நிராசை...!   நிலவு குளிக்கும்  இரவு நேரம்
   மொட்டை மாடி சுவர் அமர்ந்து
   நிலவில் நம் 
   முகம் தேட வேண்டும்....!!
   உணவுடன் காதலை கலந்து  
   உனக்கு ஊட்டி...நீ உண்ணும் 
   அழகில் என் வயிறும் நிறையும் 
   அற்புதம் நிகழ வேண்டும் ....!!
   வரும் விக்கலுக்கு பதறி
   உன் தலை தட்டி
   தண்ணீர் 
   நான் குடிக்க வேண்டும் .....!!
   உன் தோள் சாய்ந்து 
   ஊர் கதை விடியும்  வரை பேசி, 
   விடிந்த பின் மடி சாய்ந்து 
   உறங்க வேண்டும்.....!! 
   உன் கை கோர்த்து 
   நடந்தே...உலகம் முழுதும் 
   சலிப்பின்றி 
   சுற்ற வேண்டும் .....!!
   பெய்யும் மழை நீ ரசிக்க 
   மழை ரசிகை நான்.. 
   மழை  விடுத்து 
   உன்னை ரசிக்கவேண்டும்   .....!!
   நான் கண்ட கனவெல்லாம்
   நனவாக ஆசைகொண்டு 
   முயன்றும் 
   முடியாமல் போய்விட்டது .....!!
   .............
   .............
   விரும்பி வெறுக்கிறாய்.....!??6 comments:

வரும் விக்கலுக்கு பதறி
உன் தலை தட்டி
தண்ணீர்
நான் குடிக்க வேண்டும் .....!!////

அட டா என்ன ஒரு ஆசை

விரும்பி வெறுக்கிறாய்.....!??///

ம்...

 

வணக்கம்
சுவாசிக்கும் ஓசை
சுதாரித்த ஆசை

 

நல்லா இருக்கு

 

//மழை விடுத்து
உன்னை ரசிக்கவேண்டும்//
அழகு மழையில் நனைய ஆசையா சகோ? :)

//விரும்பி வெறுக்கிறாய்.....!?//
ஏன் ஏன்..அழகா வர்ணிச்சுட்டு கடைசில இப்படி முடிச்சிட்டீங்களே சகோ! :(

 

அருமையாக இருக்குது

 

என் ஆசைகளும் இவை தான்