உன்னை....?!

  
  மிக பிடித்த மாலை நேர இளம்வெயில் !
  மேற்கே செந்நிற வானின் பிரமாண்டம் !
  மெல்ல இதழ் விரித்து கொண்டிருக்கும்
  நித்யமல்லி வாசனையின் ரம்மியம் !
  முழுதும் மலர்ந்து அழகை கொட்டி 
  சிரிக்கும் அந்திமந்தாரை ! 
  கதிரவன் மறைந்ததை பார்த்து  
  மெதுவாய் தலைநீட்டும் சந்திரன் !
   வீதியில் சிறு குழந்தைகளின்
   உற்சாக விளையாட்டு கூச்சல்கள் ! 
   மாலைநேர  முற்றம்  தெளித்ததால் எழும்
   மண்ணின் இனிய நறுமணம் ! 
   இவை அனைத்தும் தினம்  
   என்னை உற்சாகமடைய செய்யும்.... 
   ஏனோ மனம் எதிலும் லயிக்கவில்லை 
   இன்று விடியற்காலை  
   உன்னை பார்க்கவில்லை நான்...??!    

12 comments:

அருமையான உணர்வுகளின் வெளிப்பாடு...சூழுலை வெளிப்படுத்தியிருப்பது வெகு அருமை....பார்க்கவில்லை என்றால் எப்படி....மனதால் கூடவா பார்க்கவில்லை...?

நேர்த்தியான வரிகள்

 

அம்மா...நீயாவது ஒரு blog ஆரம்பிச்சு கொடு...என்ன... என்ன... என்ன???

 

paarkkavillaya illai paarthathu theriyavillayaa???

 

அருமையான விவரிப்புகள்..
நல்லாயிருக்கு!

 

இன்று விடியற்காலை
உன்னை பார்க்கவில்லை நான்...?////

அன்று ஒரு நாள் சந்தோசமா இருங்கள்

 

dheva...

//பார்க்கவில்லை என்றால் எப்படி....மனதால் கூடவா பார்க்கவில்லை...?//

நல்ல கேள்விதான்....பதில் சொல்லத்தான் தெரியவில்லை.

நன்றி

 

கோவை குமரன்...

ஏற்கனவே இருந்த பிளாக் என்ன ஆச்சு...?

 

LK...

//paarkkavillaya illai paarthathu theriyavillayaa???//

தெரியவில்லை...?!

:))

 

Balaji saravana...

//அருமையான விவரிப்புகள்..
நல்லாயிருக்கு!//

நன்றிங்க

 

சௌந்தர்...

//அன்று ஒரு நாள் சந்தோசமா இருங்கள்//

சௌந்தர் இனி நீ சொன்னமாதிரி தான் இருக்கணும்.

:))

 

//ஏற்கனவே இருந்த பிளாக் என்ன ஆச்சு...? //

:))
ok same blog amma thanks

 

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.