ஒரே நொடியில்....!

வரும்போது... 
குழந்தைக்கு மறக்காமல் 
வாங்கி வந்த சாக்லேட் !
நைட் ஷோ 
மனைவியுடன் எந்திரன் பார்க்க 
வாங்கி வந்த டிக்கெட் !
நாளை 
செல்ல வேண்டிய 
முக்கிய உறவினரின் திருமணம் !
தீபாவளியை 
சிறப்பாய் கொண்டாட 
வாங்கிய புது உடைகள், 
பட்டாசுகள், இனிப்புகள் !
அடுத்த மாதம் செல்ல 
ஏற்பாடு செய்திருந்த
வெளிநாட்டு பயணம் !
கொஞ்ச நேரத்தில் 
கலந்து கொள்ளவிருந்த 
நண்பரின்  பிறந்த நாள் பார்ட்டி ! 
எல்லாம் எல்லாம் 
தூள் தூளாய் 
சிதைந்து  விட்டது ஒரே நொடியில் ?!
திட்டமிடப்படாத கொலையால்
..............
..............
..............
விபத்து !!






17 comments:

எல்லாம் ஒரே நொடியில் நடந்து விடும் :(

 

ஒரு நொடியில்....

கனவுகள் கலந்து போனது.....!

விழிப்புணர்வு கொடுக்கும் சூப்பர்ப் கவிதை கெளசல்யா..! ஆமா வர வர கவிதை நல்லா எழுதிறீங்க...!

 

Oops....so true sis. நாம மட்டுமில்லாம நம்மளை சுத்தியிருக்கறவங்க வாழ்க்கையையும் சேர்த்து பாழாக்குகிறது அஜாக்கிரதையால் ஏற்படும் விபத்துக்கள்:( நல்ல கவிதை :)

 

அழகழகாய் சென்று கொண்டிருக்கும் வரிகள்
ஒரே நொடியில்....!
பொட்டில் அடித்தாற்போல்
பட்டென்று நிற்கிறது
வலி சுமந்து!

 

ஒரே நொடியில் அனைத்தும் சிதறிப் போகும் அவலம்..
கவிதை வடிவம் அருமை சகோ!

 

vidhiyai yaaralayum maatha mudiadhu..
we can't change vidhi. nadakuradhu nadandhey theerum.. nalla padhivu.

 

தைக்கிறது.

('கொலையால்' - அங்கேயே முடித்திருக்கலாமோ?)

 

இதென்ன கொடுமை..

 

சௌந்தர் சொன்னது…

//எல்லாம் ஒரே நொடியில் நடந்து விடும் :(//

ஒரே நொடியில் அனைத்தையும் புரட்டி போட்டு விடும்.

 

dheva சொன்னது…

//ஒரு நொடியில்....கனவுகள் கலந்து போனது.....!

விழிப்புணர்வு கொடுக்கும் சூப்பர்ப் கவிதை கெளசல்யா..! ஆமா வர வர கவிதை நல்லா எழுதிறீங்க...!//

கவிஞரின் வாழ்த்திற்கு மிக்க நன்றி..

 

அன்னு சொன்னது…

//Oops....so true sis. நாம மட்டுமில்லாம நம்மளை சுத்தியிருக்கறவங்க வாழ்க்கையையும் சேர்த்து பாழாக்குகிறது அஜாக்கிரதையால் ஏற்படும் விபத்துக்கள்:( நல்ல கவிதை :)//

வருகைக்கு நன்றி தோழி. தினம் கேள்விப்படும் ஒரு துயர சம்பவம் இது. அருகில் நடந்த ஒரு விபத்தை பார்த்த போது மனதில் தோன்றிய ஒரு வலி தான் இதை எழுத வைத்தது தோழி.

 

சுல்தான் சொன்னது…

//அழகழகாய் சென்று கொண்டிருக்கும் வரிகள்
ஒரே நொடியில்....!
பொட்டில் அடித்தாற்போல்
பட்டென்று நிற்கிறது
வலி சுமந்து!//

அழகாய் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடிரென்று குறுக்கிடும் இத்தகைய விபத்துகள் வாழ்க்கையையே வலியாக மாற்றி விடுகிறதே...!? வருகைக்கு நன்றி சகோ.

 

Balaji saravana சொன்னது…

//ஒரே நொடியில் அனைத்தும் சிதறிப் போகும் அவலம்..
கவிதை வடிவம் அருமை சகோ!//

உண்மைதான். உங்களின் வருகை இந்த வாசலுக்கு இனிமை சகோ.

 

Dhosai சொன்னது…

//vidhiyai yaaralayum maatha mudiadhu..
we can't change vidhi. nadakuradhu nadandhey theerum.. nalla padhivu.//

விதியை மதியால் வெல்லமுடியும் என்று சொல்வார்களே....!? எதற்கும் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கலாம், அவசரம் என்பதை தவிர்த்து வண்டியில் செல்லும் போது கொஞ்சம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

 

அப்பாதுரை சொன்னது…

//தைக்கிறது.

('கொலையால்' - அங்கேயே முடித்திருக்கலாமோ?)//

இந்த வாசலுக்கும் நீங்கள் வருகை தந்தமைக்கு நன்றி சகோ. நீங்கள் சொன்னபடி அங்கேயே கூட முடித்து இருக்கலாம்... உங்களின் புரிதலுக்கு மகிழ்கிறேன்.

 

asiya omar சொன்னது…

//இதென்ன கொடுமை..//

இந்த கொடுமை தானே தினம் நடந்து கொண்டிருக்கிறது தோழி..நேரில் ஒரு விபத்தை பார்த்ததால் எழுதப்பட்ட ஒன்று தான் இது..

 

அன்றாட வாடிக்கையாகிப் போன இந்த விபத்து குறித்து சொன்ன விதம் அருமை! இன்று கூட ஒரு ஆக்ஸிடெண்ட், பெருநாள் கொண்டாடிவிட்டு உறவுகளைக் காண காரில் சென்ற‌ ஒரே குடும்பத்தின் 5 பேர் பலி :( என்னத்த சொல்ல... ?