சங்கமம்

ஊர் உறங்கியதும் எழும் 
உன் ஞாபகங்கள் உள்ளே அனலாய் 
கொதிப்பதென்ன......?! 


நான், என் சூழல்  அனைத்தும் மறந்தே
நீ ஒருவனே நிறைவாய் வலம் 
வருவதென்ன.......?! 


என்னை என்னிடமிருந்து பிரித்து
உனக்கானவளாய் மாற்றிய 
சுயநலமென்ன.......?!


ஒரு உடலில் இரு நினைவுகளாய்
எனக்குள் கூடு விட்டு கூடு மாறும் 
விந்தையென்ன.......?! 


யாருமற்ற நடுநிசியில் நம் 
இருவரின் நினைவுகளின்  
சங்கமமென்ன.......?! 


இதுவரை இல்லா மாயமாய்  
கண்ணாடியில் உன் உருவம் கண்டு 
வியந்ததென்ன.......?!


உயிர் தேடும் தேடல் என்று 
முடிவுறும் என்றே நாட்களை 
எண்ணியதென்ன.......?!


'உன்னை வென்றுவிட்டேன் பார்' என்று உன் 
இதழோர சிறு புன்னகை என்னை ஏளனம் 
செய்கிறதென்ன.......?! 


விடை பகிரமாட்டாய்  என்று தெரிந்தும் 
எனக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு 
முடிவுதான் என்ன...? என்ன....?? 


   

11 comments:

உன் ஞாபகங்கள் உள்ளே அனலாய்
கொதிப்பதென்ன......?//

என்ன அவ்வளவு அனலா

 

என்னை என்னிடமிருந்து பிரித்து
உனக்கானவளாய் மாற்றிய
சுயநலமென்ன.......?!////

என்ன ஒரு சுயநலம்

 

நல்லா இருக்கு sis...

 

அவனுக்கான் நீங்களாய் வாழும் உங்களை வாழ்த்துகிறேன். நெகிழ்கிறது . என் நெஞ்சம்

 

//விடை பகிரமாட்டாய் என்று தெரிந்தும்
எனக்குள் எழுகின்ற கேள்விகளுக்கு
முடிவுதான் என்ன...? என்ன....?? //

nandraaga sevi koduthu kelungal . pathil ketkum...

 

காதல் நினைவுகளின் சங்கமம் அருமை :)

 

சௌந்தர்...

///என்ன அவ்வளவு அனலா///

ஆமாம் சௌந்தர் எரிமலை உள்ள எரிஞ்சிட்டு இருக்கு.... !!

///என்ன ஒரு சுயநலம்///

சுயநலம் தப்பு தானே...உனக்கு புரியுது !

:))

 

ganesh...

வருகைக்கு நன்றி சகோ.

 

நிலாமதி...

///நெகிழ்கிறது . என் நெஞ்சம்///

உண்மையில் சந்தோசபடுகிறேன் ...உங்களின் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி சகோதரி.

 

LK...

//nandraaga sevi koduthu kelungal . pathil ketkum.//

:))

 

Balaji saravana...

//காதல் நினைவுகளின் சங்கமம் அருமை//

புரிதலுக்கு நன்றி நண்பரே.