சுதந்திரம் கூண்டுக்குள்....!!?

    
    
        பல இன்னல் பட்டு அல்லல் பட்டு
       துக்க பட்டு. துயரப்பட்டு,
       ரோச பட்டு, கோபப்பட்டு,
       அடிபட்டு, வதைபட்டு,
       மிதி பட்டு, ரத்த கறைபட்டு,
       இறுதியாய் சிறை பட்டு
       ஊன பட்டு, உயிர் விட்டு 
       இரவில் வாங்கிய
       விடுதலையை, பகலில்
       கொண்டாடகூட வகையற்று
       அச்சப்பட்டு செங்கோட்டையில்
       பலத்த பாதுகாப்பின் நடுவில் 
       கொடி ஏற்றப்பட்டு,
       உரையாற்றுகிறார் பிரதமர்....
       கண்ணாடி கூண்டுக்குள் சிறைபட்டு !!
       அந்த சிறை மீண்டு உரையாற்ற,
       வேண்டும் உண்மையான சுதந்திரம் !
       எப்படி பெறுவது ? என்று பெறுவது ?
       யாரிடம் இருந்து பெறுவது ??
       விடை தெரிந்தால் சொல்லுங்களேன்
       என் உடன்பிறவா சொந்தங்களே.....!!



இதுவும் ஒருவகையில் காதல் கவிதைதான்...என் தேசத்தின் மீதான காதல்.... இன்று சுதந்திர தினம்.......! ஆனால் வாழ்த்து சொல்லகூடிய அளவில் மன மகிழ்ச்சி இல்லையே....என்று பெறுவோம் முழு சுதந்திரம்...,  நம்மை அச்சுறுத்தும் தீய சக்திகளிடம் இருந்து.......??!!



12 comments:

//என்று பெறுவோம் முழு சுதந்திரம்..., நம்மை அச்சுறுத்தும் தீய சக்திகளிடம் இருந்து.......??!!///

அனைவரின் மனதிலும் இதே கேள்விதான்

 

இரவில் வாங்கிய சுதந்திரம் இன்னும் விடியவில்லை..

 

சகோதரி வணக்கம் எத்தனை பட்டு போட்டு இருக்கிறீர்கள் இன்னும் மக்கள் எத்தனை பட்டும திருந்தவில்லையே ????(one sample:mubai bomb plast -still "kazab" is alive ? )
என்று நம் மக்கள் பட்டது போதும் திருந்துவோம் அன்றுதான் இந்த சிரெயில்,இருந்துm உண்மையன independance விடுதலை கிடைக்கும்

 

இன்னும் விடியலையே
வேதனை தாங்கலையே.

 

LK...

//அனைவரின் மனதிலும் இதே கேள்விதான்//

unmai.

 

Riyas...

உங்களின் வருகைக்கு நன்றி. என்று விடியும் எல்லோரும் விரும்பும் உண்மையான சுதந்திரம்....???

 

hamaragana...

//one sample:mubai bomb plast -still "kazab" is alive ? //


நம்ம சட்டங்கள்....??? கொலை பாதகம் செய்தவனுக்கு விருந்து வைக்க கூடிய மனிதாபிமானம் போல......??!!

வாசலுக்கு வந்ததிற்கு நன்றி.

 

asiya omar...

//இன்னும் விடியலையே
வேதனை தாங்கலையே.//

இந்த வேதனையான மனதில் இருந்து வாழ்த்துக்கள் எப்படி வரும் தோழி....??

நன்றி.

 

நல்லாயிருக்குங்க...

 

சே.குமார்...

:))

 

சுதந்திர தினத்தை பற்றிய செய்தியை கூட சுதந்திரமாக படிக்க முடியவில்லை...

பதிவின் முடிவில் நீங்கள் கேட்டுள்ள அந்த கேள்விக்கான விடை தேடுதலில் தான் அனைத்து இந்தியர்களும் இறங்கியுள்ளார்களாம்...

இங்கேயும் பாருங்களேன்...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... http://jokkiri.blogspot.com/2010/08/blog-post_14.html

 

R.Gopi...


//பதிவின் முடிவில் நீங்கள் கேட்டுள்ள அந்த கேள்விக்கான விடை தேடுதலில் தான் அனைத்து இந்தியர்களும் இறங்கியுள்ளார்களாம்...//

இது நல்ல செய்தி இல்லை....

கருத்திற்கு நன்றி நண்பரே.