வண்ணத்துப்பூச்சி !!

  தேவையின்றி சினம் கொண்டு
  வலிய பேசினாலும்  கடனே
  என்று நலம் விசாரித்து 
  முகம் பார்க்க மறுத்து 
  நிலம் பார்த்தும்,
  அழைத்த  குரல் கேளாதவனாய் 
  வான் பார்த்து, வெள்ளி எண்ணி
  நேரம் சென்றதை நாசுக்காய்
  உணர்த்தி, விடை பெறாமல்
  விடை கொடுத்து அகன்றாய் !!
  தாமதமாய் உணர்ந்தேன்,
  எல்லாம் புரிந்து போனது....
  மனம் கூட மலர்விட்டு 
  மலர் தாவும் 
  ஒரு வண்ணத்துப்பூச்சி !!









11 comments:

வணக்கம்
// மனம் கூட மலர்விட்டு
மலர் தாவும்
ஒரு வண்ணத்துப்பூச்சி !!//
அழகான வரிகள் ஆழாமான படைப்பு

 

கௌசல்யா அம்மா.நல்லா இருக்கு வாழ்த்துக்கள்.

 

வண்ணத்து பூச்சியின் இயல்பும் மனதின் இயல்பும் தாவுவதுதானே மீண்டும் வண்ணத்து பூச்சி வராமலா போய்விடும்

 

கவிதை அருமை.கௌசல்யா ரொம்ப பிஸியா?

 

கவிதை நல்லாயிருக்கு..

 

dineshkumar...

வருகைக்கு நன்றி.

 

கோவை குமரன்...

மகனின் வாழ்த்திற்கு நன்றி.

 

சௌந்தர்...

//வண்ணத்து பூச்சியின் இயல்பும் மனதின் இயல்பும் தாவுவதுதானே மீண்டும் வண்ணத்து பூச்சி வராமலா போய்விடும்//

வண்ணத்துப்பூச்சி வரும் ஆனால் அதுக்குள் மலர் வாடிவிடும்......! எப்படி......?

உனக்கு பதில் சொல்வதற்குள் ஒரு கவிதை எழுதிவிடலாம் சௌந்தர்.

 

asiya omar...

கவிதைக்கு உங்கள் வரவு.....மகிழ்கிறேன் தோழி......!

நன்றி.

 

பதிவுலகில் பாபு...

வருகைக்கு நன்றி.

:))

 

//மனம் கூட மலர்விட்டு
மலர் தாவும்
ஒரு வண்ணத்துப்பூச்சி///

உண்மைதானே