இவள் தேவதை....!கோயில், குளம் சுற்றி தவம் 
இருந்தபின் பிறந்த மகன் நான்,   
ஊரே கொண்டாடி மகிழ்ந்தது !
பள்ளி சென்ற முதல் நாள்  
விழா எடுத்தாள் என் தாய் !
வகுப்பில் பாடம், விளையாட்டு 
முதல் இடம் தேடி வந்தது !
எல்லாம் சரியாகத்தான் இருந்தது 
என் பதிமூன்று வயதுவரை.....!!


சொந்த வீடே வித்தியாசமாய், 
வேறாய் தள்ளி வைத்து பார்த்தது ?! 
தோள் அணைத்து நட்பு பாராட்டிய 
உள்ளங்களில் கேலியும் கிண்டலும் 
குழம்பி நின்றேன் புரியாமல்...?!!
தேடாமல் வந்தடைந்தன  
துன்பமும் துயரமும் பரிசுகளாய் !?
ஒளிய இடம் இன்றி 
ஓடி ஒளிந்தேன் எனக்குள் !!


எனக்கும்  அதே பத்துமாத 
கருவறை வாசம் ??
பசி, தூக்கம், கனவு, 
காதல், காமம், கருணை,வலி,
உழைப்பு, துக்கம்,கோபம் 
இருந்தும்... 
மனிதனில் நானில்லை புனிதனாய் 
சொல்கிறது சுற்றம் !!?
என்னை பார்வையால் கொன்று 
தின்றவன் மட்டும் 
எவ்வாறு புனிதன்(மனிதன்) ??


நினைவுகளின் கனம் அழுந்த
பறக்கும் காகித பறவையாய்,   
வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து, கரைந்து 
தொலைத்தேன் என் அடையாளம் !?
பின் தெளிந்தேன்...துயர் தவிர்த்தேன்...
எழுந்தேன்...புது வடிவாய்...
சக்தியின் மகளாய் !!


வாழ்க்கை வலி இருந்தும் 
இனி இவள் 
சிரிக்கும் வித்தை தெரிந்தவள் !
வெறுமை விலக்கி முழுமை  தேடி  
பயணம் கிளம்பிவிட்டேன் !
பாலினம் அற்ற தேவதை நான் !23 comments:

திருநங்கையின் வலிகளை இந்த கவிதையில்உணர முடிகிறது...

 

மனதினை நெகிழசெய்துவிட்டது கவுசல்யா இந்த கவிதை.//வெறுமை விலக்கி முழுமை தேடி
பயணம் கிளம்பிவிட்டேன் !
பாலினம் அற்ற தேவதை நான் !
// இவ்வுண்மை பல ஊடகங்கள் வழி அறிந்து மனம் கனத்துப்போன தருணக்கள் பல.

 

குரோமோசோம்களின் விளையாட்டில் பாலினமற்றவர்களாக மாறிடும் அவர்களின் நிலையை வலியோடு சொல்லியிருக்கிறீர்கள் சகோ!

புரோபைல் போடோ அருமை!

 

உணர்வுள்ள கவிதை அருமை.

 

//எனக்கும் அதே பத்துமாத
கருவறை வாசம் ??
பசி, தூக்கம், கனவு,
காதல், காமம், கருணை,வலி,
உழைப்பு, துக்கம்,கோபம்
இருந்தும்...
மனிதனில் நானில்லை புனிதனாய்//

பிறக்கும் போது இருவேறு பாலினமாகவே பிறந்து வளர்கின்றனர் , வளரவளர பாலினம் மாறி திருநங்கையாக உறுமருகின்ற்றனர் . இதில் அவர்கள் செய்த தவறு என்ன இருக்கிறது ? கடவுள் படைப்பில் கடவுளை குறைகூர்வதைவிட்டுவிட்டு எத்தனைஎத்தனை பலிசொல்கள் . மணம் கனக்கிறது .

 

என் முதல் வருகை நல்ல அற்புதமான் மனதை உருக செய்த கவிதை.

www.vijisvegkitchen.blogspot.com

 

அருமையான மனதைத் தொட்ட கவிதை

 

வாழ்க்கை வலி இருந்தும்
இனி இவள்
சிரிக்கும் வித்தை தெரிந்தவள் !
வெறுமை விலக்கி முழுமை தேடி
பயணம் கிளம்பிவிட்டேன் !
பாலினம் அற்ற தேவதை நான்//


அருமையான கவிதை கெளசல்யா. சொல்ல வார்த்தைகளில்லை..

 

நல்லா இருக்கு உங்க கவிதை,
http://mxstar.blogspot.com/2010/10/blog-post.html

 

சாதாரணமாகப் படித்துக்கொண்டிருந்தேன்.
கடைசி 6 வரிகள் என்னை மீண்டும் படிக்க வைத்தன.
அழுத்தமான வரிகள். வாழ்த்துக்கள்.

 

சௌந்தர் சொன்னது…

//திருநங்கையின் வலிகளை இந்த கவிதையில்உணர முடிகிறது...//

புரிதலுக்கு நன்றி சௌந்தர்.

 

ஸாதிகா சொன்னது…

//மனதினை நெகிழசெய்துவிட்டது கவுசல்யா இந்த கவிதை. இவ்வுண்மை பல ஊடகங்கள் வழி அறிந்து மனம் கனத்துப்போன தருணக்கள் பல//

உங்களின் உணர்வுக்கும் புரிதலுக்கும் நன்றி தோழி. வருகைக்கு மகிழ்கிறேன் .

 

Balaji saravana சொன்னது…

//குரோமோசோம்களின் விளையாட்டில் பாலினமற்றவர்களாக மாறிடும் அவர்களின் நிலையை வலியோடு சொல்லியிருக்கிறீர்கள் சகோ!//

எழுதும் போதே அதை நானும் உணர்ந்தேன் சகோ.

//புரோபைல் போடோ அருமை!//

மகிழ்கிறேன்.... நன்றி

 

asiya omar சொன்னது…

//உணர்வுள்ள கவிதை அருமை.//

நன்றி தோழி

 

jothi...

வருகைக்கு நன்றி.

 

Vijiskitchen சொன்னது…

//என் முதல் வருகை நல்ல அற்புதமான் மனதை உருக செய்த கவிதை.//

வருகைக்கு நன்றி தோழி.

 

தியாவின் பேனா சொன்னது…

//அருமையான மனதைத் தொட்ட கவிதை//

நன்றி சகோ.

 

அன்புடன் மலிக்கா சொன்னது…

//அருமையான கவிதை கெளசல்யா. சொல்ல வார்த்தைகளில்லை..//

நன்றி தோழி.

 

AT.Max சொன்னது…

//நல்லா இருக்கு உங்க கவிதை,//

வருகைக்கு நன்றிங்க ..

 

இந்திரா சொன்னது…

//சாதாரணமாகப் படித்துக்கொண்டிருந்தேன்.
கடைசி 6 வரிகள் என்னை மீண்டும் படிக்க வைத்தன.
அழுத்தமான வரிகள். வாழ்த்துக்கள்.//

உங்களின் முதல் வருகைக்கும் தொடருவதற்கும் நன்றி தோழி

 

வலி கொண்ட வாழ்க்கை இறைவனின் திருவிளையாடலா. ஆரம்ப கரு பரிசோதனை இதை தீர்க்குமா?

 

வாழ்க்கை வலி இருந்தும்
இனி இவள்
சிரிக்கும் வித்தை தெரிந்தவள் !

அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன்

பகிர்வுக்கு நன்றி

 

//வலி இருந்தும்
இனி இவள்
சிரிக்கும் வித்தை தெரிந்தவள் !//

கவிதை அருமை..! ரசித்து வாசித்தேன்!

-
DREAMER