இனியது காதல்......! தொடர் 1


வாழ்க்கையில் காதலை சந்திக்காதவர்கள், அறியாதவர்கள் என்று யாரும் இல்லை. பெண்ணாக 'என் பார்வையில் காதல்' என்பதை பற்றி எழுத வேண்டும் என்று நீண்டநாளாய் ஒரு  எண்ணம். அதற்கு நேரம் சரியாக அமையாததால் தான் கவிதையாக  காதலை சிதறடித்து கொண்டிருந்தேன்.....!!?

மனதிற்கு சுகமான, அதே நேரம்  நினைக்கும் போதெல்லாம்  மனதில் உற்சாகம்  கொப்பளிக்கும் அற்புத உணர்வை வார்த்தைகளில் கொண்டு வர இயலுமா என்ற ஒரு தயக்கம் இருந்ததால் தான் இதுவரை எழுதவில்லை. இனியும் தாமதித்தால் என் மனதில் இருக்கும் காதல் 'காலாவதியாகிவிடுமோ' என்று தான் எழுத தொடங்கிவிட்டேன். காதல் என்றாலே அபத்தமும் அவஸ்தையும் நிறைந்ததுதான் என்று சொல்வாங்க...அது மாதிரி இந்த தொடரிலும் ஏதும் அபத்தம் இருந்தால் அழகாய் சுட்டிகாட்டுங்கள்....! (உங்களை நம்பித்தான் இந்த கடலில் குதிக்கிறேன், நீந்த சிரமபடுறேனு தெரிஞ்சா கொஞ்சம் கரை சேர்த்து  விட்டுடுங்க.....!!)  


" என் கை விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி, உன் கை விரல்கள் கொண்டு  கோர்க்க வேண்டும் என்பதற்காகதான் "

'காதல்' இந்த ஒரு வார்த்தையில் தான் இந்த உலகம் இன்னும் அழகாய், இளமையாய் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னொரு நிலவாய் காதலியை வருணிக்க முடிகிறது........!வானமாய் மாறி அந்த நிலவை கையில் ஏந்திக்கொள்ள செய்கிறது......! காதல் வந்த பின் தான் நிலா என்ற ஒன்று வானில் இருப்பதே தெரிகிறது.....! பார்க்கும் எல்லாம் புதிதாய் , அழகாய் மாறிவிடுகிறது......பரீட்சையில் தமிழை சொதப்பியவர்கள் கூட காதல் வந்த பின் இலக்கிய நயத்துடன் கவிதை எழுதுகிறார்கள்....பார்க்கும் அத்தனையிலும் தன் காதலி/காதலன்  முகம் தேடுகிறார்கள்......!!


உடல் ரீதியாக  பார்த்தால், காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற இயல்பான ஒரு உணர்வு. அறிவியல் ரீதியாக  பார்த்தால் காதல் என்பது சுரப்பிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். பருவம் வந்த அனைவருமே  காதல் வயபடுவார்கள்  என்றாலும் சிலர் ரொம்ப பிடிவாதமாக விலகி இருப்பார்கள்....

சிலர் நினைக்கலாம் புத்திசாலி பெண்கள்/ஆண்கள் காதலில் ஈடுபட மாட்டார்கள் என்று...!?  ஆனால் காதல் உணர்வு சம்பந்த பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை.

அதாவது நடப்பதை Cerebral cortex (பகுத்தறிவு மூளை ) வேடிக்கை தான் பார்க்கும். காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் வெவ்வேறு வேதிப்பொருள்களே . அவை ஈர்க்கப்படும் போது நிகழும் மாற்றங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும் , பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.......இந்த நிலை ஏற்பட்டு விட்டால் புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்து விடும்.  

காதல் என்பது அப்பட்டமான 'சுயநலத்தின் வெளிபாடு' என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இது உண்மையும் கூட இந்த சுய நலம் தனக்குரியவன்  தன்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் தன்னை மட்டுமே முக்கியமானவளாக கருத வேண்டும் என்பதை போன்றது தான். தன் காதலனை தனக்குள் முழுதும் இழுத்து வைத்து கொள்வதை   போன்ற அழகான சுயநலம்.....!!

இந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான்.  ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில்  வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!?

காதல் இருந்தால் கண்ணுக்கும் இமைக்கும் நடுவில் கூட வசிக்க  முடியும் என்பார்கள் காதலர்கள்.....!!

நான் : ரயில பிரயாணம் எப்படி ? நல்ல படியா இருந்ததா ??

நண்பர்  : அப்பர் பெர்த் குடுத்திடாங்க , அதான் கஷ்டமாப்போச்சு !

நான் : லோயர் பெர்த்காரங்கக் கிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியது தானே ?

நண்பர்  : நானும் அதைத் தான் யோசிச்சேன். ஆனா கடைசி வரைக்கும் லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!!? 

நான் : ????

உணர்வுகள் தொடரும்.....

46 comments:

புதிய தொடர்....

அதாவது நடப்பதை Cerebral cortex (பகுத்தறிவு மூளை ) வேடிக்கை தான் பார்க்கும். காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் வெவ்வேறு வேதிப்பொருள்களே . அவை ஈர்க்கப்படும் போது நிகழும் மாற்றங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும்/////


இதுக்கு அறிவியல் விளக்கம் வேற...

 

இந்த ஹோர்மோன்கள் விசயத்தை ஒரு காதல் ஜோடியிடம் போய் சொன்னால்..ஒரு மாதிரி பார்ப்பார்கள்....அவர்களின் கூற்று எங்கள் காதல் புனிதமானது இதில் ஹோர்மொன்களுக்கு இடமில்லை..

காதல் காமத்தில் இருந்து வெளிப்படும் ஒரு சிறிய பிரிவு..அல்லது ஒரு மணம் என்று சொல்லலாம்...

இதற்கு மேல் காதல் அபத்தம் என்று எழுதினால் அடுத்த பதிவு என்னை திட்டி இருக்கும்..தலைப்பு வேறு ""இனியது காதல்"" எனவே நான் ஒன்றும் சொல்லவில்லை...)))))))))


அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!?/////

இது முழுமையும் உணமையில்லை...காதலை அனுபவிக்காமல் நிறையா சந்தோசங்கள் இருக்கின்றன உலகில்.....காதலித்து நமது கவனத்தை ஒருவரிடமே தொலைக்காமால் இருப்பதே தேவலை...என்பது என் கருத்து..

 

நான் : ரயில பிரயாணம் எப்படி ? நல்ல படியா இருந்ததா ??

நண்பர் : அப்பர் பெர்த் குடுத்திடாங்க , அதான் கஷ்டமாப்போச்சு !

நான் : லோயர் பெர்த்காரங்கக் கிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியது தானே ?

நண்பர் : நானும் அதைத் தான் யோசிச்சேன். ஆனா கடைசி வரைக்கும் லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!!?

நான் : ????///

இது ஜோக் மட்டும் இல்லை இதுக்கு வேற அர்த்தம் இருக்கு....!

 

இந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான். ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில் வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!//


காதல்!

ஒரு மெல்லிய உணர்வு... அந்த ஒரு இழையை இப்பதிவில் அருமையாய் வெளிப்படுத்தி இருக்கிறீகள்....

ரசித்த பதிவு...

நன்றி..

 

இனிது இனிது காதல் இனிது....

அதிலும் இனிது அதை பற்றி யாரேனும் சொல்ல, நாம் கேட்பது... அந்த கேட்கும் சுகத்தை அளிக்கப்போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்....

//என் கை விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி, உன் கை விரல்கள் கொண்டு கோர்க்க வேண்டும் என்பதற்காகதான்//

இந்த வரிகள் காதலின் வலிமையை மிக பிரமாதமாக சொல்கிறது...

//நான் : ரயில பிரயாணம் எப்படி ? நல்ல படியா இருந்ததா ??

நண்பர் : அப்பர் பெர்த் குடுத்திடாங்க , அதான் கஷ்டமாப்போச்சு !

நான் : லோயர் பெர்த்காரங்கக் கிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியது தானே ?

நண்பர் : நானும் அதைத் தான் யோசிச்சேன். ஆனா கடைசி வரைக்கும் லோயர் பெர்த்துக்கு யாருமே வரல...!!?

நான் : ???//

அட்டகாசமான ஒரு நகைச்சுவையுடன் இந்த பாகம் முடிவுற்றது...

நல்லா இருக்கு... தொடருங்கள்....

 

கணேஷ்....@ காதல் என்றால் நீங்கள் வைத்திருக்கும் உங்கள் கருத்து இப்படி யோசிக்க வைக்கிறது....


காதல் இல்லாமல் உலகில் எதுவுமில்லை....! உங்கள் கருத்தோடு.. 100% உடன்பாடு இல்லை. எனக்கு....!

நிலவு என்பது காற்றும் நீரும் இல்லாத பாலைவனம்தான்...அது அறிவியல்...! ஆனால் அதை பார்க்கும் போது ஒரு பரவசம் வருகிறதே....அது முட்டாள் தனமாய் இருந்தாலும்...சுகமானது...!

கொஞ்சம் பொயட்டிக்காவும் இருங்க தம்பி...!

 

கெளசல்யா...@

மனிதரின் உயிர் பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் ஒரு விசயம் பற்றி எழுதுவதில் மிக்க சந்தோசம். சூப்பர எழுதி பட்டயை கிளப்புங்க....

வாழ்த்துகள்!

 

நிலவு என்பது காற்றும் நீரும் இல்லாத பாலைவனம்தான்...அது அறிவியல்...! ஆனால் அதை பார்க்கும் போது ஒரு பரவசம் வருகிறதே....அது முட்டாள் தனமாய் இருந்தாலும்...சுகமானது...!////

அண்ணா நான் சொல்ல வருவது அந்த பரவசதுக்கு பின்னாடி இருபதைதன்..அதாவது நீர் இல்லாத பாலைவனத்துக்கு ஏன் பரவச பட வேண்டும் என்றுதான்...அதை விட்டு நிறையா பரவசப்பட இருக்கின்றன என்பது என் கருத்து..

ஒரு வேலை அந்த மாதிரி நீரில்லா பாலைவன பரவசங்கள காதலிப்பவருக்கும், காதலர்களுக்கு மட்டும் உணரும்படியாக இருக்கும் என நினைக்கிறேன்))))

 

சௌந்தர் சொன்னது…

//இதுக்கு அறிவியல் விளக்கம் வேற.//

காதலை சாதாரணமா நினைக்க கூடாது இல்லை, அதற்காகத்தான் இந்த அறிவியல் விளக்கம்....!

//இது ஜோக் மட்டும் இல்லை இதுக்கு வேற அர்த்தம் இருக்கு....//

பரவாயில்லையே சரியா சொல்லிட்டியே...ரசிகன் நீ...!

 

கணேஷ்...@

அம்மா என்பவள் அறிவியலின் பார்வையில்...நரம்பு, எலும்பு, இரத்தம், மாமிசம், தோள் இன்னும் அருவறுக்க வேண்டிய எல்லாம் நிறைந்த ஒரு பிண்டம்....

அங்கே ரசிக்க ஒன்றுமில்லை என்று அறிவியல் சொல்லும்....மேலும்...நிரூபீக்கும்.....!


அம்மாவை உணர வேண்டும்...ஆராயக்கூடாது...தம்பி....!

 

நீங்கள் சொலவது அப்படியே உண்மை..நான் ஏற்றுகொள்கிறேன்...அம்மாவை உணர்ந்தால் அது எவ்வளவு அற்புதமான விசயம்...இன்று நீங்கள் சொன்ன பதிவைபோல...

அதே நேரத்தில் காதல் என்ற பெயரில்..நடக்கும் சில விசயங்கள்...சில நேரங்களில் அந்த அம்மாவையே தூக்கி எரிய சொல்லும்..

அதைத்தான் அபத்தம் என்கிறேன்...

 

neenga love panurengala...?

neeyum paadhikkapattu irukkindrai..

vazhthukkal. padhivu arumai...

 

ganesh சொன்னது…

//காதல் காமத்தில் இருந்து வெளிப்படும் ஒரு சிறிய பிரிவு..அல்லது ஒரு மணம் என்று சொல்லலாம்...//

காதல் ஒரு உணர்வு....அதை உணர்ந்து பார்க்கவேண்டும் அப்போதுதான் அதன் இனிமை தெரியும். ஒவ்வொருத்தரும் காதலுக்கு கொடுக்கும் அர்த்தங்கள் வேறு படலாம். அது அவரவர் மனநிலையை பொறுத்தது.

வெகு சிலரால் காதல் கொச்சை படுத்த படலாம்...அதற்காக காதலே கொச்சை ஆகிவிடாது....

"இளமைக் காதல் மழையில் நனையும்
முதுமைக் காதல் குடையுடன் போய் நிற்கும்"

simple logic !

(புரிந்தவர்களுக்கு)

 

ரசிகன்! சொன்னது…

//ஒரு மெல்லிய உணர்வு... அந்த ஒரு இழையை இப்பதிவில் அருமையாய் வெளிப்படுத்தி இருக்கிறீகள்....//

பெயருக்கு ஏற்றபடி ரசித்து இருக்கிறீர்கள்....அழகான காதலை அப்படியே சொல்ல முயற்சித்து இருக்கிறேன்....!

உங்களின் வருகைக்கும் ரசனைக்கும் மகிழ்கிறேன் சகோ...தொடருவதற்கு நன்றி.

 

R.Gopi சொன்னது…

//இனிது இனிது காதல் இனிது....

அதிலும் இனிது அதை பற்றி யாரேனும் சொல்ல, நாம் கேட்பது... //

மிக நல்ல புரிதல்.....காதலை சொல்வதும் பிறர் சொல்லி கேட்பதும் நல்ல ஒரு இனிய அனுபவம் தான்

//இந்த வரிகள் காதலின் வலிமையை மிக பிரமாதமாக சொல்கிறது//

இனி தொடரும் தொடரிலும் இந்த மாதிரியான வரிகளை அதிகம் காணலாம்.

//அட்டகாசமான ஒரு நகைச்சுவையுடன் இந்த பாகம் முடிவுற்றது...நல்லா இருக்கு... தொடருங்கள்....//

காதல் என்றாலே அட்டகாசம் தான் அதை சொல்லவே இறுதியில் அந்த நகைசுவை. உங்களின் அழகான புரிதலுக்கும் ரசனைக்கும் நன்றி கோபி

 

dheva said...

//மனிதரின் உயிர் பிடித்து நிறுத்தி வைத்திருக்கும் ஒரு விசயம் பற்றி எழுதுவதில் மிக்க சந்தோசம்.//

நான் பெரிதாய் விவரித்ததை நீங்கள் ஒரே வரியில் அருமையா சொல்லிடீங்க....!! நம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு விஷயம் தான் இந்த காதல்.....!

//அங்கே ரசிக்க ஒன்றுமில்லை என்று அறிவியல் சொல்லும்....மேலும்...நிரூபீக்கும்.....!
அம்மாவை உணர வேண்டும்...ஆராயக்கூடாது...//

காதலை இதை விட சிறப்பை சொல்ல முடியாது.... ! கருத்திற்கு மகிழ்கிறேன் தேவா..

 

Dhosai சொன்னது…

//neenga love panurengala...?

neeyum paadhikkapattu irukkindrai..

vazhthukkal. padhivu arumai...//

அடடா இது என்னங்க ஒரு கேள்வி.....?! காதலித்தால் தான் எழுத முடியுமா, அந்த உணர்வு இருந்தாலே போதுங்க....!

பாதிக்க படுவதற்கு காதல் காரணமா இருக்காது....காதலி அல்லது காதலனாக இருக்கலாம்......

வாழ்த்துக்கு நன்றி

 

காதல்!
இந்த ஒரு வார்த்தையில் தான் எவ்வளவு அன்பு, வலி, தாகம், தியாகம், வாழ்க்கை நிறைந்திருக்கிறது..
அதுவும் ஒரு பெண்ணின் பார்வையில் அவரின் மன நிலையில் காதலின் விவரிப்பு.. காத்திருக்கிறோம் சகோ!

 

என்னதான் சொன்னாலும் காதல் காற்றில் பறக்கும் ஒரு அலாதியான உணர்வுதான்.பிரிவிலும் கூட.

கௌசி...அன்பான தீபாவளி வாழ்த்துகள்.கீழே உள்ள கவிதையும் படமும் இன்னொரு அருமை.

 

//'காதல்' இந்த ஒரு வார்த்தையில் தான் இந்த உலகம் இன்னும் அழகாய், இளமையாய் உயிர்ப்புடன் இருக்கிறது.//

//காதல் வந்த பின் தான் நிலா என்ற ஒன்று வானில் இருப்பதே தெரிகிறது.....! பார்க்கும் எல்லாம் புதிதாய் , அழகாய் மாறிவிடுகிறது......பரீட்சையில் தமிழை சொதப்பியவர்கள் கூட காதல் வந்த பின் இலக்கிய நயத்துடன் கவிதை எழுதுகிறார்கள்...//

//உடல் ரீதியாக பார்த்தால், காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற இயல்பான ஒரு உணர்வு. அறிவியல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரப்பிகளின் விளையாட்டு.//

//காதல் உணர்வு சம்பந்த பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை.//

அனைத்தும் அருமைங்க.

 

காதல்ங்கிற தலைப்பு வச்சு பழைய நினைவுகளை கிளறுகிறீர்களே.

i hv a problem in my dashboard. it is not showing updates of this blog.

 

Akka thodarchikkaga kathirukkiren natpudan

Maran......

 

காதல் என்பது சுரப்பிகளின் விளையாட்டு its science but kaathal enbathu vithiyin vilaiyaattu thedum pothu vilaki sellum vilaki sellum pothu nerungi varum..........

Natpudam Maran.....

 

ஒரு நாள் நானும் என் நண்பனும் பேசும்பொழுது காதல் பற்றி நான் சொன்னது:
Love is a sexual attraction caused by hormonal secretion.
அவன் அதுக்கப்புறம் காதல் பற்றி என்கிட்ட பேசுனதே இல்லை!:-)

 

//அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....//
நீங்கள் எந்த வகையான காதலை சொல்லுறீங்கன்னு தெரியலை ஒரு வேளை கல்லூரி காதல் என்றால் ......நீங்க மேல சொன்ன வார்த்தையில் உடன்பாடு கிடையாது ..........
நான் மணம் முடிந்த பிற்பாடு என் மனைவியை காதலிக்கிறேன் ........என் குழந்தையை காதலிக்கிறேன் ........அப்போ நான் கொடுத்து வைத்தவன் தானே ................
இதற்க்கு சரியான பதில் வேண்டும் .......தருவீர்கள் என்று நினைக்கிறன் ..............இதுவும் காதல் தானே ............
என்னை பொறுத்த வரியில் காதல் என்பது அவரவர் பார்வையை பொறுத்தே இருக்கிறது(வேறு படுகிறது )

 

ஆரம்பமே அருமை..... காதலைப் பற்றி எழுதினாலும், படித்தாலும், பேசினாலும், கேட்டாலும்.... இனிமைதான்....!

 

@கௌசல்யா

இது நமக்கு தெரியாத சப்ஜக்ட் ஆள விடுங்கப்பா சாமி... :))

@இம்சை, பன்னி, எஸ்.கே

பிரதர்ஸ்!! என்னமா மூனு பேரும் ஒன்னா வந்து இருக்கிங்க?? நீங்க சும்மா வரமாட்டிங்களே இராஜா...:)

 

இங்க என்னப்பா சத்தம்....புள்ளைங்க எல்லாம் இங்க இருக்கு....என்ன மேட்டரு...! பாபு தம்பி வேற சீறி கிட்டு இருக்கான்..!

 

அய்யோ ........நான் எதார்த்தமாக தன கேட்டேன் எல்லோரும் சேர்ந்து கோர்த்து விடுராங்கோ ....... டெர்ரர் ஏன் உனக்கு இந்த கொலை வெறி .......தேவா அண்ணா நான் சீற வில்லை ஏன் மனதில் பட்டதை கேட்டேன் ..........நம்புங்கப்பா .......

 

Balaji saravana சொன்னது…

//இந்த ஒரு வார்த்தையில் தான் எவ்வளவு அன்பு, வலி, தாகம், தியாகம், வாழ்க்கை நிறைந்திருக்கிறது..//

அடடா சகோ .... நீங்க குறிப்பிட்ட ஒவ்வொன்றையும் தலைப்பா வச்சி எழுதினாலே போதும் அழகான காதல் தொடர் வந்துவிடும்....டிப்ஸ்க்கு நன்றி... :)))

 

ஹேமா சொன்னது…

//என்னதான் சொன்னாலும் காதல் காற்றில் பறக்கும் ஒரு அலாதியான உணர்வுதான்.பிரிவிலும் கூட.//

வாங்க தோழி....நலம் தானே...?

ஆமாம்பா, காதல் என்ற வார்த்தையை சொல்லும் போதே எனக்கும் பறக்கிற மாதிரி தான் இருக்கு....!! :)))

 

அன்பரசன் சொன்னது…

//காதல்ங்கிற தலைப்பு வச்சு பழைய நினைவுகளை கிளறுகிறீர்களே.//

பழைய நினைவுகள் என்றாலும் இன்று நினைத்தாலும் சுகமாக தாலாட்டும் இந்த காதல்....!!

//i hv a problem in my dashboard. it is not showing updates of this blog.///

இந்த பிளாக் மட்டும் ஏன் update ஆகவில்லை...?! :(((

 

Jeyamaran சொன்னது…

//Akka thodarchikkaga kathirukkiren natpudan//

தொடருக்கு காத்திருப்பதும் இனிமைதான்....

விரைவில்...!! நன்றி சகோ

 

எஸ்.கே சொன்னது…

//ஒரு நாள் நானும் என் நண்பனும் பேசும்பொழுது காதல் பற்றி நான் சொன்னது:
Love is a sexual attraction caused by hormonal secretion.
அவன் அதுக்கப்புறம் காதல் பற்றி என்கிட்ட பேசுனதே இல்லை!:-)//

பின்ன இப்படி பதில் சொன்னா மறுபடி எப்படி பேசுவார்...?!

காதலை உணரணும் சகோ இப்படி ஆராய்ச்சி எல்லாம் பண்ணபடாது....தப்பு......!!

:))

 

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//நீங்கள் எந்த வகையான காதலை சொல்லுறீங்கன்னு தெரியலை ஒரு வேளை கல்லூரி காதல் என்றால் ......நீங்க மேல சொன்ன வார்த்தையில் உடன்பாடு கிடையாது ....//

இந்த காலத்தில கல்லூரியில், காதலா....அப்படினா....??!

பள்ளி காதல், கல்லூரி காதல், இந்த காதல், அந்த காதல் அப்படின்னு தரம் பிரிச்சு இங்க நான் சொல்ல போவது இல்லை சகோ. காதல் என்ற ஒரு உணர்வு எப்படி என்பதை பற்றியது மட்டும் தான் இந்த தொடர்....

//நான் மணம் முடிந்த பிற்பாடு என் மனைவியை காதலிக்கிறேன் ........என் குழந்தையை காதலிக்கிறேன் ........அப்போ நான் கொடுத்து வைத்தவன் தானே ...//

இதில் என்ன சந்தேகம் நீங்கள் மிக கொடுத்து வைத்தவர் தான்..!!

//இதற்க்கு சரியான பதில் வேண்டும் .......தருவீர்கள் என்று நினைக்கிறன் ..............இதுவும் காதல் தானே .....//

நிச்சயமா இது தான் காதல்....! உங்க கேள்விக்கான பதிலை நான் ஏற்கனவே சொல்லிட்டேனு நினைக்கிறேன். கல்யாணத்திற்கு முன்னால் அல்லது பின்னால் எப்ப வந்தாலும் காதல் காதல் தான்....! ஆனா வரணும்....அப்பதான் கொடுத்து வைத்தவராய் இருக்க முடியும்....!

அடடா தாம்பத்தியம் தொடரை இங்கயும் தொடர வச்சிடுவீங்க போலிருக்கே சகோ. :)))

 

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//ஆரம்பமே அருமை..... காதலைப் பற்றி எழுதினாலும், படித்தாலும், பேசினாலும், கேட்டாலும்.... இனிமைதான்....!//

கவி வரிகள் மாதிரி...நச்...!!
:))

முதல் வருகைக்கு நன்றி சகோ...

 

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

///இது நமக்கு தெரியாத சப்ஜக்ட் ஆள விடுங்கப்பா சாமி... :))///

நம்பிட்டேன்...!!

//@இம்சை, பன்னி, எஸ்.கே

பிரதர்ஸ்!! என்னமா மூனு பேரும் ஒன்னா வந்து இருக்கிங்க?? நீங்க சும்மா வரமாட்டிங்களே இராஜா...:)//

நீங்களும் ஒண்ணா வந்திருகிறதை நினைச்சாத்தான் எனக்கு தான் கொஞ்சம் திகிலா இருக்கு..?!! :))

 

////TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@கௌசல்யா

இது நமக்கு தெரியாத சப்ஜக்ட் ஆள விடுங்கப்பா சாமி... :))

@இம்சை, பன்னி, எஸ்.கே

பிரதர்ஸ்!! என்னமா மூனு பேரும் ஒன்னா வந்து இருக்கிங்க?? நீங்க சும்மா வரமாட்டிங்களே இராஜா...:) ////


ஏன்யா இப்பிடிக் கேக்குற? ஒருத்தன் காலத்துக்கும் தெள்ளவாரியாவேயா இருப்பான்?

 

@kousalya

//கவி வரிகள் மாதிரி...நச்...!!//

கவி என்றால் குரங்கு... அட ஒரு பன்னிகுட்டி குரங்கு வரிகள் எழுதுகிறதே!!! இருந்தாலும் நீங்க பன்னிகுட்டி ராம்சாமிய இப்படி பப்ளிக்கா குரங்கு திட்டி இருக்க கூடாது... :))))

 

@தேவா


//இங்க என்னப்பா சத்தம்....புள்ளைங்க எல்லாம் இங்க இருக்கு....என்ன மேட்டரு...! பாபு தம்பி வேற சீறி கிட்டு இருக்கான்..!//

இந்த பாபுதான் லவ் பண்ண காலேஜ் போறேன் இங்க வந்து அடம் பண்றாரு... எஸ்.கே. விஜயகாந்த் மாதிரி எதோ சொல்றாரு, பன்னிகுட்டி தமிழ் புக்ல இருந்து எதோ காப்பி பேஸ்ட் பண்ணி வச்சி இருக்கு.. அதான் என்னானு கேட்டு போலாம் வந்தேன். நான் ஒன்னுமே பண்ணல மாப்ஸ்... நீ வேனும்னா ப்ளாக் ஓனர்கிட்ட கேட்டு பாரு மாப்ஸ்... :))

 

@பன்னிகுட்டி

//ஏன்யா இப்பிடிக் கேக்குற? ஒருத்தன் காலத்துக்கும் தெள்ளவாரியாவேயா இருப்பான்?//

மச்சி!!!!! அப்பொ நீ திருந்த போறியா?? இனி உனக்கும் எனக்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இங்கையே காச வெட்டி போடறேன்... இந்த நேத்து நீ வாங்கி தந்த குச்சி மிட்டாய். நான் வாங்கி கொடுத்த கமர்கட்ட (எச்ச பண்ணாம) திருப்பி தா... :)))

 

உங்கள் இலக்கு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

 

இந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான். ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில் வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!//

இதை அனுபவித்து பார்த்து வாழ்கையை தொலைத்தவர்கள் தான் அதிகம் ....படிக்கும் வயதில் காதலில் விழுந்து ...ஊடல்கள் .....சண்டைகள் ....பாதிக்க. பட்டு படிப்பை தொலைத்து .......வாழ்கையை இழந்தது தான் மிச்சம் ....தச்சை கண்ணன் ....

 

இந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான். ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில் வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!//

இதை அனுபவித்து பார்த்து வாழ்கையை தொலைத்தவர்கள் தான் அதிகம் ....படிக்கும் வயதில் காதலில் விழுந்து ...ஊடல்கள் .....சண்டைகள் ....பாதிக்க. பட்டு படிப்பை தொலைத்து .......வாழ்கையை இழந்தது தான் மிச்சம் ....தச்சை கண்ணன் ....

 

எத்தனை பேர், எத்தனை காலங்கள் எத்தனை விதமாக சொன்னாலும் அழகு குறையாமல் மேருகேறிக்கொண்டிருக்கும் மென்மையான உணர்வு "காதல்"..

 

காதலிப்பது ஒரு சுகம்.காதலைப் பற்றி நினைப்பது ஒரு சுகம்.காதலைப் பற்றிப் பேசுவது ஒரு சுகம்.அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு சுகம்.
//வார்த்தையில் வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....!?//
தூள்!