நீயின்றி மற்றொரு நாள்


      வார்த்தைகள் அபார கடலாய்
   விரிந்து என்னை உள்வாங்கியதென்ன...?
   மறுபடி எழ முடியாமல் அப்படியே
   அமிழ்ந்து போன மாயமென்ன..?!


   அந்த நிமிடத்தில் 
   உனது 'நான்' என்ற ஆணவதொனியில்
   எனது  'நான்' 
   மெதுவாய் கரைந்ததென்ன...?!


   இந்த ஆனந்தம்....
   சிரித்து மகிழ்கிற பரவசம் அல்ல,
   அழுது கரைகிற
   ஆனந்தம் என்றே புரிந்ததென்ன...?!


   எரிமலையின் வெப்பமும்,
   பனி மலையின் குளிர்ச்சியையும்
   ஒரு  சேர
   அனுபவிக்கும் இன்பமென்ன...?!


   கோபம், கர்வம் மறந்து மனதை சாந்தமும்,
   அமைதியும் கைகொண்ட உணர்வென்ன...?!
   இதே நிலை உனதும் என்றால்
   ஒன்றும்  சொல்லாமல் மறைந்ததென்ன...?!


   என்ன....! என்ன....! என்ன ....!


  

9 comments:

தினமும் பேசும் எனக்கு தெரிய வில்லை அபார கடல் என்று

 

கோபம், கர்வம் மறந்து மனதை சாந்தமும்,
அமைதியும் கைகொண்ட உணர்வென்ன...?///

நட்புக்கு கோபம் கர்வம் எல்லாம் கிடையாது

 

enna vena solla mudiyathathallava kaathal....pedithu irukku unga kavithai...

 

கவித,கவிதை படி படி

 

சௌந்தர்...

//நட்புக்கு கோபம் கர்வம் எல்லாம் கிடையாது//

கர்வம் கிடையாது. ஆனால் கோபம் வரும்...தன் நட்பிடம் பிறர் பேசுவதை பார்க்கும்போது...!!?
( possessiveness.....)

:))

 

தமிழரசி...

வருகைக்கு நன்றி தோழி...

 

A.சிவசங்கர்...

ஆமாம். கவிதை என்றுதான் நினைக்கிறேன்... :))

உங்களின் வருகைக்கு நன்றிங்க.

 

என்ன....! என்ன....! என்ன ....! என்ன....! என்ன....! என்ன ....! என்ன....! என்ன....!

 

வெறும்பய...

அதுதானே.....அது என்ன.... என்ன....!

வருகைக்கு நன்றி