தேவதை போல.....!!

   மனம் லேசாய் மிதக்கிறது....
   சூழ்ந்த காற்றில் சுகந்த மணம்
   கண் மூடி முகர்ந்த உடலும் கனமின்றி 
   காற்றாய் மிதக்க...என்னே சுகம்!


   ஒரு கையால் மறுகையை   
   கிள்ளி பார்த்தும், வலி 
   மூளையை சென்றடையவில்லை ?!
   வலி உணரா இன்ப பரவசம்..!!
   மெதுவாய் என்னை சுற்றி,
   விழி திறந்து நோக்க...
   என்னை பற்றியே பலரும்,   
   ஒரு குறையும் இன்றி நிறையே 
   பேசுகின்றனர் ...?!   


   மேளத்துக்கு,   
   சிலர் தாளம் மாறி நடனமாட, 
   ஒலியில் இதய துடிப்பே 
   என் காதில் விழவில்லை..!!  
   மாலைகளும் பூக்களும் என்னை 
   இன்னும் அழகாய் காட்டுகிறது....!!
   தேவதை போல.....!!


   சொல்லவொன்னா மகிழ்ச்சியில்,
   உற்சாக துள்ளலாய் மெதுவாய், 
   சற்றே 
   கீழே பார்க்க,  துணுக்குற்றேன் !!
   மற்றவர்கள்  இரண்டு காலில் 
   நடக்க, 
   நானோ எட்டு கால்களில்...!!??     

   உயிருடன் அவர்கள்..... உயிரற்று  நான்.... !!11 comments:

வித்யாசமான சிந்தனை. இப்படி எழுதவும் மனதில் வலு வேண்டும். வாழ்த்துக்கள் கௌசல்யா

 

உங்கள் எழுத்துக்களுக்கு வலிமை அதிகம்..really great....

 

அவசரமான முடிவு...

 

உண்மையில் இவ்வாறு எழுத L K சொன்னது போல் ,மனதில் வலு வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணிக்க கூடியவர்கள் என்று சிந்திக்க, ஆரம்பித்தாலே,பலரின் மனநிலையில் பல்வேறு மாற்றங்கள்
ஏற்படும். வாழ்த்துகள்.

 

LK...

//வித்யாசமான சிந்தனை. இப்படி எழுதவும் மனதில் வலு வேண்டும். வாழ்த்துக்கள் கௌசல்யா//

ம்....இருக்கலாம்...

 

சௌந்தர்...

//அவசரமான முடிவு...//

அப்படியா சௌந்தர்.....???

 

கோவை குமரன்...

//உங்கள் எழுத்துக்களுக்கு வலிமை அதிகம்..really great..//

நன்றி சதீஷ்...

 

இளம் தூயவன்...

//நாம் ஒவ்வொருவரும் ஒரு நாள் மரணிக்க கூடியவர்கள் என்று சிந்திக்க, ஆரம்பித்தாலே,பலரின் மனநிலையில் பல்வேறு மாற்றங்கள்
ஏற்படும். வாழ்த்துகள்.//

வாழ்க்கையை ரசிக்க தொடங்கிவிடுவோம்......வாழ்க்கையை அந்தந்த நேரத்துக்கு பரிசாக கொடுக்கணும்.....!!

வருகைக்கு நன்றி நண்பரே...

 

// உயிருடன் அவர்கள்..... உயிரற்று நான்.... !!//

பின்னால் வருவதை இப்போதே மகிழ்ச்சியோடு வரவேற்கும் நல்ல ரசனைமிகுந்த கவிதை வரிகள் ...

 

நிச்சயமாய் அதுவும் நமக்கு ஒரு சந்தோஷமான நாளாய் தானிருக்கும். இப்பயே ரெடியாகிடுவோம்!!

 

இந்த வீட்டுக்கு வந்து விட்டு போயிட்டு வரேன் சொல்ல கூடாது