தவிப்பு....!

   காதலே
   உனக்கும் வெட்கம் வரும்
   என்னவன்  சிரித்தால் !
   இன்று எனக்கு 
   கோபம் வருகிறது
   அவன் சிரிக்க மறந்ததால் !
   ஏன்
   இந்த கள்ள மௌனம்
   எங்கே கற்றாய்......?!
   உன் இருப்பை
   உறுதி படுத்த நான்
   எடுக்கும் பிரயத்தனம்
   கொஞ்சமா.....?!
   நழுவியே செல்கிறாய்
   நதி நீர் ஆடும்
   மீனை போல !
   அன்பு தூண்டிலை விட
   வலியதா உன் பணி...
   மாட்டி கொள்கிறாய் 
   சுலபமாக அங்கே !
   தவிர்த்து  
   தவிக்க விடாதே
   வேண்டாம் பெண் பாவம்
   பாவம் பெண் !
   கருணை பார்வை 
   ஒன்று வீசிச் செல் 
   உயிர்ப்பித்து விடும் 
   துடிப்பை மறந்த  இதயம் !!?

14 comments:

ஏன்
இந்த கள்ள மௌனம்
எங்கே கற்றாய்......?!////

ஓஹ அந்த ஸ்கூல் பெயர் தெரிந்தால் நீங்களும் அங்கே போய் கற்று கொள்ள போறிங்களா?

 

//கருணை பார்வை
ஒன்று வீசிச் செல்
உயிர்ப்பித்து விடும்
துடிப்பை மறந்த இதயம் !!?//

super...

 

சூப்பர் கவிதை அருமையான வரிகள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 

//நதி நீர் ஆடும்
மீனை போல//

//பெண் பாவம்
பாவம் பெண்//

சகோ.. சூப்பர்! ரொம்ப ரசிச்சேன் இதை.. :)

//கருணை பார்வை
ஒன்று வீசிச் செல்
உயிர்ப்பித்து விடும்
துடிப்பை மறந்த இதயம்//

நீண்ட வெய்டிங்...

 

arumaiyana kavithai kavithakku image uyir kodukkirathu
image enga kidaikirathu...............

 

தவிப்பு..... நல்லா இருக்குங்க.. :-))

 

சௌந்தர் சொன்னது…

//ஓஹ அந்த ஸ்கூல் பெயர் தெரிந்தால் நீங்களும் அங்கே போய் கற்று கொள்ள போறிங்களா?//

இதை கத்துக்க ஸ்கூல் வேற போகணுமா...?? சரிதான்...

 

THOPPITHOPPI சொன்னது…

//அருமையான கவிதை//

வருகைக்கு நன்றிங்க...

 

மதுரை சரவணன் சொன்னது…

//super...//

நன்றி சகோ.

 

சசிகுமார்...

நன்றி சசி.

 

Balaji saravana சொன்னது…

//பெண் பாவம்
பாவம் பெண்//

//சகோ.. சூப்பர்! ரொம்ப ரசிச்சேன் இதை.. :)//

ரசனைக்கு மகிழ்கிறேன் சகோ.

//நீண்ட வெய்டிங்..//

ம்...ஆமாம்பா நீண்ட வெய்ட்டிங் தான்...

:)))

 

Jeyamaran சொன்னது…

//arumaiyana kavithai kavithakku image uyir kodukkirathu
image enga kidaikirathu..//

வருகைக்கு நன்றி சகோ.

தம்பி சௌந்தர் selection அந்த pic ....!

 

Ananthi சொன்னது…

//தவிப்பு..... நல்லா இருக்குங்க.. :-))//

ரசனைக்கு மகிழ்கிறேன் தோழி.

 

அருமையான கவிதை..