இப்படிக்கு உன்....!


வாசல் தளத்தில் இதுவரை 50  பதிவுகளை தாண்டி 51 வது  பதிவு இது......எனக்கு தெரிந்த பல விசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தான் இந்த தளத்திலும் எழுத தொடங்கினேன்.  ஆனால் கவிதை என்ற பெயரில் என்று கிறுக்க தொடங்கினேனோ அன்றில் இருந்து இன்று வரை என்னை வேற ஏதும் எழுத விடாமல என் கையை கட்டி போட்டு விட்டது எனக்குள் இருக்கும் காதல்...இந்த பதிவிலும் என்னை புயலாய் கலங்கடித்து கொண்டிருக்கும் காதலை தான் எழுத போகிறேன் ஆனால் கவிதை இல்லை கடிதம்....?!

கவிதையில் சில நேரம் பொய் கலப்பிருக்கும்..ஆனால் கடிதம் அப்படி இல்லை...மனதில் இருந்து வந்து விழும் வார்த்தைகள் அவை.....

********************************************************
என் பிரிய ராட்சஸா,  

உன்னை எப்பவும் நினைச்சிட்டு இருக்கிற நான் எழுதுவது கடிதமே தான்... பல கவிதைகள் நான் எழுதியும் இன்றுவரை 'நல்லா இருக்கு' என்ற ஒரு வார்த்தையுடன் உன் மறுமொழியை நிறுத்திக்கொண்டாய்.  உன்னை அதிகம் பேச வைக்கவே இந்த கடித முயற்சி...(கடிதத்திற்கு பதில் என்ற ஒன்று எழுதிதானே  ஆகவேண்டும்)

"வசந்தத்தை அறிமுக படுத்தினாய் என்றே இதுவரை எண்ணினேன்.....
அந்த வசந்தமே நீ என்பதை உணராமல்...!!"

உன்னை மலர் என்று சொல்லி
நீ வாடுவதை நான் விரும்பவில்லை !
நதி என்று சொல்லி நீ வேறிடம்
செல்வதை நான் விரும்பவில்லை !
நிலவு என்று சொல்லி பலரும்
உன்னை ரசிப்பதை நான் விரும்பவில்லை !
வேறு எதுவாகவும் இல்லாமல்
நீ
எனதாக மட்டுமே....
என்
நிழலாக மட்டுமே இரு !!

என்னை தவிர வேறு யாரையும் நீ விரும்ப கூடாது என்பது என் சுயநலம் தான்....ஆனால் என்னை போல வேறு யாரும் உன்னை இந்த அளவிற்கு விரும்பமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை..... முதல் முறை உன்னை நான் சந்தித்த நொடி எதுவென்று இன்றுவரை எனக்கு புலப்படவில்லை...... உன் அனுமதி பெற்ற பின்பே என் தாயின் கருவறை வந்தேன் என்று சொல்லி சிரித்தாய் ஒருநாள்......மீண்டும் உன் அனுமதி பெற்ற பின்பே கல்லறை சென்று சேர வேண்டும், சொல்லி மகிழ்கிறேன் எனக்குள் இன்று......!

"வாழ்க்கை விநோதமானதுதான்.......   உன்னை நான்  படிக்கவேண்டும் .....என்று  வைத்துவிட்டு, விருப்பம்  இல்லாமல் வேறொரு பரீட்சையை  எழுத வைக்கிறது....!!"

எனக்கு எல்லாம் தெரியும்
உன்னை பற்றி......
உனக்கு என்னை பிடிக்குமா
என்பதைத் தவிர....?!

உனக்கு என்னைப்பற்றி
ஒன்றும் தெரியாது....
உன்னை நான் விரும்புகிறேன்
என்பதைத் தவிர....!!

என்னவனே....நீ உறங்கும் நேரத்தில் உன் முகம் தேடி அலையும் என்னை என்று புரிந்து கொள்வாய்....? விடியும் நேரம் உறங்க சென்றும் கனவில் வந்து எழுப்புகிறாய்...! உன்னிடம்  என்ன பேசலாம்  என்று யோசித்தே பகலும் முடிந்து விடுகிறது. 

விரைவில் நாம் பிரிந்து விடுவோம் என்று நேற்று கனவில் மரணம் வந்து சொல்லிவிட்டு செல்கிறது.....

சாவதை பற்றி
எனக்கு கவலை இல்லை
சாவு ஒரு முறை !
வாழ்வதை பற்றிதான்
எனக்கு அக்கறை
தினம் தினம்
வாழ்ந்தாகணும்
அதுவும் உன்னுடன் !!

நீ வாழும் பூமிக்கு நான் வருவேன்.....அங்கே காற்றில் கலந்திருக்கும் உன் சுவாசத்தை நான் சுவாசித்து.......என்னை புதுப்பித்துக்  கொள்ளவேண்டும்.....! 

இப்படிக்கு 

அழகான பதிலுக்குக்காய்  காத்திருக்கும் 
உன் பிரிய சகி.  


(அடடா.........!!  கடிதம் என்று  நினைத்து தான் எழுதினேன்....ஆனா எழுதியதை மறுபடி படித்து பார்க்கும் போது.....அப்படி தெரியவில்லையே.....யாராவது சொல்லி தாங்களேன் எப்படி கடிதம் எழுதுவது என்று ப்ளீஸ்ஸ்......!!) 
  50 வது பதிவு வரை வந்து எனக்கு பின்னூட்டம் இட்டு என்னை தொடர்ந்து உற்சாக படுத்தி கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லி கொள்கிறேன்.

சௌந்தர் 
Balaji Saravana
தேவா
LK 
ஹேமா 
கணேஷ் 
ஆதிரன் 
இம்சை அரசன் பாபு
நிலாமதி 
சித்ரா 
ஆனந்தி 
ஆசியா உமர் 
கே. ஆர்.செந்தில் 
வெங்கட் நாகராஜ் 
எஸ்.கே
மங்குனி அமைச்சர்
ப.செல்வகுமார்
விஜய்
டெரர் பாண்டியன் 
ரமேஷ் 
ஜெயமாறன்
ஆர்.கே.சதிஷ்குமார்
சசிகுமார்
சே.குமார்
ஜீவன் பென்னி 
அகமது இரசாத்
யாதவன் 
அன்பரசன்
கௌதம்
சி.கருணாகரசு
Jey
ஆர்.ஞானசேகரன் 
கார்த்திக் சிதம்பரம் 
விஜி 
பின்கி ரோஸ்
விக்னேஸ்வரி
காயத்ரி 
சங்கவி 
அன்புடன் மலிக்கா 
முனைவர் இரா.குணசீலன்
சுந்தரா
சுபத்ரா
 சேட்டைக்காரன்
ராசராசசோழன் 
மேனகா சாதியா
அப்பாவி தங்கமணி
S .மகராஜன்  
வடுவூர்  குமார்
புதிய மனித
கண்ணகி
கோவைகுமரன்
சௌமியா ஸ்ரீநிவாசன் 
தியாவின் பேனா 
திவ்யாம்மா 
வேங்கை
உழவன்
உடுமலை சிவா
தினேஷ் குமார்
வேலு G
இளம் தூயவன்
பதிவுலகில் பாபு 
A .சிவகுமார்
தமிழரசி
hamarahana  
வழிப்போக்கன் 
ரியாஸ்
M .அப்துல்காதர்
போகன்
மகாதேவன்
சந்ரு
பிரியா.r
வார்த்தை 
DREAMER
டெனிம்

மற்றும் வோட் அளித்தவர்களுக்கும்,  இந்த தளத்தில் என்னைத் தொடர்பவர்களுக்கும் என் அன்பான நன்றிகள். 
25 comments:

விரைவில் நாம் பிரிந்து விடுவோம் என்று நேற்று கனவில் மரணம் வந்து சொல்லிவிட்டு செல்கிறது..///

விடுங்க விடுங்க கனவுபலிக்காது கவிதை எழுதவில்லை கடிதம் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு கவிதையில் கடிதம் எழுதிவிட்டிர்கள்

 

கவிதையில் சில நேரம் பொய் கலப்பிருக்கும்..ஆனால் கடிதம் அப்படி இல்லை...மனதில் இருந்து வந்து விழும் வார்த்தைகள் அவை.....////

இதுவே ஒரு பொய் சில நேரம் இல்லை பல நேரம்...

 

கடிதக் கவிதை அருமை . வாழ்த்துக்கள்

 

நடத்துங்க... நடத்துங்க...

 

போன பதிவில் சொல்ல மறந்து விட்டேன். ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்

 

அட... 50 பதிவு எழுதீட்டீங்களா? வாழ்த்துக்கள்...!

நிறைய எழுதுங்க... ! உரை நடை கவிதை அருமை...!

 

கவிதையாகிய கடிதம்
காவியமாகிய காதல்...........

 

சௌந்தர் சொன்னது...

//விடுங்க விடுங்க கனவுபலிக்காது கவிதை எழுதவில்லை கடிதம் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டு கவிதையில் கடிதம் எழுதிவிட்டிர்கள்//

நான் கண்ட சில கனவுகள் பலித்து இருக்கிறதே....! :))

கடிதம்னு நினைச்சிதான் எழுதினேன்...கடைசியில் தேவா சொன்ன மாதிரி உரைநடை கவிதை ஆகி விட்டது...ஆனா கடிதம் எழுதாம விடுறதா இல்லை சௌந்தர்...மறுபடி முயற்சி செஞ்சி பார்க்கணும்....

:)))

 

சௌந்தர் சொன்னது…

//இதுவே ஒரு பொய் சில நேரம் இல்லை பல நேரம்...//

ரொம்ப கரெக்ட்.

 

LK சொன்னது…

//கடிதக் கவிதை அருமை . வாழ்த்துக்கள்//

உங்க வாழ்த்திற்கு நன்றி.

 

வார்த்தை சொன்னது…

//நடத்துங்க... நடத்துங்க.//

ம்...நடத்திட்டா போச்சு...! வருகைக்கு நன்றி சகோ.

 

home சொன்னது…

//good one//

thanks

 

dheva சொன்னது…

//அட... 50 பதிவு எழுதீட்டீங்களா? வாழ்த்துக்கள்...!//

ஏதோ இரண்டு கவிதைக்கு மட்டும் வந்திட்டு.... மறுபடி இப்ப வந்தா இப்படித்தான் ஆச்சரிய பட வேண்டி இருக்கும்.....!!

//நிறைய எழுதுங்க... ! உரை நடை கவிதை அருமை...!//

இந்த மாதிரி உரைநடை நிறைய எழுதணும் என்று வாழ்த்துறீங்களா....?! :))

உங்களின் வாழ்த்திற்கு நன்றி.

 

dineshkumar சொன்னது…

//கவிதையாகிய கடிதம்
காவியமாகிய காதல்..//

அட..இது நல்லா இருக்கே..... அழகான, அர்த்தத்துடன் இரு வரிகள்.....

ரசித்தேன் நன்றி சகோ.

 

வாழ்த்துக்கள் சகோ..
மன்னிக்கணும் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..
//யாராவது சொல்லி தாங்களேன் எப்படி கடிதம் எழுதுவது என்று ப்ளீஸ்ஸ்......!!//
இவ்வளோ அழகா கடிதம் எழுதிட்டு இன்னமும் என்னா தன்னடக்கம்.. முடில சகோ! :)

 

Balaji saravana சொன்னது…

//வாழ்த்துக்கள் சகோ..மன்னிக்கணும் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு..//

கொஞ்சம் இல்லை ரொம்பவே லேட் சகோ.....

//இவ்வளோ அழகா கடிதம் எழுதிட்டு இன்னமும் என்னா தன்னடக்கம்.. முடில சகோ! //

இதை கடிதம்னு சொன்னதால் மன்னித்தேன்.....

:)))

நன்றி.

 

வாழ்த்துக்கள் அக்கா....நிறையா எழுதுங்கள்...


சரி இந்த கவிதைன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன அக்கா))))

 

ganesh சொன்னது…

//வாழ்த்துக்கள் அக்கா....நிறையா எழுதுங்கள்...
சரி இந்த கவிதைன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன அக்கா))))//

நானே ரொம்ப நாளா தேடிட்டுத்தான் இருக்கிறேன்......! ஒண்ணு பண்ணு தேவானு ஒருத்தர் இருக்கிறார் அவர்கிட்ட கேட்டு பாரேன்....!! அவருக்கு ஒருவேளை தெரிஞ்சிருக்கும்....!

:))

 

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் கௌசல்யா :)

 

/////உனக்கு என்னைப்பற்றி
ஒன்றும் தெரியாது....
உன்னை நான் விரும்புகிறேன்
என்பதைத் தவிர....!!////
மிகவும் அருமையாக இருக்கிறது சகோதரம்...

 

சுந்தரா சொன்னது…

//ஐம்பதுக்கு வாழ்த்துக்கள் கௌசல்யா :)//


வாழ்த்திற்கு நன்றி தோழி.

 

ம.தி.சுதா....

வருகைக்கு நன்றிங்க...

 

வாவ்.. 50 -வது பதிவு.. வாழ்த்துக்கள் கௌசல்யா..!! :-))
கவிதைக் கடிதம் நல்லா இருக்குங்க..

 

கடிதம்
கவிதையாக
மாறினாலும்
அழகாகதான்
இருக்கிறது..