நெஞ்சே....!

  

 முடிவில்லா 
 நீண்ட தூர துரத்தல்கள் !!
 பகலில் நினைவுகளால் 
 துரத்துகிறாய்.....அதில்
 மூச்சு வாங்கியே இரவு உறக்கம்
 தொலைக்கிறேன் 
 விடிவதற்கு சற்று முன்னே 
 உறங்கச் சென்றும் 
 கனவிலும் வந்து துரத்துகிறாய் 
 உறக்கம் தொலைத்து,
 உணவு என்பதை மறந்து
 எடை குறைந்து
 என்னை வேறாய் 
 வீட்டு கண்ணாடி பிரதிபலிக்க
 நெஞ்சே நீயும் நோயுடையாய் !
 என்னையும் நோய் செய்கிறாய் !
 இந்த நிலை ஏன் எனக்கு ?
 என்ன வேண்டும் உனக்கு ?!14 comments:

நல்லாயிருக்குங்க வாழ்த்துக்கள்

 

கவிதையின் வரிகள் சோக கவிதை

 

கெளசல்யா....@

எல்லாம் சீக்கிரமே சரியகிடும்...கவலைப்படாதீங்க!

 

மனதில் உள்ள உணர்வுகள், உடலையும் பாதிப்பதை, அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்....

 

உங்க கவிதையில ஒரு நல்ல ஃபீல் இருக்கு.. நல்லாயிருக்கு.. வாழ்த்துக்கள்..

 

நெஞ்சே நீயும் நோயுடையாய் !
என்னையும் நோய் செய்கிறாய் !
இந்த நிலை ஏன் எனக்கு ?
என்ன வேண்டும் உனக்கு ?!

உங்கள் மன பாரத்தை கவிதையாக வடித்து, அதை வெளிபடுத்தியதால், உங்கள் பாதி பாரம் குறைந்து இருக்கும்.

 

//இந்த நிலை ஏன் எனக்கு ?
என்ன வேண்டும் உனக்கு ?!
//

ennathan venumaam avarukku ???

 

VELU.G...

உங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

 

சௌந்தர்...

:(

 

dheva...

நன்றி.

 

Chitra...

வருகைக்கு நன்றி தோழி.

 

இளம் தூயவன்...


உண்மைதான். வருகைக்கு நன்றி

:)

 

LK...

//ennathan venumaam avarukku ??//

அந்த கேள்விதான் கவிதையே...

:)

 

அட கவிதையில் நல்ல மனசை கொட்டியிருக்கீங்க.வாசல் இத்தனை நாள் என் கண்ணில் படலையே!