காற்றைப் போல நீ !


           பக்கமாய் இருப்பவர்களை 
           விட்டுவிட்டு தூரமாய்
           இருக்கும் உன்னைமட்டுமே
           நினைவால்  தொடும் நான்..!
           லேசாய் தொட்டுச் சென்றுவிடும் 
           காற்றைப் போல  நீ....!
           இடைவிடாது என் காதில்
           ஒலிக்கிறது உன் குரல்
            நீ பேசாத போதும்..!
            உன்னை பார்த்து 
            கொண்டிருக்கிறேன், அங்கே 
            நீ இல்லாத போதும்...!
   
            என்னை மட்டுமே நீ தொடர 
            வேண்டும் என்றும் , எங்கும், 
            எப்போதும்.....உன்னால் இயலாது
            என்று தெரிந்தும்,  
            உத்தரவிடுகிறேன் அன்பாய் !!?
   
            என்னை தவிர 
            வேறு யாரிடமும் பேசாதே !
            உன் இதழ்களில் 
            நனைந்து வருவதால் 
            வார்த்தைகள் எல்லாம் 
            முத்தங்கள் ஆகிவிடுகின்றன !!

  


  17 comments:

என்னை தவிர
வேறு யாரிடமும் பேசாதே///

எத்தனை தடவை சொல்றாங்க யார்கிட்டயும் பேசாதீங்க கேளுங்க

 

பக்கமாய் இருப்பவர்களை
விட்டுவிட்டு தூரமாய்
இருக்கும் உன்னைமட்டுமே
நினைவால் தொடும் நான்.////

அவங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு;;

 

லேசாய் தொட்டுச் சென்றுவிடும்
காற்றைப் போல நீ....!///

அவர் ரொம்ப மோசம்

 

// நீ பேசாத போதும்..!
உன்னை பார்த்து
கொண்டிருக்கிறேன், அங்கே
நீ இல்லாத போதும்...!
//

அழகான கவிதை

வாழ்த்துக்கள் நண்பரே

 

தன்னை பிரிந்து இருக்கும் தன் துணைவனின் பிரிவை ரொம்ப அழக்காக வரைந்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

 

அழகான கவிதை..!

-
DREAMER

 

அழகான கவிதை..!

வாழ்த்துக்கள்.

 

//உன்னால் இயலாது
என்று தெரிந்தும்,
உத்தரவிடுகிறேன் அன்பாய் !!?//

அருமை

 

வாழ்த்துக்கள்

 

சௌந்தர்...

ஒவ்வொரு வரியையும் உற்று ரசிக்கும் ரசிகனுக்கு என் நன்றிகள். எல்லாவற்றையும் நீயே சொல்லிவிட்டதால் இதற்கு என்னுடைய பதில் 'no comments'...!

 

VELU.G...

வருகைக்கு நன்றி.

 

இளம் தூயவன்...

//தன்னை பிரிந்து இருக்கும் தன் துணைவனின் பிரிவை ரொம்ப அழக்காக வரைந்து உள்ளீர்கள்//

புரிதலுக்கு நன்றி.

 

DREAMER...

நன்றி.

சே.குமார்...


நன்றி

 

கோவை குமரன்...

உங்களின் வருகைக்கு..............நன்றி.

 

நல்லாயிருக்கு கௌசல்யா.

 

கடைசி நான்கு வரிகள் அற்புதம்