ஏன் ?

  

     எங்கோ தூரத்தில் இருந்து
     உன் நினைவுகளால் ஏன்
     என்னை துரத்துகிறாய்?
     நான் நானாகவே இங்கு
     இருக்கும்போது உனக்குள் எப்படி?
     என்று கடன் பெற்றேன்,
     இன்று திருப்பித்தாவென கேட்க ?
     அழகான என் இதய கண்ணாடியில்
     நீ எறிந்த கல் பட்டு உடைந்து
     சிதறிய சில்லில் என் உருவம்
     காணாமல்  தேடுகிறேன்.
     தேடிக்கொண்டே இருக்கிறேன்.....






                                                        *************





22 comments:

//நான் நானாகவே இங்கு
இருக்கும்போது உனக்குள் எப்படி?//

அதுதானே .... இதற்குப் பெயர்தான் அன்போ ???

அருமையான கவிதை

 

//அழகான என் இதய கண்ணாடியில்
நீ எறிந்த கல் பட்டு உடைந்து
சிதறிய சில்லில் என் உருவம்
காணாமல் தேடுகிறேன்.
தேடிக்கொண்டே இருக்கிறேன்.....//

விரைவில் கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்(just for fun)..kavithai super

 

ரொம்ப அருமைய எழுதறீங்க கௌசல்யா ..

 

eppadinga ippadi .... ?
Very nice :)))

 

சிதறிய கண்ணாடியில் பல முகங்கள் தெரியும்.. ஆனால் நீங்கள் விரும்பும் உருவம் மனக் கண்ணாடியில் சிதறிவிட்டது அதனால்தான் மறைந்துவிட்டது..

 

அருமையான கவிதை.

 

காதல் ஒரு உணர்வு....அது என்ன வேண்டுமானாலும் செய்யும்...! எங்கிருந்து வேண்டுமானாலும் செய்யும்.... நினைவுகளால் துரத்தும்....சுற்றும் உலகை அப்படியே நிற்க வைக்கும்.....வாவ்....! உண்மைதான் கெளசல்யா... நீங்க சொல்றது...

என்றோ பெற்ற கடன்....திருப்பி கொடுத்துதான் ஆக வேண்டும் என்பதை கோபமாக வெளிப்படுத்தியிருப்பது அருமை....

சிதறிய சில்லில் ....தேடுங்கள்....உருவம் கிடைக்காது....ஆனால் உணர்வு கிடைக்கும் நிச்சயமாய்!

அருமையான உணர்வின் வெளிப்பாடு....வாழ்த்துக்கள் தோழி....!

 

உங்க கவிதை எப்போதும் கலக்கல் தான்//


காணாமல் தேடுகிறேன்.
தேடிக்கொண்டே இருக்கிறேன்.....//

கூகிள் தேடி பாருங்கள் கிடைக்குதா என்று பாப்போம் :)

 

நல்லாருக்கு கவிதை.

 

LK...

ஆமாம்ங்க. :))

 

கோவை குமரன்...

வாழ்த்துக்கு நன்றிங்க.

 

திவ்யாம்மா...

ஏதோ எழுதுகிறேன். நன்றி தோழி.

 

priya.r...

thank u friend.

 

karthick chidambaram...

உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

 

கே.ஆர்.பி.செந்தில்...

அப்படித்தான் போல....நன்றி செந்தில்.

 

சே.குமார்...

நன்றிங்க.

 

//என்றோ பெற்ற கடன்....திருப்பி கொடுத்துதான் ஆக வேண்டும் என்பதை கோபமாக வெளிப்படுத்தியிருப்பது அருமை....//

கோபம் என்று சரியாக கண்டுபிடித்ததுக்கு நன்றி தேவா.

//சிதறிய சில்லில் ....தேடுங்கள்....உருவம் கிடைக்காது....ஆனால் உணர்வு கிடைக்கும் நிச்சயமாய்!//

உண்மைதான்.

வாழ்த்திற்கு நன்றி தேவா..

 

சௌந்தர்...

//கூகிள் தேடி பாருங்கள் கிடைக்குதா என்று பாப்போம்//

அடடா அங்கே தேடாம விட்டுட்டேனே...! இனி தேடி பார்கிறேன் சௌந்தர். நன்றி :))

 

ஜீவன்பென்னி...

ரொம்ப நன்றிங்க...

 

/// தேடிக்கொண்டே இருக்கிறேன்.....///

நல்ல தேடுங்க...., உங்கள மாதிரிதான், ஊருக்குள்ள கொல்லப்பேரு தேடிட்டிருங்காங்க...

 

Jey...

:))) thanks friend.

 

//நீ எறிந்த கல் பட்டு உடைந்து
சிதறிய சில்லில் என் உருவம்
காணாமல் தேடுகிறேன்.
தேடிக்கொண்டே இருக்கிறேன்.....//

சீக்கிரம் கிடைக்க வாழ்த்துக்கள்......

நல்லா எழுதி இருக்கீங்க கௌசல்யா....