குறிஞ்சி பூ    பனிரெண்டு  வருடம் கழித்து  
  பூத்த குறிஞ்சி பூவாய் நீ !
  அழகாய் இருப்பதால் ரசித்தேனா...?
  நான் ரசித்ததால்
  அழகாய் மாறினாயா ??  
  புதிதாய் என் சுவாசத்தில் 
  காதல் வாசம் வீச செய்து 
  வினா எழுப்பி 
  வேடிக்கை செய்கிறாய்.....!!
  அபத்தமும், அவஸ்தையும் 
  அன்றோ காதல் !
  தவணை முறை வருகை 
  தேவை இல்லை.... 
  தஞ்சமடைந்து விடு   
  நிரந்தரமாய் இன்றே !! 


9 comments:

அழகாய் இருப்பதால் ரசித்தேனா...?
நான் ரசித்ததால்
அழகாய் மாறினாயா ??/////

அழகா இருப்பதால் தான் ரசித்தீர்கள்

 

புதிதாய் என் சுவாசத்தில்
காதல் வாசம் வீச செய்து
வினா எழுப்பி
வேடிக்கை செய்கிறாய்..////

வேடிக்கையான கேள்வி கேக்குறார்

 

அன்றோ காதல் !
தவணை முறை வருகை
தேவை இல்லை....
தஞ்சமடைந்து விடு
நிரந்தரமாய் இன்றே !!/////

அப்படி சொல்லுங்கள்

 

//அபத்தமும், அவஸ்தையும்
அன்றோ காதல் !//

உண்மைதான்

//தஞ்சமடைந்து விடு
நிரந்தரமாய் இன்றே !!

///
உங்க காதலை அவர் நிராகரிக்க முடியுமா வருவார்

 

சௌந்தர் சொன்னது...

//வேடிக்கையான கேள்வி கேக்குறார்//

ஆமாம்

//அழகா இருப்பதால் தான் ரசித்தீர்கள்//

பூ அழகா இருந்தா ரசிப்பது இல்லையா...?! அது மாதிரி தான்

:))

 

LK...

கார்த்திக் கவிதை...நல்லா எழுதி இருக்கிறேனா இல்லையா ??

:))

 

Balaji saravana...

thank u

:)

 

உங்க கவிதையை யாரவது குற்றம் சொல்ல முடியுமா