நீ அறிவாயா?




என்ன தெரியும் உனக்கு என்னை பற்றி ?
என்ன தெரியவேண்டும்? சொல்கிறேன் கேள்?


என்னை அழுத்தும் பெருஞ்சுமை எதுவென்று அறிவாயா?
அதன் விலை என்னவாக இருக்கும் நீ அறிவாயா?


செங்கலுடன், கனவையும் சேர்த்து நான் கட்டிய
                                                       என் வீட்டை அறிவாயா?


மொட்டுகளை எண்ணி, தளிர் இலைகளை தொட்டு
                           வளர்த்த பூந்தோட்டம் அறிவாயா?


மரங்களில் என் பெயரை எழுதி , மரத்துடன் என் பெயரும்
                           வளருவதை ரசித்ததை அறிவாயா?


காலணியுடன் வீட்டினுள் நடந்த நாள் மறந்து,
                           மண் தரை அமர்ந்து களித்ததை  அறிவாயா?


மரத்தினடி அமைத்த  கூண்டில் காதல் பறவைகளின்
                           முத்த  சத்தம் கேட்டு வியந்ததை அறிவாயா?


என் இறுதி தூக்கம் அங்கேயே இருக்க எண்ணி, ஆறடி
                           இடம் ஒதுக்கி மரங்களை நட்டதை அறிவாயா?


எனக்காக உருவாக்கிய  அந்த சொர்க்கபுரியை  விரைவில்
                           இழக்க போகிறேனே அதாவது அறிவாயா?


நம்பிக்கை போனதால் என்னை நானே இருமுறை
                           கொலை செய்ய முயன்றதை அறிவாயா?


அந்த எண்ணத்தில் இருந்து என்னை மீட்டெடுத்தது
                           எதுவென்று நீ அறிவாயா?


உயிருடன் இருந்தாகவேண்டுமே என்ற கட்டாயத்திற்காக
                           உணவருந்துகிறேன் அதை அறிவாயா?


என்ன தெரியும் உனக்கு என்னை பற்றி?
                           எல்லாமே கானல் நீராகி போனபின்


அன்பாம்......, நட்பாம்......., கவிதையாம்.......!!







18 comments:

உணர்வுகளை புரிந்து கொள்ளாத நட்பு நட்பல்ல. அருமையனா கவிதை, சோகமும், கோபமும் சம விகிதத்தில்

 

வார்த்தைகளில் வலி தெரிந்தது..
வழியும் பிறக்கும்.. வாழ்த்துக்கள்..

 

அன்பாம்......, நட்பாம்......., கவிதையாம்.......!!//
கோபமான அன்பு....

 

கோவை குமரன்...

நன்றி.

 

சௌந்தர்...

நன்றி.

 

என்ன தெரியும் உனக்கு என்னை பற்றி?
எல்லாமே கானல் நீராகி போனபின்


அன்பாம்......, நட்பாம்......., கவிதையாம்.......!!

நல்ல கேள்வி.

 

அருமையான கவிதை அக்கா ..
இதோ உங்களின் வலைப்பூவை பின்தொடர்கிறேன் ..!!

 

மிகச் சுருக்கமாக,
ஆரம்பித்து முடித்து இருக்கிறீர்கள்,
கொட்டி இருக்கும் வார்த்தைகள் ஆழமாக உணரப்பட்டு இருக்கின்றன,

இழுத்துவரப்பட்ட வார்த்தைகளை அழகாய் அணிவகுத்து நிற்க செய்து இருக்கிறீர்கள்..

இன்னும் நிறையா கவிதைகளை கட்டி இழுத்து வாருங்கள் ..

 

ஜீவன்பென்னி...

உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

 

ப.செல்வகுமார்...

சகோதரனுக்கு நன்றி வருகைக்கும், பின்தொடர்வதற்கும் ...!

 

விஜய்...

உங்களின் வருகைக்கு நன்றி. உங்களின் ரசனைக்கு மிகவும் மகிழ்கிறேன். உங்களின் கவிதைகள் அனைத்தும் மிக பிரமாதம். வாழ்த்துகள்.

 

நான் ஏதும் அறியேன்!
கவிதை கலக்கல்.

 

சி.கருணாகரசு...

உங்களின் வருகைக்கு நன்றி...

 

அறியமுடியவில்லை..........உணரமுடிகிறது!

 

dheva...

உணர்வுக்கு நன்றி.

 

கவிதை உள்ளத்து உணர்வோட இருக்கு.
அருமை கௌசி.

 

ஆஹா....

எதுக்கு இவ்ளோ சோகம்....

இருக்கட்டும், கொஞ்ச நேரம் இதுவும்...

அறுசுவைகளில் கசப்பு அளவுடன் தேவை என்பது போல், இந்த சோகமும் சிறிதளவு, சிறிது நேரம் மட்டுமே இருக்கட்டும்....