என் பெயர் காதல்....!!    என்னை புரிந்து கொண்டதாய் 
    நீயும்....உன்னை புரிந்து கொண்டதாய்
    நானும் பொய் சொல்லி 
    கொண்டு  இருந்திருக்கிறோம்  
    இதுவரை..... !!


    ஓயாமல் பேசித்தீர்த்த பொழுதுகள் 
    கொஞ்சி கழித்த தருணங்கள் 
    முத்தத்தில் திளைத்த மோக நிமிடங்கள்
    நாள் தவறாமல் போட்ட சண்டைகள்
    கூடலில் முடியாது போன ஊடல்கள் 


    மெய்  மறந்த ஒரு நிலையில்,
    என்னுள் நீயும்.... 
    உன்னுள் நானுமாய்.... 
    கரைந்த தருணத்திற்கு,
    பின் வந்த காலை நேர மயக்கம்
    மசக்கைக்கானது என்று சொல்ல ! 


    நாவுகள் புளிப்பை தேடி ஏங்க
    உயிருக்குள் உயிர் தவிக்கும் 
    தவிப்பை உணர்ந்தேன் ....
    நாள் செல்ல செல்ல வெளிவர 
    துடிக்கும் ஆவேசத்தை, எண்ணி 
    அச்சமே கொள்கிறது மனது.... 


    உயிர் மீதான எனக்குள்ள அக்கறை
    குறைந்து விடுமோ என்று
    அடிக்கடி உதைத்து 
    நினைவுபடுத்துகிறாய்......!?  
    இதய வழி பொறுக்காமல் 
    எனக்குள்ளே அரற்றினேன் ....  
    துடித்தேன் .....கலங்கினேன் ....
    தூக்கம் தொலைத்து, விழித்தே 
    கிடந்திருக்கிறேன்  பலநாள்...


    நேற்று
    திடுக்கென்று  பெரிய  வலி ஒன்று
    இதயத்தை மோத....
    உச்சகட்ட உயிர் போராட்டம் ! 
    முழு சக்தியையும் பிரயோகித்து
    வெளி தள்ள பிறந்தே விட்டது....
    அழகாய், அருமையாய் அதே மர்ம
    புன்னகையுடன் !!?


     என் மொத்த 
     உணர்வையும், மௌனமாய் 
     மொழிப்பெயர்த்து.... 
     ஒற்றை வார்த்தையாய் 
     'என் பெயர் காதல்'  என்கிறது 
     நேற்றிரவு பிறந்த என் குழந்தை !!15 comments:

வாவ்!
//'என் பெயர் காதல்'//
அசத்தல்!

 

உயிர் மீதான எனக்குள்ள அக்கறை
குறைந்து விடுமோ என்று
அடிக்கடி உதைத்து
நினைவுபடுத்துகிறாய்......!?/////

இனி மேல் அந்த குழந்தை உதைக்குமா

 

அந்த குழந்தை பிறந்து எத்தனை நாள் ஆச்சு ச்சே காதல் பிறந்து எத்தனை நாள் ஆச்சு

 

//என் மொத்த
உணர்வையும், மௌனமாய்
மொழிப்பெயர்த்து....
ஒற்றை வார்த்தையாய்
'என் பெயர் காதல்' என்கிறது
நேற்றிரவு பிறந்த என் குழந்தை//

இந்த வரிகளை நானும் அனுபவித்தேன்....

 

அழகானக் கவிதை.. கடைசி வரிகளில் மிகவும் ரசிக்க வைத்தது.

 

காதல் பிறந்த க(வி)தை அழகு!

 

உணர்வுகளுடன் பிறந்து இருக்கிறது கவிதை. வாழ்த்துக்கள் .. உங்கள் படைப்புகளில் இதுவே மிகச் சிறந்த ஒன்றாகும்

 

Balaji saravana...

//வாவ்!
//'என் பெயர் காதல்'//
அசத்தல்!//


இந்த மாதிரி வார்த்தைகள் நிறைய ஸ்டாக் இருக்கா...?!! :))))

நன்றி.

 

சௌந்தர்...

//இனி மேல் அந்த குழந்தை உதைக்குமா//

ஆமாம் குழந்தைதானே உதைக்கத்தான் செய்யும்...

//அந்த குழந்தை பிறந்து எத்தனை நாள் ஆச்சு ச்சே காதல் பிறந்து எத்தனை நாள் ஆச்சு//

கவிதை எழுதினா படிக்கணும் இப்படி ஏடா கூடமா கேள்வி கேட்ககூடாது தம்பி...!

:))

 

சங்கவி...

//இந்த வரிகளை நானும் அனுபவித்தேன்.//

உங்களின் புரிதலுக்கு நன்றி.

 

சுபத்ரா...

//அழகானக் கவிதை.. கடைசி வரிகளில் மிகவும் ரசிக்க வைத்தது.//

உங்களின் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

 

சுந்தரா சொன்னது…

//காதல் பிறந்த க(வி)தை அழகு!//

வாவ்...சரியான உணர்வு பூர்வமான புரிதல். வருகைக்கும் இந்த அழகான வரிக்கும் நன்றிங்க....

:))

 

LK...

//உங்கள் படைப்புகளில் இதுவே மிகச் சிறந்த ஒன்றாகும்//

அப்ப, மற்ற கவிதைக்கு எல்லாம் ' நல்லா இருக்கு ' என்று சொன்னது சும்மாவா....?! :))

 

முனைவர்.இரா.குணசீலன்...

//அழகிய காதல்.//

உங்களின் வருகைக்கும், வார்த்தைக்கும் மிகவும் நன்றி.