நாளை......!

  
  
  ஒரு புன்னகை, ஒரு சொல் 
  ஒரு பார்வை.....
  எதிர்பார்ப்பு  அதீதம் தான்
  சிறுபிள்ளைதானோ  நான்..?! 
  சில்லுசில்லாய் சிதறடித்தும் 
  சிதறவில்லை என் மனம்  !
  முள்ளு முள்ளாய் குத்தியும்
  கிழியவில்லை என் இதயம் !
  துண்டுதுண்டாய் வெட்டியும் 
  உடையவில்லை என் காதல் !
  உன் பொறுமையும் என் 
  வெறுமையும் நல்லதே !!
  ................... 
  நாளை
  கல்லறையின் மேல் 
  காத்திருக்கும் உனக்கான
  என் வார்த்தை !!
  காற்றில் கலந்திருக்கும்  
  சுவாசம் உணர்த்தும்
  மறந்த என் அன்பை....!!
  கண்ணீர் வழிந்தோடிய 
  தடம் பார்ப்பாய்
  நீ திரும்பும் வழியில் !!
  வீடு வந்த பின்னும் 
  தேடுவாய், நீ தவறவிட்ட 
  என்னை...!!?  


13 comments:

நாளை
கல்லறையின் மேல்
காத்திருக்கும் உனக்கான
என் வார்த்தை !!/////

இவன் இந்த ஜென்மத்தில் தப்பி விட்டான் என்ற வார்த்தை தானே?

 

//துண்டுதுண்டாய் வெட்டியும்
உடையவில்லை என் காதல் !
உன் பொறுமையும் என்
வெறுமையும் நல்லதே //
அதீத வலியின் உச்சம்..

அந்த இரண்டாவது மனதை என்னவோ பண்ணுது சகோ!
ரொம்ப அழுத்தமாவும் அதே சமயம் ஆழமாகவும் தைக்குது..
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு சகோ!

 

irandum alagaai irukkirahu kousalya

 

நல்ல கவிதை... இன்றுதான் உங்கள் இரண்டு வலைப்பதிவுகளையும் கண்டேன்... இனி பின்தொடர்கிறேன்...

 

75 வது சொந்தம் நான் தான் :)

 

//கண்ணீர் வழிந்தோடிய
தடம் பார்ப்பாய்
நீ திரும்பும் வழியில் !!//
அழகான வரிகள் கௌசல்யா!

 

என்ன அருமை
சூப்பர் பதிவுங்க

 

this is simply good....congrats.

 

நல்லா இருக்குங்க...!

 

அருமையாக இருக்குதுங்க.... கவிதைகேற்ற படங்களை அழகாக செலக்ட் பண்றீங்க!

 

ஒவ்வொரு வரியும் அருமை
அழகான ரசனை படமும் கவிதைக்கேற்றார்போல்
சூப்பர்
கண்ணீர் வழிந்தோடிய
தடம் பார்ப்பாய்
நீ திரும்பும் வழியில் !!
வீடு வந்த பின்னும்
தேடுவாய், நீ தவறவிட்ட
என்னை...!!? //

மனதைத்தொட்ட வரிகள்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
http://www.urssimbu.blogspot.com/