உயிரே நீயாய்....!


உன் நினைவு 
எனக்கு வருவதே இல்லை !
உண்மைதான்.....?!

                     நான் உடுத்தும் உடையாய் !
                           உண்ணும் உணவாய் !
                     பருகும் நீராய் !
                           சுவாசிக்கும் காற்றாய் !
                     விரும்பி கேட்கும்
                           எனக்கு பிடித்த பாடலாய் !
                     என் பேருந்து பயணத்தில்
                           ஜன்னலோர சீட்டாய் !
                     என்னுடன் பேசி பின்னோக்கி
                           நகரும் மரங்களாய் !
                     ரசித்து நனைந்து மகிழும்
                           குளீர் மழையாய் !
                     என் தோட்டத்தில் தினம்
                           பூக்கும் ரோஜா மலராய் !
                     
                      வாசலில்  போடும் கோலமாய் - அதில் 
                           உன் பெயரே புள்ளியாய்
                      மாலையில் வீட்டு பந்தலில்   
                           மலர்ந்த நித்யமல்லியாய் !
                      கவிதை எழுதும் பேனாவாய் - அந்த
                            பேனா எழுதும் கவிதையாய்
                      அனைத்திலும் மெய்யாய், உருவாய்,
                             நீயாய் காண்கிறேன் - தனியே
                      இனம் பிரித்து நினைக்க  
                             அறியேன் நான்.....!!
                      என்னில் கலந்து, கரைந்து,
                             மறைந்து போன உன்னை 
                      நீயே தேடினாலும்  
                             கிடைக்க மாட்டாய்.....?!!


17 comments:

கமெண்ட் எப்படி போடுறது ய் ய் ய் ய் ய் ய் ய்...
இப்படி தான் போடனும்

 

உன் நினைவு
எனக்கு வருவதே இல்லை !
உண்மைதான்.....?!////

நினைவு வரவில்லை என்றால் எப்படி இந்த கவிதை...?

 

Migavum arumai asathuringa akka..............

 

வாவ்... அழகான படம்.. சூப்பர் கவிதை....!! :-))

 

உடை உணவு
காற்று பாடல்
ஜன்னல் மரங்கள்
குளிர் மழை
ரோஜா மலர்
கோலம் புள்ளி
மல்லி கவிதை
மெய் உருவம்
கலந்து கரைந்து
யாவும் நீயாய்!..

ம்..ம்.. இதுவும் அழகாய் இருக்கே சகோ :)
எப்பூடி ;)

 

கவிதையும் படமும் மிக அழகு.

 

சௌந்தர் சொன்னது…

//கமெண்ட் எப்படி போடுறது ய் ய் ய் ய் ய் ய் ய்...
இப்படி தான் போடனும்//

ha ha ha

//நினைவு வரவில்லை என்றால் எப்படி இந்த கவிதை...?//

அதுக்கு பதில் தான் கவிதையே...

:))

 

Jeyamaran சொன்னது…

//Migavum arumai asathuringa akka....//

அழகான ரசனைக்கு நன்றி சகோ..

 

Ananthi சொன்னது…

//வாவ்... அழகான படம்.. சூப்பர் கவிதை....!! :-))//

இந்த படத்தை வைத்து நீங்க ஒரு கவிதை எழுதலாமே தோழி...!

:))

 

Balaji saravana சொன்னது…

//காற்று பாடல்
ஜன்னல் மரங்கள்
குளிர் மழை
ரோஜா மலர்
கோலம் புள்ளி
மல்லி கவிதை
மெய் உருவம்
கலந்து கரைந்து
யாவும் நீயாய்!..

ம்..ம்.. இதுவும் அழகாய் இருக்கே சகோ :)
எப்பூடி ;)///

எப்படி சகோ இப்படி...?!! கவிதைக்கு எதிர் கவிதை....!! அசத்துரீங்கபா...

:))

 

வெங்கட் நாகராஜ் சொன்னது…

//கவிதையும் படமும் மிக அழகு.//

உங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி சகோ.

 

கௌசல்யா நீங்க சொன்னது போல்,
உங்கள் படத்திற்கு எனக்குத் தோன்றிய வரிகள் :-))

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனவில் கண்ட உன் திருவுருவை
நினைத்து உருகும் என் மனதை..

மயங்க வைக்கும்
மழை நீரோ..
கண்ணைப் பறிக்கும்
நிலவொளியோ..
இல்லை கை தொடும்
ஆற்றுத் தண்ணீரோ...
எதுவும் கலைக்க வில்லை....

கண்டவர் பாடிட
நான் ஓவியம் அல்ல
உன்னை காதலித்தே
உயிர் வாழும் காவியம்...!

....ஆனந்தி :-))

 

@@@Ananthi...

அடடா அசத்திடீங்க போங்க....கவிதாயினி என்பதை நிருபிச்சிடீங்க...!

நான் கேட்டதிற்காக உடனே கவிதை எழுதிய உங்கள் அன்பிற்கு என் நன்றிகள் பல.

//உன்னை காதலித்தே
உயிர் வாழும் காவியம்...!//

அற்புதம்...!! அப்படியே உள் உணர்வை படம் பிடிசிடீங்க தோழி.

உங்கள் தளத்தில் கவிதைகளும் அதிகமா நீங்க எழுதலமேபா....இனி எழுதுங்கள் என் வேண்டுகோள்...

 

ரொம்ப நன்றி கௌசல்யா.. :-)

நானும் கவிதைகள் நிறைய போஸ்ட் பண்ண முயற்சி பண்றேன்..!!

 

அத்வைதம்னு சொல்றாங்களே இதுதானோ அது

 

Ananthi சொன்னது…

//ரொம்ப நன்றி கௌசல்யா.. :-)

நானும் கவிதைகள் நிறைய போஸ்ட் பண்ண முயற்சி பண்றேன்..!!//

நன்றி ஆனந்தி.

உங்க கவிதைக்காக காத்திருக்கிறேன்.... :))

 

bogan சொன்னது…

//அத்வைதம்னு சொல்றாங்களே இதுதானோ அது//

இப்படி எல்லாம் ஒற்றுமை படுத்தி ரசித்த உங்கள் ரசனைக்கு நன்றிங்க...முதல் முறையா வந்ததுக்கு மகிழ்கிறேன்.