வென்றாய் எனை

வென்றாய் எனை இறுதியாய் !!


அன்றில் இருந்து , உன்னை
படிக்கிறேன் விழித்ததும் ,
உன்னை படித்தே உறங்க
செல்கிறேன்....ஏன் விலக்கினேன்,
இன்று ஏன் இணைக்கிறேன்,
புரியவில்லை மனமும் மந்தியாய்
அலைகிறதே ,கிளைதேடி,
அழைத்தேன் நிரந்தரமாய்
அமர எண்ணி....காணவில்லை
உன்னை, நேற்று வரை
விரும்பி, இன்று வெறுக்கிறாயா ?
நட்பாய் நான் கை நீட்ட
எங்கே சென்றாய் ? 
விரும்பி அழைக்கிறேன்....


காலத்தால் மலர்ந்திடும் மலர்கள்
நம் காவிய படைப்பின் புது மலர்கள்...!!



16 comments:

//காணவில்லை
உன்னை,///

nalla thedi paarunga.. angathan engayavathu iruppar .. enga poirukkap porar.

kavithai arumai thozhi

 

:)),உங்களை விட்டு அவர் எங்கே போய்விடுவார்??

//தாம்பத்தியம் பதிவை
தொடரவேண்டும் நான்.
அங்கே 'மனதோடு மட்டும்', வெறும்
மரத்தோடு மட்டும் நிற்கிறது...!!??//

நாங்களும் ஆவலாக காத்துக் கொண்டு இருக்கிறோம்..
அடுத்த பதிவு இதுவாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையில்..

கவிதையும் நல்லாதாங்க இருக்கு.வாழ்த்துகள்

 

உங்களை வென்றவருக்கு வாழ்த்துக்கள்.....

 

வெல்வதை விட விட்டு கொடுப்பவர்களுக்கு சுகம் அதிகம்....! அதனால நீங்கதான்..உண்மையில ஜெயிச்சு இருக்கீங்க..சரியா கெளசல்யா?

நட்பாய் நீங்கள் நீட்டியிருக்கும் கரம் பற்றப்பட்டுதான் இருக்கிறது என்று நினைக்கிறேன்...!

நல்ல கவிதை வாழ்த்துக்கள்!

 

LK...

நண்பரே, கவிதை நன்றாக இருக்கிறது என்றதிற்கு மகிழ்கிறேன். :))

 

கோவை குமரன்...

:))

நேற்று எழுதிய கவிதைக்கும் இங்கேயே கமெண்டா...??

நன்றி குமரன்.

 

சௌந்தர்...

வாழ்த்துக்கு நன்றி. :))

 

dheva...

அப்படியா......??!!

வருகைக்கு நன்றி தேவா.

 

//
காலத்தால் மலர்ந்திடும் மலர்கள்
நம் காவிய படைப்பின் புது மலர்கள்..//

hmm nice lines

 

காதல்+ கலக்கல்= கவிதை... வாழ்த்துக்கள்.

 

சி.கருணாகரசு...

நன்றிங்க

 

//நேற்று எழுதிய கவிதைக்கும் இங்கேயே கமெண்டா...??//

உங்களுக்கு பிடித்த கவிதையையே போ என்று சொல்லும்
அளவிற்கு கோபமாய் இருந்தீர்கள் அதனல் அப்ப no comment

உங்களுக்கு பிடித்த நட்பை வா என்று சொல்லும்
மனநிலையில் அன்பாய் இருப்பதனால் அதற்கும் சேர்த்து
இப்ப comment..

இந்த time-க்கு wait செய்ததும் தவறு இல்லை தானே??

 

நல்ல வரிகள்

 

உங்க பக்கம்தான் வெற்றி கௌசி !

 

சந்ரு...

வருகைக்கு மிக்க நன்றி.

 

ஹேமா...

அப்படியா தோழி...??

நன்றி.