பறிபோகாதவரை....


     இன்றும் நான் உன்னை தேடுகிறேன் !
     நீ இங்கே  இல்லை
     நாம் பகிர்ந்து கொண்ட காதலும் 
     இனிய முத்தங்கள் மட்டும் இருக்கின்றன....!

      
     உனது தோளில் சாய்ந்து 
     கனவு காணவும்
     உன் இதழை சொந்தமாக்கவும்
     உன் குரலில் மயங்கி கிடக்கவும்
     உன்னை அணைத்து கொண்டு 
     விவாதம் செய்யவும்,
     எல்லாவற்றிருக்கும் மேலாக
     உன்னை முழுமையாக
     என்னுடையவளாக்கவும்  
     ஆசைக் கொண்டு முயன்றாலும் 
     முடியாது போய் விட்டது...!..
     இருப்பினும் அன்பை  கொடுக்கவும்
     அன்பை எடுக்கவும்
     எனக்கிருக்கும் உரிமை
     பறிபோகாதவரை.


     நாம் காதல் செய்வோம் .......!!


3 comments:

கவிதை அருமை ... வார்த்தைகள் மிக நன்றாக உள்ளன

 

நல்லா இருக்குதுங்க..வாழ்த்துக்கள்

 

ஆசைக் கொண்டு முயன்றாலும்
முடியாது போய் விட்டது...!..///

என்ன ஆச்சு?????