தொடரட்டும்...!  சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
  சண்டையிட்டு அத்தனையிலும்
  தோல்வி பிடிக்காத நான்
  தோற்று, நீ வெல்வதை ரசித்து !
  இதழ்கள் வலிக்கும் வரை 
  பேசிய பின்னும்
  இன்னும் மிச்சம் இருக்கிறதே
  வார்த்தைகள்.....!?
  உன்னிடம் இருந்து திரும்பி
  வர அடம் பிடிக்கும்
  குழந்தையாய் நான் !
  பிடிவாதமாய் செல்ல மறுத்து
  என்னிடமிருக்கும் நீ....!
  இவை இணையும் புள்ளியில்
  நான், நீ மறைந்து
  நாம் என்ற ஒன்றாக !?
  அதுவரை தொடரட்டும்
  இந்த அடமும் பிடிவாதமும் !!?

17 comments:

ரெம்ப நல்லா இருக்கு அக்கா...

 

கவிதை அருமை
//அதுவரை தொடரட்டும்
இந்த அடமும் பிடிவாதமும் !!?

//

தொடரட்டும்

 

சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
சண்டையிட்டு அத்தனையிலும்
தோல்வி பிடிக்காத நான்
தோற்று, நீ வெல்வதை ரசித்து /////

நீங்க சண்டை போடுறதை கூட ரசிகிறாங்க

 

அதுவரை தொடரட்டும்
இந்த அடமும் பிடிவாதமும்////

ரெண்டு பேரும் தொடருங்கள் உங்கள் பிடிவாதத்தை

 

//இதழ்கள் வலிக்கும் வரை
பேசிய பின்னும்
இன்னும் மிச்சம் இருக்கிறதே
வார்த்தைகள்.....!?
//

உணர்வை இழுத்துப் பிடித்து வார்த்தைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் விதம் அருமை...!

 

ganesh...

நன்றி கணேஷ்

 

LK...

//தொடரட்டும்//

:))

 

சௌந்தர்...

//நீங்க சண்டை போடுறதை கூட ரசிகிறாங்க//

வேற வழி...?!

நன்றி சகோ.

:)

 

dheva...

//உணர்வை இழுத்துப் பிடித்து வார்த்தைகளுக்குள் கொண்டு வந்திருக்கும் விதம் அருமை...!//

சரியான புரிதலுக்கு நன்றி தேவா...

 

//இதழ்கள் வலிக்கும் வரை
பேசிய பின்னும்
இன்னும் மிச்சம் இருக்கிறதே
வார்த்தைகள்.....!?//

கிளாஸ் :)

 

Balaji saravana...

///கிளாஸ் :)///

எந்த கிளாஸ் என்று சொல்லலையே....?

1st ஆ 2nd ஆ.....?!!!!

:)))))

நன்றி.

 

நல்லா இருக்கு..............
உங்க கவிதை...............

 

நான் சொன்ன கிளாஸ், டாப் கிளாஸ் :)
அப்ப மாடில இருக்கிற கிளாஸான்னு கேக்காதீங்க ;)

 

பிரியமுடன் பிரபு...

வருகைக்கு ரொம்ப நன்றி..

 

வேங்கை...

இந்த வாசலுக்கு வந்த உங்களுக்கு என் நன்றி..

 

Balaji saravana சொன்னது…

//நான் சொன்ன கிளாஸ், டாப் கிளாஸ் :)
அப்ப மாடில இருக்கிற கிளாஸான்னு கேக்காதீங்க ;)//

டாப் கிளாஸ் என்று சொன்னதுக்கு ரொம்ப நன்றி...

நல்லவேளை சொல்லிடீங்க இல்லேன்னா மறுபடி கேள்வி கேட்டு இருப்பேன்...

:))