மறுக்கிறாய்.....?!   காத்திருந்தேன் உனக்காக 
   பல முறை சொல்லியும் 
   நம்ப மறுக்கிறாய்.....?!
   காத்திருந்த நேரம் 
   பல கவிதை பூத்ததை
   சொல்லியும் நம்பவில்லை ....?!
   வேறு சிந்தனை இன்றி 
   உன்னை மட்டுமே 
   மனம் சுற்றி வந்ததை 
   எப்படி புரிய வைப்பேன்....?!
   காலையில் தண்ணீர் இன்றி 
   வாசல் தெளித்ததை 
   என்னவென்று சொல்ல.....?!
   விழி மூடாமல் தவித்ததை 
   என் கண் பார்த்தும்
   நம்ப மறுக்கிறாய்...?!
   மொத்தத்தில் 
   உன்னை அறைந்தால் என்ன ??!

*******************************************************

   உன் மர்ம புன்னகையை
   வார்த்தைகளாக்கினால்
   'என் மீதான உன் காதல்
   என்னிடம் விட்டு சென்றதில்
   இதுவும் ஒன்று' என்றே 
   வருகிறது...!!

*******************************************************
  நீ சொல்லும் 
  ஒரு  வார்த்தையில் 
  என் உலகம் 
  மௌனமாகி விடும்
  ரகசியமாய் நீ அழைக்கும் 
  'என் பெயர் !!' 11 comments:

அற்புதமான காதலின், தவிப்பின் வெளிப்பாடு. அருமையான கவிதை.

 

//இதுவும் ஒன்று'//
செம..
//உன்னை அறைந்தால் என்ன ??//
உங்கள அவர்ட்ட கேளுங்கன்னு தான் சொன்னேன் இப்படி "அறையட்டுமா" அப்படின்னு கேக்குறது ரொம்ப தப்பு :)
உங்களது ஆற்றாமை வெளிப்படும் கவிதை வரிகள் அருமை சகோ!

 

பல கவிதை பூத்ததை
சொல்லியும் நம்பவில்லை ...///

அவர் கிட்ட எழுதியை கவிதையை காட்டனும் அப்போ தான் நம்புவார்


நம்ப மறுக்கிறாய்...?!
மொத்தத்தில்
உன்னை அறைந்தால் என்ன ?///

அறைந்தால் மட்டும் நம்பிவிடுவாரா என்ன?

மௌனமாகி விடும்
ரகசியமாய் நீ அழைக்கும்
'என் பெயர் !!'///

மறுபடி இவங்க பெயரை சொல்லுங்கள் கொஞ்ச நாள் மௌனமா இருக்கட்டும்

 

அட...என்னைப்போல இன்னொரு இராட்சதக் காதலி.கௌசி....பாவம் அவர்.அறையவேணாம் பதிலாக ஒரு முத்தம் கொடுங்கள் !

 

ஜீவன்பென்னி சொன்னது…

//அற்புதமான காதலின், தவிப்பின் வெளிப்பாடு. அருமையான கவிதை//

வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சகோ..

 

//உன்னை அறைந்தால் என்ன ??!///

பாவம் அவர்.. விட்ருங்க

//நீ சொல்லும்
ஒரு வார்த்தையில்
என் உலகம்
மௌனமாகி விடும்
ரகசியமாய் நீ அழைக்கும்
'என் பெயர் !!'

///
ரசித்த வரிகள்

 

Balaji saravana சொன்னது…

//செம..//

:))

//உங்கள அவர்ட்ட கேளுங்கன்னு தான் சொன்னேன் இப்படி "அறையட்டுமா" அப்படின்னு கேக்குறது ரொம்ப தப்பு :)//

நீங்க சொன்னபடி கேட்டேன் சகோ ...?! ஆனா பதில் வரலைனா கோபம் வருமா வராதா, பொறுமைக்கும் ஒரு அளவு இருக்குல...!!? அதுதான் வேற வழி இல்லாம வன்முறையில் இறங்கலாம் என்று முடிவு பண்ணிட்டேன்....

:))))

 

சௌந்தர் சொன்னது...

//மறுபடி இவங்க பெயரை சொல்லுங்கள் கொஞ்ச நாள் மௌனமா இருக்கட்டும்//

அடடா....அப்படியா கஷ்டபடுத்துறேன்....என்னை மௌனமா இருக்க சொல்றே....??!!

:))

 

ஹேமா சொன்னது…

//அட...என்னைப்போல இன்னொரு இராட்சதக் காதலி.கௌசி....பாவம் அவர்.அறையவேணாம் பதிலாக ஒரு முத்தம் கொடுங்கள் !//

'இராட்சதக் காதலி'. என்று மிக சரியாக சொன்னதுக்காக தோழிக்கு ஒரு special thanks !!

அப்புறம்...தோழி பேச்சை கேட்டுத்தான் ஆகணும் .......! :)))

 

ம்,இதெல்லாம் கவிதைக்கு தானே கௌசல்யா.

 

LK சொன்னது...

//ரசித்த வரிகள்//

ரசனைக்கு மகிழ்கிறேன்.

:))