வர்ணிக்கிறேன்....!



  தூரிகை வழி பயணிக்காத 
  ஓவியமடா நீ ! 
  எழுத்தில் வடிக்க இயலா 
  காவியம் நீ !
  காவியம் உன்னிடம் இறைஞ்சும் 
  உபதேசம் ! 
  கவி வரிக்குள் சிக்காத 
  கவிதை நீ ! 
  
  உன் கேச சுருள் ஊடாய் 
  கோலம் போட ஏங்கும் என் விரல்கள் !
  புருவ அழகில் மயங்கி தொட்டு விட  
  முன் வந்து விழும் இரு முடி கற்றைகள் !
  தூக்கம் இழந்த விழிகளில் சோர்வை மீறி 
  பளீரிடும் மின்னல் கீற்றுகள் !
  அந்த நெருப்பில் குளித்தே 
  குளிர்  விட்டு போச்சு எனக்கு.....!!
 
  புகை எனக்கு பகை என்று 
  சத்தியம் செய்யும் உன்  
  செந்நிற இதழ்கள் !!
  நான் பேசும் வார்த்தைகள் 
  மோட்சம் அடைக்கின்றனவாம் 
  உன் செவி அடைந்ததும் !!
  பைத்தியம் 
  பிடிக்க வைத்த புன்னகை !
  கர்வம் 
  தொலைக்க வைத்த குரல் !
  உன் ..........
  ............
  ...........


  " நிறுத்து....! நிறுத்து....!! 
  வர்ணித்தது போதும்   
  வருகிறான் தேவதூதன் 
  உன்னை அழைத்து செல்ல"


  கடவுளின் குரல் !??




5 comments:

தேவதூதன் வர வில்லை என்றால் இன்னும் வர்ணித்து இருப்பாங்க

 

நல்ல வர்ணனை ... நடுவில் தேவத் தூதன் வந்தது நன்றாக இல்லை..கடவுளும் காதலும் வாழ்வின் அங்கம் ,.இரண்டுமே அவசியம்

 

//தூரிகை வழி பயணிக்காத
ஓவியமடா நீ ! //

//புருவ அழகில் மயங்கி தொட்டு விட
முன் வந்து விழும் இரு முடி கற்றைகள் !//

//புகை எனக்கு பகை என்று
சத்தியம் செய்யும் உன்
செந்நிற இதழ்கள் !!//

வர்ணிப்பு ஆபாரம் சகோ.
ஆமா எதுக்கு இப்போ கடவுள் உள்ள வந்தாரு.. அவரு பாட்டுக்கு அவரு வேலைய பாக்க வேண்டியதுதான.. ;)

 

கவிதை அருமை.

 

நல்ல அழகு தமிழ் கவிதை