தவிப்பு....!

   காதலே
   உனக்கும் வெட்கம் வரும்
   என்னவன்  சிரித்தால் !
   இன்று எனக்கு 
   கோபம் வருகிறது
   அவன் சிரிக்க மறந்ததால் !
   ஏன்
   இந்த கள்ள மௌனம்
   எங்கே கற்றாய்......?!
   உன் இருப்பை
   உறுதி படுத்த நான்
   எடுக்கும் பிரயத்தனம்
   கொஞ்சமா.....?!
   நழுவியே செல்கிறாய்
   நதி நீர் ஆடும்
   மீனை போல !
   அன்பு தூண்டிலை விட
   வலியதா உன் பணி...
   மாட்டி கொள்கிறாய் 
   சுலபமாக அங்கே !
   தவிர்த்து  
   தவிக்க விடாதே
   வேண்டாம் பெண் பாவம்
   பாவம் பெண் !
   கருணை பார்வை 
   ஒன்று வீசிச் செல் 
   உயிர்ப்பித்து விடும் 
   துடிப்பை மறந்த  இதயம் !!?

ஒரே நொடியில்....!

வரும்போது... 
குழந்தைக்கு மறக்காமல் 
வாங்கி வந்த சாக்லேட் !
நைட் ஷோ 
மனைவியுடன் எந்திரன் பார்க்க 
வாங்கி வந்த டிக்கெட் !
நாளை 
செல்ல வேண்டிய 
முக்கிய உறவினரின் திருமணம் !
தீபாவளியை 
சிறப்பாய் கொண்டாட 
வாங்கிய புது உடைகள், 
பட்டாசுகள், இனிப்புகள் !
அடுத்த மாதம் செல்ல 
ஏற்பாடு செய்திருந்த
வெளிநாட்டு பயணம் !
கொஞ்ச நேரத்தில் 
கலந்து கொள்ளவிருந்த 
நண்பரின்  பிறந்த நாள் பார்ட்டி ! 
எல்லாம் எல்லாம் 
தூள் தூளாய் 
சிதைந்து  விட்டது ஒரே நொடியில் ?!
திட்டமிடப்படாத கொலையால்
..............
..............
..............
விபத்து !!






நாளை......!

  
  
  ஒரு புன்னகை, ஒரு சொல் 
  ஒரு பார்வை.....
  எதிர்பார்ப்பு  அதீதம் தான்
  சிறுபிள்ளைதானோ  நான்..?! 
  சில்லுசில்லாய் சிதறடித்தும் 
  சிதறவில்லை என் மனம்  !
  முள்ளு முள்ளாய் குத்தியும்
  கிழியவில்லை என் இதயம் !
  துண்டுதுண்டாய் வெட்டியும் 
  உடையவில்லை என் காதல் !
  உன் பொறுமையும் என் 
  வெறுமையும் நல்லதே !!
  ................... 
  நாளை
  கல்லறையின் மேல் 
  காத்திருக்கும் உனக்கான
  என் வார்த்தை !!
  காற்றில் கலந்திருக்கும்  
  சுவாசம் உணர்த்தும்
  மறந்த என் அன்பை....!!
  கண்ணீர் வழிந்தோடிய 
  தடம் பார்ப்பாய்
  நீ திரும்பும் வழியில் !!
  வீடு வந்த பின்னும் 
  தேடுவாய், நீ தவறவிட்ட 
  என்னை...!!?  


என் காதலே...!

     
     
     அடிக்கடி சோம்பி நிற்கும்
     என் மௌனங்கள் - மௌனத்தில் 
     விளங்காத என் காதல்...
     வார்த்தைகளில்
     எங்ஙனம் விளங்கும்....?!
     விதி வலியதாம் - அதைவிட
     வலியதே உன் அறியாமை !
     என் தவிப்பின் கணம்
     உணராமல் போனதென்ன !?
     புரியாக் காதலை எனக்கு
     அடையாளம் காட்டிவிட்டு
     முடிந்தது வேலை என்றே
     ஒதுங்கி போகிறாய் !
     கற்பனைகள் உடையலாம்
     சோப்பு குமிழியாய்...!
     கனவுகள் கலையலாம்
     மேக கூட்டமாய்....!
     உன் நினைவுகள்
     துருபிடித்துக்  கொண்டதே
     எப்படி கலையும்....??
     எப்படி மறையும் ....??

**************************************************************
        
  நேற்று, இன்று மறந்து
  உருவம், பருவம் கடந்து
  தர்க்கம், வர்க்கம் துறந்து
  கள் குடித்த வண்டாய் 
  தள்ளாடி தள்ளாடி பறந்து 
  கொண்டே இருக்கிறேன்..!!
  சரியா... ? தவறா....?
  சரியான ஒரு தவறா..?!!



நிராசை...!



   நிலவு குளிக்கும்  இரவு நேரம்
   மொட்டை மாடி சுவர் அமர்ந்து
   நிலவில் நம் 
   முகம் தேட வேண்டும்....!!
   உணவுடன் காதலை கலந்து  
   உனக்கு ஊட்டி...நீ உண்ணும் 
   அழகில் என் வயிறும் நிறையும் 
   அற்புதம் நிகழ வேண்டும் ....!!
   வரும் விக்கலுக்கு பதறி
   உன் தலை தட்டி
   தண்ணீர் 
   நான் குடிக்க வேண்டும் .....!!
   உன் தோள் சாய்ந்து 
   ஊர் கதை விடியும்  வரை பேசி, 
   விடிந்த பின் மடி சாய்ந்து 
   உறங்க வேண்டும்.....!! 
   உன் கை கோர்த்து 
   நடந்தே...உலகம் முழுதும் 
   சலிப்பின்றி 
   சுற்ற வேண்டும் .....!!
   பெய்யும் மழை நீ ரசிக்க 
   மழை ரசிகை நான்.. 
   மழை  விடுத்து 
   உன்னை ரசிக்கவேண்டும்   .....!!
   நான் கண்ட கனவெல்லாம்
   நனவாக ஆசைகொண்டு 
   முயன்றும் 
   முடியாமல் போய்விட்டது .....!!
   .............
   .............
   விரும்பி வெறுக்கிறாய்.....!??



இப்படிக்கு உன்....!


வாசல் தளத்தில் இதுவரை 50  பதிவுகளை தாண்டி 51 வது  பதிவு இது......எனக்கு தெரிந்த பல விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த தளத்திலும் எழுத தொடங்கினேன்.  ஆனால் கவிதை என்ற பெயரில் என்று கிறுக்க தொடங்கினேனோ அன்றில் இருந்து இன்று வரை என்னை வேற ஏதும் எழுத விடாமல என் கையை கட்டி போட்டு விட்டது எனக்குள் இருக்கும் காதல்...இந்த பதிவிலும் என்னை புயலாய் கலங்கடித்து கொண்டிருக்கும் காதலை தான் எழுத போகிறேன் ஆனால் கவிதை இல்லை கடிதம்....?!

கவிதையில் சில நேரம் பொய் கலப்பிருக்கும்..ஆனால் கடிதம் அப்படி இல்லை...மனதில் இருந்து வந்து விழும் வார்த்தைகள் அவை.....

********************************************************
என் பிரிய ராட்சஸா,  

உன்னை எப்பவும் நினைச்சிட்டு இருக்கிற நான் எழுதுவது கடிதமே தான்... பல கவிதைகள் நான் எழுதியும் இன்றுவரை 'நல்லா இருக்கு' என்ற ஒரு வார்த்தையுடன் உன் மறுமொழியை நிறுத்திக்கொண்டாய்.  உன்னை அதிகம் பேச வைக்கவே இந்த கடித முயற்சி...(கடிதத்திற்கு பதில் என்ற ஒன்று எழுதிதானே  ஆகவேண்டும்)

"வசந்தத்தை அறிமுக படுத்தினாய் என்றே இதுவரை எண்ணினேன்.....
அந்த வசந்தமே நீ என்பதை உணராமல்...!!"

உன்னை மலர் என்று சொல்லி
நீ வாடுவதை நான் விரும்பவில்லை !
நதி என்று சொல்லி நீ வேறிடம்
செல்வதை நான் விரும்பவில்லை !
நிலவு என்று சொல்லி பலரும்
உன்னை ரசிப்பதை நான் விரும்பவில்லை !
வேறு எதுவாகவும் இல்லாமல்
நீ
எனதாக மட்டுமே....
என்
நிழலாக மட்டுமே இரு !!

என்னை தவிர வேறு யாரையும் நீ விரும்ப கூடாது என்பது என் சுயநலம் தான்....ஆனால் என்னை போல வேறு யாரும் உன்னை இந்த அளவிற்கு விரும்பமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை..... முதல் முறை உன்னை நான் சந்தித்த நொடி எதுவென்று இன்றுவரை எனக்கு புலப்படவில்லை...... உன் அனுமதி பெற்ற பின்பே என் தாயின் கருவறை வந்தேன் என்று சொல்லி சிரித்தாய் ஒருநாள்......மீண்டும் உன் அனுமதி பெற்ற பின்பே கல்லறை சென்று சேர வேண்டும், சொல்லி மகிழ்கிறேன் எனக்குள் இன்று......!

"வாழ்க்கை விநோதமானதுதான்.......   உன்னை நான்  படிக்கவேண்டும் .....என்று  வைத்துவிட்டு, விருப்பம்  இல்லாமல் வேறொரு பரீட்சையை  எழுத வைக்கிறது....!!"

எனக்கு எல்லாம் தெரியும்
உன்னை பற்றி......
உனக்கு என்னை பிடிக்குமா
என்பதைத் தவிர....?!

உனக்கு என்னைப்பற்றி
ஒன்றும் தெரியாது....
உன்னை நான் விரும்புகிறேன்
என்பதைத் தவிர....!!

என்னவனே....நீ உறங்கும் நேரத்தில் உன் முகம் தேடி அலையும் என்னை என்று புரிந்து கொள்வாய்....? விடியும் நேரம் உறங்க சென்றும் கனவில் வந்து எழுப்புகிறாய்...! உன்னிடம்  என்ன பேசலாம்  என்று யோசித்தே பகலும் முடிந்து விடுகிறது. 

விரைவில் நாம் பிரிந்து விடுவோம் என்று நேற்று கனவில் மரணம் வந்து சொல்லிவிட்டு செல்கிறது.....

சாவதை பற்றி
எனக்கு கவலை இல்லை
சாவு ஒரு முறை !
வாழ்வதை பற்றிதான்
எனக்கு அக்கறை
தினம் தினம்
வாழ்ந்தாகணும்
அதுவும் உன்னுடன் !!

நீ வாழும் பூமிக்கு நான் வருவேன்.....அங்கே காற்றில் கலந்திருக்கும் உன் சுவாசத்தை நான் சுவாசித்து.......என்னை புதுப்பித்துக்  கொள்ளவேண்டும்.....! 

இப்படிக்கு 

அழகான பதிலுக்குக்காய்  காத்திருக்கும் 
உன் பிரிய சகி.  


(அடடா.........!!  கடிதம் என்று  நினைத்து தான் எழுதினேன்....ஆனா எழுதியதை மறுபடி படித்து பார்க்கும் போது.....அப்படி தெரியவில்லையே.....யாராவது சொல்லி தாங்களேன் எப்படி கடிதம் எழுதுவது என்று ப்ளீஸ்ஸ்......!!) 
  



50 வது பதிவு வரை வந்து எனக்கு பின்னூட்டம் இட்டு என்னை தொடர்ந்து உற்சாக படுத்தி கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன்.

சௌந்தர் 
Balaji Saravana
தேவா
LK 
ஹேமா 
கணேஷ் 
ஆதிரன் 
இம்சை அரசன் பாபு
நிலாமதி 
சித்ரா 
ஆனந்தி 
ஆசியா உமர் 
கே. ஆர்.செந்தில் 
வெங்கட் நாகராஜ் 
எஸ்.கே
மங்குனி அமைச்சர்
ப.செல்வகுமார்
விஜய்
டெரர் பாண்டியன் 
ரமேஷ் 
ஜெயமாறன்
ஆர்.கே.சதிஷ்குமார்
சசிகுமார்
சே.குமார்
ஜீவன் பென்னி 
அகமது இரசாத்
யாதவன் 
அன்பரசன்
கௌதம்
சி.கருணாகரசு
Jey
ஆர்.ஞானசேகரன் 
கார்த்திக் சிதம்பரம் 
விஜி 
பின்கி ரோஸ்
விக்னேஸ்வரி
காயத்ரி 
சங்கவி 
அன்புடன் மலிக்கா 
முனைவர் இரா.குணசீலன்
சுந்தரா
சுபத்ரா
 சேட்டைக்காரன்
ராசராசசோழன் 
மேனகா சாதியா
அப்பாவி தங்கமணி
S .மகராஜன்  
வடுவூர்  குமார்
புதிய மனித
கண்ணகி
கோவைகுமரன்
சௌமியா ஸ்ரீநிவாசன் 
தியாவின் பேனா 
திவ்யாம்மா 
வேங்கை
உழவன்
உடுமலை சிவா
தினேஷ் குமார்
வேலு G
இளம் தூயவன்
பதிவுலகில் பாபு 
A .சிவகுமார்
தமிழரசி
hamarahana  
வழிப்போக்கன் 
ரியாஸ்
M .அப்துல்காதர்
போகன்
மகாதேவன்
சந்ரு
பிரியா.r
வார்த்தை 
DREAMER
டெனிம்

மற்றும் வோட் அளித்தவர்களுக்கும்,  இந்த தளத்தில் என்னைத் தொடர்பவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். 




இவள் தேவதை....!



கோயில், குளம் சுற்றி தவம் 
இருந்தபின் பிறந்த மகன் நான்,   
ஊரே கொண்டாடி மகிழ்ந்தது !
பள்ளி சென்ற முதல் நாள்  
விழா எடுத்தாள் என் தாய் !
வகுப்பில் பாடம், விளையாட்டு 
முதல் இடம் தேடி வந்தது !
எல்லாம் சரியாகத்தான் இருந்தது 
என் பதிமூன்று வயதுவரை.....!!


சொந்த வீடே வித்தியாசமாய், 
வேறாய் தள்ளி வைத்து பார்த்தது ?! 
தோள் அணைத்து நட்பு பாராட்டிய 
உள்ளங்களில் கேலியும் கிண்டலும் 
குழம்பி நின்றேன் புரியாமல்...?!!
தேடாமல் வந்தடைந்தன  
துன்பமும் துயரமும் பரிசுகளாய் !?
ஒளிய இடம் இன்றி 
ஓடி ஒளிந்தேன் எனக்குள் !!


எனக்கும்  அதே பத்துமாத 
கருவறை வாசம் ??
பசி, தூக்கம், கனவு, 
காதல், காமம், கருணை,வலி,
உழைப்பு, துக்கம்,கோபம் 
இருந்தும்... 
மனிதனில் நானில்லை புனிதனாய் 
சொல்கிறது சுற்றம் !!?
என்னை பார்வையால் கொன்று 
தின்றவன் மட்டும் 
எவ்வாறு புனிதன்(மனிதன்) ??


நினைவுகளின் கனம் அழுந்த
பறக்கும் காகித பறவையாய்,   
வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து, கரைந்து 
தொலைத்தேன் என் அடையாளம் !?
பின் தெளிந்தேன்...துயர் தவிர்த்தேன்...
எழுந்தேன்...புது வடிவாய்...
சக்தியின் மகளாய் !!


வாழ்க்கை வலி இருந்தும் 
இனி இவள் 
சிரிக்கும் வித்தை தெரிந்தவள் !
வெறுமை விலக்கி முழுமை  தேடி  
பயணம் கிளம்பிவிட்டேன் !
பாலினம் அற்ற தேவதை நான் !



வர்ணிக்கிறேன்....!



  தூரிகை வழி பயணிக்காத 
  ஓவியமடா நீ ! 
  எழுத்தில் வடிக்க இயலா 
  காவியம் நீ !
  காவியம் உன்னிடம் இறைஞ்சும் 
  உபதேசம் ! 
  கவி வரிக்குள் சிக்காத 
  கவிதை நீ ! 
  
  உன் கேச சுருள் ஊடாய் 
  கோலம் போட ஏங்கும் என் விரல்கள் !
  புருவ அழகில் மயங்கி தொட்டு விட  
  முன் வந்து விழும் இரு முடி கற்றைகள் !
  தூக்கம் இழந்த விழிகளில் சோர்வை மீறி 
  பளீரிடும் மின்னல் கீற்றுகள் !
  அந்த நெருப்பில் குளித்தே 
  குளிர்  விட்டு போச்சு எனக்கு.....!!
 
  புகை எனக்கு பகை என்று 
  சத்தியம் செய்யும் உன்  
  செந்நிற இதழ்கள் !!
  நான் பேசும் வார்த்தைகள் 
  மோட்சம் அடைக்கின்றனவாம் 
  உன் செவி அடைந்ததும் !!
  பைத்தியம் 
  பிடிக்க வைத்த புன்னகை !
  கர்வம் 
  தொலைக்க வைத்த குரல் !
  உன் ..........
  ............
  ...........


  " நிறுத்து....! நிறுத்து....!! 
  வர்ணித்தது போதும்   
  வருகிறான் தேவதூதன் 
  உன்னை அழைத்து செல்ல"


  கடவுளின் குரல் !??