வலி



    ஒவ்வொரு வினாடியும் 
    விரைந்து  செல்லாதா
    என்று கடிகாரம் பார்த்து 
    பார்த்து கண் 
    நோக....
    
    இன்று மட்டும் ஏன் நேரம் 
    செல்லவில்லை என்று கடவுளை
    சபித்து..... சொன்ன நேரம் 
    வந்த பின்னும்,  ஏன் தாமதம் 
    என்று புரியாமல் விழி தேட... 
    
    மறுபடி கடிகாரம் பார்த்து
    கண்ணுடன் மனதும் நோக...
    காத்திருப்பின் தவிப்பும் வலியும் 
    புரியாமல் நிம்மதியாக இருக்க 
    எப்படி முடிகிறது...??!
    
    காத்திருப்பது சுகம் என்று 
    யார் சொன்னது...?
    சொன்னவர்கள் அனுபவித்து 
    பார்க்க வேண்டும் 
    அந்த வலியை......??!
    
    காத்திருப்பின் வலியை விட 
    வேதனை , அதன் பின் வரும்   
    உணர்ச்சிகள்  அற்ற மன்னிப்பு !
    
    காத்திருத்தலின் அதிகரிப்பில் 
    வார்த்தைகள் மரித்துவிடும் !
    உயிர்ப்பித்து விடும் மௌனம்....!!? 

11 comments:

ஒவ்வொரு வினாடியும்
விரைந்து செல்லாதா
என்று கடிகாரம் பார்த்து பார்த்து
கண் நோக....//////
என்ன சொல்ல வரிங்க கடிகாரம் சரி இல்லையா இல்லை கண்ணு சரி இல்லையா

 

என்று கடவுளை
சபித்து..... ////
அது சரி இதை நாங்க சொன்னா எதிரி பதிவு போட வேண்டியது.

காத்திருப்பது சுகம் என்று
யார் சொன்னது...////

யார் வேண்டும் என்றாலும் சொல்லாம் அது உங்களுக்கு வரும் போது தான் தெரியும்

 

காத்திருந்து நன்றாக் வலியை உணர்ந்து இருக்கிறீர்கள்.

 

kaathiruthal valiyai thanthalum athilum sugam ullathu

 

// வார்த்தைகள் மரித்துவிடும் !
உயிர்ப்பித்து விடும் மௌனம்....!!?//

அருமை :)

 

சௌந்தர்...

//என்ன சொல்ல வரிங்க கடிகாரம் சரி இல்லையா இல்லை கண்ணு சரி இல்லையா//

:))

 

நிலாமதி...

நன்றி சகோ.

 

LK...

//kaathiruthal valiyai thanthalum athilum sugam ullathu//

unmaithan. :))

 

Balaji saravana...

நன்றி நண்பரே.

 

காத்திருக்கும் போது ஒவ்வொரு வினாடியும் ஒரு வருஷமா இருக்குறதை நான் உணர்ந்திருக்கேன்

 

gautham...

//காத்திருக்கும் போது ஒவ்வொரு வினாடியும் ஒரு வருஷமா இருக்குறதை நான் உணர்ந்திருக்கேன்//

இந்த உணர்வுகள், அனுபவம் உண்மையில் அற்புதமானது....!!
உங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க