துளிகள்....!





செல்லும் இடமெல்லாம் 
என்னை கேளாமல் 
தொடரும் என் கால்கள் !
தெரிந்தும்  
திரும்பி பாரா
கல்நெஞ்சக்காரன் நீ !!


பாறைக்குள்
தேரை !
உனக்குள் 
என் காதல் !



நீ புனையும் 
கவிதையின் 
முற்று புள்ளி 
நான் !?


சாலையில் செல்லும்போது 
கூர்ந்து பார்....
கூட்டத்தில் ஒருத்தியாய்
நானிருப்பேன் !


மணம் இல்லை 
என் காதலில் 
கனவில் பூத்த 
பூவே  நீ !  


உரத்த சத்தம், உரத்த இசை 
உரத்த சண்டை எதிலும் 
மிகையே இயல்பாய் !?
மௌனம் ஒரு வேதம் 
படிக்க சற்று சிரமம்
புரிந்த பின் வெளிச்சம் !!


********************************************************

14 comments:

//பாறைக்குள்
தேரை !
உனக்குள்
என் காதல் !//

அருமை

 

மிக அருமை...
"செல்லும் இடமெல்லாம்
என்னை கேளாமல்
தொடரும் என் கால்கள் !
தெரிந்தும்
திரும்பி பாரா
கல்நெஞ்சக்காரன் நீ !!"

என்னை கவர்ந்த வரிகள்......

 

//சாலையில் செல்லும்போது
கூர்ந்து பார்....
கூட்டத்தில் ஒருத்தியாய்
நானிருப்பேன் !//

அருமை

 

பாறைக்குள்
தேரை !
உனக்குள்
என் காதல் !////

என்னைக்கு பாறை உடைய போகுதோ..?

 

//மணம் இல்லை
என் காதலில்
கனவில் பூத்த
பூவே நீ !//

:)

 

வேதமும் வெளிச்சமும் அருமை

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

 

நல்லா நல்லா நல்லா கவிதைஎழுதியுள்ளீர்கள்

 

யாருங்க அந்த கல்நெஞ்சக்காரன்...

 

படமும்
கவிதைத் துளிகளும் அழகு கௌசி !

 

காத்திருப்பின் வரிகள் அருமை சகோ..

//நீ புனையும்
கவிதையின்
முற்று புள்ளி //

//மணம் இல்லை
என் காதலில்
கனவில் பூத்த
பூவே //

சட்டென சிலிர்க்கச் செய்யுது இவ்வரிகள் சகோ.. சூப்பர் :)

 

நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
# பாறைக்குள்
தேரை !
உனக்குள்
என் காதல் !
இதுப் பிடிச்சிருக்கு.

 

மணம் இல்லை
என் காதலில்
கனவில் பூத்த
பூவே நீ ! Superrrrrrrr

 

//பாறைக்குள்
தேரை !
உனக்குள்
என் காதல் //

அர்த்தமுள்ள வரிகள்.

 

அருமையான கவி வரிகள்
நன்றி