தாயுமானவள்..... !!

           
     
     உன் மீதான என் காதல் 
     உவர்ப்பா, உணர்வா
     உன்மத்தக் காமமா ?
     என்னையே எரி பொருளாக்கி
     எரித்து சுகிக்கும் மேன்மையா ?
     உன்னுடன் இரண்டற 
     ஒன்றிக் கலந்திட 
     ஓம்பிச் செய்யும் தவமா...??
     விளங்கவில்லை நேற்று வரை !! 
     உன் அருகே அமர்ந்து 
     இரு கண் நோக்கி
     அலையாய் புரளும் உன் 
     தலை முடி கோதி
     உச்சியில் இதழ் பதித்த பின் 
     தெளிந்தேன்....அங்கே உன் 
     தாயின் வாசம் கண்டு !! 
     மரணபரியந்தம் 
     உன்னை மனதில் சுமக்கும் 
     நானும் 
     உன் தாயுமானவள்.....!!

   
     

19 comments:

ஓம்பிச் செய்யும் தவமா...??
விளங்கவில்லை நேற்று வரை !////

இன்று விளங்கி விட்டதா...

 

//தாயுமானவள்.....!//
காதலின் உச்சநிலை எனலாமா?!
என் புரிதல் சரியா சகோ..

//மரணபரியந்தம்//
விளக்கம் பிளீஸ்!

 

asiya omar...

thanks friend.

 

சௌந்தர் சொன்னது…

//இன்று விளங்கி விட்டதா...//

விளங்கியதன் விளைவு தான் இந்த கவிதை தம்பி..

 

Balaji saravana சொன்னது…

//காதலின் உச்சநிலை எனலாமா?!
என் புரிதல் சரியா சகோ..//

உங்களின் புரிதல் மிக சரியே....!!

//மரணபரியந்தம்//

//விளக்கம் பிளீஸ்!//

மரணம் சம்பவிக்கும் அந்த கடைசி நொடி வரை என்று அர்த்தம்......சகோ

 

எதோ கொஞ்சம் புரிகிறது .............
தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் .ஆங்கில வழி கல்வி படித்தால் வந்த வினை......
மனதுக்குள் ரொம்ப வருத்த படுவேன் இந்த மாதிரி கவிதை எழுத முடிவதில்லை என்று ..............

பரவாஇல்லை எனக்கு புரிந்த வரையில் நல்ல இருக்கு கவிதை

 

தயுமனவருக்கு போட்டியா தாயுமானவள் அஹா அசத்தல்

 

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

//nice-;))//

வருகைக்கு நன்றி.

 

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//எதோ கொஞ்சம் புரிகிறது .............
தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் .ஆங்கில வழி கல்வி படித்தால் வந்த வினை......//

இந்த வினையால் பாதிக்கபட்டவர்கள்தான் பலரும்....!! :))

//மனதுக்குள் ரொம்ப வருத்த படுவேன் இந்த மாதிரி கவிதை எழுத முடிவதில்லை என்று ....??

அந்த வருத்தத்தை, வார்த்தைகளாய் மாற்றுங்கள்....நடுவில் கொஞ்சம் கட், ஆச்சரியகுறி, கேள்வி குறி போடுங்க...இதோ வந்துவிட்டது ஒரு சோக கவிதை.......!! :))

//பரவாஇல்லை எனக்கு புரிந்த வரையில் நல்ல இருக்கு கவிதை//

கொஞ்சம் புரிஞ்சது என்று சொன்னதுக்கு நிறைய நன்றிகள் சகோ....

 

Jeyamaran சொன்னது…

//தயுமனவருக்கு போட்டியா தாயுமானவள் அஹா அசத்தல்//

நான் சொன்னது சரிதானே...நன்றி சகோ .

:))

 

காதலின் உச்சம் தாய் என்பவள். எடுக்காது கொடுக்க் நினைக்கும் ஒரு உன்னத உறவு. ஒரு காதலியை தாயாக காணும் அல்லது பெறும் பாக்கியம்...ஒரு முக்தி நிலை.

கருவறையில் சுமக்கும் ஒரு தாய் மட்டுமல்ல....தாயுள்ளமும் நேசமும் கொண்ட ஓராயிரம் தாய்கள் உலகத்தில் உண்டு....

தாய் என்பது உணர்வு நிலை....அதை காதலோடு எழுதியிருக்கும் இடத்த்தில்...உங்கள் புரிதல் உச்சம் தொட்டிருக்கிறது.


வாழ்த்துக்கள் கெளசல்யா...!

 

நல்ல தமிழ் கவிதை!! அருமையான சொற்பிரயோகம்!!

 

உங்க காதல் உச்சத்தில்..
நீங்க தாயுமானவள்-ஆக
நிற்பது.. நல்ல இருக்குங்க. :-))

 

dheva...

//காதலின் உச்சம் தாய் என்பவள். எடுக்காது கொடுக்க் நினைக்கும் ஒரு உன்னத உறவு. ஒரு காதலியை தாயாக காணும் அல்லது பெறும் பாக்கியம்...ஒரு முக்தி நிலை.//

நான் காதலியை தாய் என்ற நிலைக்கு உயர்த்தி தான் எழுதினேன் ஆனால் நீங்கள் அந்த பாக்கியம் பெற்றதை முக்தி நிலை என்று மிகவும் புனிதமாக்கி விட்டீர்கள்......

//தாய் என்பது உணர்வு நிலை....அதை காதலோடு எழுதியிருக்கும் இடத்த்தில்...உங்கள் புரிதல் உச்சம் தொட்டிருக்கிறது.//

கவிதையை முழுமையாய் உள்வாங்கியது உங்க வார்த்தையில் தெரிகிறது

நன்றி தேவா.

 

கோவை ஆவி சொன்னது…

//நல்ல தமிழ் கவிதை!! அருமையான சொற்பிரயோகம்!!//

வாசலுக்கு வந்த ஆவிக்கு நன்றி. :)

 

Ananthi சொன்னது…

//உங்க காதல் உச்சத்தில்..
நீங்க தாயுமானவள்-ஆக
நிற்பது.. நல்ல இருக்குங்க. :-)//

கவிதாயினி ஆனந்தி சொன்னா சரிதான்.....நன்றி தோழி.