுவிப்பு மட்டும் எடுத்துக்கொண்ட கற்பிதம்.....

ஆண், பெண் என்று நாம்தான் பிரிக்கிறோம்....இயற்கையின் முன் அதுவும் ஒரு படைப்பு....ஒவ்வொன்றூம் ஒவ்வொரு வகையில் சிறப்பு.... நாம் தான் ஒன்றை ஒன்றோடு ஒப்பிட்டு எப்போதும் குழப்பத்தில் இருக்கிறோம்


தவறு செய்யும் அனைவரும் அவர் அவருக்கு ஒரு நியாயம் வைத்து இருக்கிறார்கள்.... நாம் நமது கருத்தோடு ஒப்பிட்டு சரி தவறூ என்று சொல்கிறோம். இப்படி அவர்கள் ஏதாவது ஒன்று செய்வதற்கு புறச்சூழலும் பழகி வளர்ந்த விதமும் தான் காரணம்......இது தவறு என்றால்....புறத்தில் இருக்கும் மனிதர்கள் அதாவது சுற்ற்யிருப்பவர்கள் நல்ல ஒரு சமுதாயத்தின் அங்கமாக இருக்க வேண்டும்....



எல்லோரும் சேர்ந்து உண்டாக்குவதுதான் சூழ்னிலை நல்ல மனிதன் உருவாவதும் சமுதாயம் உருவாவதற்கும் எல்லோருமே காரணம்...... தனியே அவரே திருந்த .....சுற்றி உள்ள புறச்சூழல் அவசியம்.....


தண்ணியே குடிக்காதவன்..சாக்டையை அள்ளி கூட குடிப்பான்...அவனிடன் என்ன சுயக்கட்டுப்பாடு எதிர்பார்ப்பீர்கள்....! தண்ணீர் கிடைக்க வழி செய்ய நான் சொல்கிறேன்.. நீங்கள்....கட்டுப்பாடாய் இருக்க வேண்டும் என்கிறீர்கள்....



அப்போ....வர்ட்டா!

 

ஒரு சில் இழிந்த்வர்களுகாக் பெண்மையை குறை கூறாதீர்கள்.அது அவர்களின் பாவபட்ட் செயல் ..ஆத்திரம் ....அவசரம்.... மனோ வியாதி.

 

விபரீதமான ஆசைகள் விபரீதத்தில் தான் முடியும் என்பதற்கு பூவரசியின் வாழ்க்கை ஒரு கொடுமையான எடுத்துக்காட்டு. இதற்காக எந்த முன்முடிவுகளுக்கும் செல்லத்தேவையில்லை! இதையும் கடந்து செல்வோம்.

 

//பெண் தான் நினைத்தது நடக்க வேண்டும்
என்ற வீம்பிற்காக 'எந்த நிலைக்கும் இறங்குவாள்'
அதற்கு உதாரணம் தானா இவை மூன்றும்?!
இருக்கட்டும், இதுவே 'கடைசி உதாரணமாக' என்ற
நப்பாசையில் புலம்பும் அதே இனத்தில் 'ஒன்று'!//


உங்கள் புலம்பல் சரியே....
அதுவே நனவாகட்டும்.

 

வார்த்தை...

ஆமாம்ங்க வருகைக்கு நன்றி.

 

நிலாமதி...

ஆத்திரம், அவசரம்.....பெண்மையை மறக்கடித்து விட்டதே என்பதே என் புலம்பல்.

நன்றி தோழி.

 

சேட்டைக்காரன்...

இதுவும் கடந்து போகும்...நம்புவோம். நன்றி.

 

சே.குமார்...

அதுவே நனவாகட்டும்...நன்றி

 

கௌசி...சில பெண்கள் விதிவிலக்கு.அதற்கு வேதனைப்பட மட்டுமே முடிகிறது எம்மால்.
வெட்கப்படவும் தெரியாத ஜென்மங்கள் அவர்கள்.

 

உங்களோடது நியாயமான ஆதங்கம்... (அதுகளை சொல்வதற்கு ஏதுமில்லை)

 

சகோதரி உண்மைதான், வெட்கி தலைகுனிந்து போகிறோம் இது பற்றி சொன்னாலே பழமைவாதி என்கின்றனரே!

 

ஹேமா...

//கௌசி...சில பெண்கள் விதிவிலக்கு.அதற்கு வேதனைப்பட மட்டுமே முடிகிறது எம்மால்.
வெட்கப்படவும் தெரியாத ஜென்மங்கள் அவர்கள்.//

உண்மைதான் தோழி. நன்றி

 

சி.கருணாகரசு...

//உங்களோடது நியாயமான ஆதங்கம்...//

வெளியில் சொல்ல இயலாத பலரின் ஆதங்கம் கூட. நன்றி நண்பரே.

 

pinkyrose...

//சகோதரி உண்மைதான், வெட்கி தலைகுனிந்து போகிறோம் இது பற்றி சொன்னாலே பழமைவாதி என்கின்றனரே!//

இதில் பழமை, புதுமை என்ற வாதம் எங்கே வந்தது? அப்படி சொல்பவர்களுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது சகோதரி.

நன்றி.

 

சமூக சிந்தனை உள்ள பதிவு .
நீங்கள் குறிப்பிட்டது போல இதுவே கடைசி உதாரணமாக இருக்கவும் ,அந்த இளம் தளிரின் அம்மாவுக்காகவும் இறைநிலையை வேண்டி
கொள்கிறேன் .

 

priya.r...

உங்கள் வருகைக்கும், வேண்டுதலுக்கும் நன்றி தோழி.

 

//பெண் தான் நினைத்தது நடக்க வேண்டும்
என்ற வீம்பிற்காக 'எந்த நிலைக்கும் இறங்குவாள்'
அதற்கு உதாரணம் தானா இவை மூன்றும்?!//

ரொம்ப அழகாகவும், கோர்வையாகவும் முன் நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டு உள்ளீர்கள்....

பாலும் வெள்ளை, கள்ளும் வெள்ளை... நிறம் மட்டுமே ஒன்று... குணம் வேறு... அது போல் தான்...

எப்போதும் போல், கலக்கல் தான்....

 

R.Gopi...


//பாலும் வெள்ளை, கள்ளும் வெள்ளை... நிறம் மட்டுமே ஒன்று... குணம் வேறு... அது போல் தான்...//

அப்படித்தான் என்று சமாதானம் செய்து கொள்வோம்.... நன்றி நண்பரே

 

unmai unarnthu solli irukkirirgal...