காதல்....!!


          நேசிப்பை கற்று கொடுத்தாய் !
            பிரியம் புரிய வைத்தாய் !
            அன்பை என்னுள் விதைத்தாய் !
            கவிதை எழுத வைத்தாய் ! 
            நினைவெல்லாம் உலா வந்தாய் !
            கனவிலும் தொடர்ந்தாய்  !
            மிக அழகாய்.......   
            காதலின் அர்த்தம் சொன்னாய் !
            காதல் சுவை உணரவைத்தாய் !
            பின் மெல்ல 
            என் சுவாசமாய் மாறினாய் !
            காதலிக்க வைத்தும் விட்டாய் !! 
            ............
            ............
            ............
            எல்லாம் புரிய வைத்த  நீ....
            பிரிவுக்கும்  அர்த்தம் சொல்லி விடாதே !!  


12 comments:

...........
............
............

கோடிட்ட இடத்தை நிரப்புக

 

//எல்லாம் புரிய வைத்த நீ....
பிரிவுக்கும் அர்த்தம் சொல்லி விடாதே !!//

விடுங்க அக்கா , மாமா அப்படியெல்லாம் பண்ண மாட்டார்..! அவரு ரொம்ப நல்லவர்..!!

 

அது என்ன சகோ?

// ............
............
............//

பேக் கிரவுண்ட் ம்யூசிக்கா? :)
இல்ல மானே.. தேனே.. பொன்மானே.. போட்டுக்கணுமா? ;)

 

சௌந்தர் சொன்னது…

//கோடிட்ட இடத்தை நிரப்புக//

அப்ப நாங்க டூயட் பாட போய்ட்டோம் சௌந்தர். அதுதான் அந்த ........!!

 

ப.செல்வக்குமார் சொன்னது…

//விடுங்க அக்கா , மாமா அப்படியெல்லாம் பண்ண மாட்டார்..! அவரு ரொம்ப நல்லவர்..!!//

ஆமாம் ரொம்ப நல்லவர்...அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு..?! :)))

நன்றி செல்வா..

 

Balaji saravana சொன்னது…

அது என்ன சகோ?

//பேக் கிரவுண்ட் ம்யூசிக்கா? :)
இல்ல மானே.. தேனே.. பொன்மானே.. போட்டுக்கணுமா? ;)//

அது எப்படி அவ்வளவு கரெக்டா சொன்னீங்க ....? வெறும் மியூசிக் மட்டும் இல்லை...மரத்த சுத்தி ஒரு பாட்டும் பாடியாச்சு....

நன்றி சகோ :))

 

Mikavum arumai...............

 

//காதலிக்க வைத்தும் விட்டாய் !//

romba nallavar

 

நல்லாய் இருக்கு

 

Jeyamaran...

நன்றி சகோ.

LK...

:))

தியாவின் பேனா...

நன்றி சகோ..

 

நல்லா இருக்குங்க.. :-))