பிரியமே....!

   
                உன் 
                குரலின் கனிவு 
                பேச்சின் இனிமை
                காந்த விழி  வீச்சு
                உதட்டு சுளிப்பு
                இதழோர புன்னகை
                எண்ணும்போதே 
                நான் 
                இருப்பேன் அங்கே.....!!   
   
                உன் 
                வார்த்தைகளை 
                அணிந்திருக்கிறேன் 
                ஒவ்வொன்றாய் கோர்த்து 
                மாலையாக்கி !
                ஒலிக்கிறது 
                என் காதில் 
                நீ 
                பேசாத போதும் ! 
   
                புயல் வீசும் மனதால் 
                தடுமாறும்
                என்னை
                தாங்கிடும் நங்கூரமே ! 
                இருள் சூழ்ந்த இதயத்தின் 
                இருள்  
                நீக்கும் சுடரே !
                என் 
                நடையின் வழியே !
    
                வெகு 
                தூரத்தில் நீ 
                இருந்தும்
                உன் தோள் 
                சாய்கிறேன் இங்கே.....!!?


*****************************************************



19 comments:

/இருள் சூழ்ந்த இதயத்தின்
இருள்
நீக்கும் சுடரே !
என்
நடையின் வழியே !
//

கவிதை!! கவிதை !!!

 

//ஒலிக்கிறது
என் காதில்
நீ
பேசாத போதும் !
//

காதுல எதாவது பிரச்சனை இருக்கும். டாக்டர் கிட்ட காட்டுங்க

 

உன்
குரலின் கனிவு
பேச்சின் இனிமை
காந்த விழி வீச்சு
உதட்டு சுளிப்பு
இதழோர புன்னகை
எண்ணும்போதே
நான்
இருப்பேன் அங்கே.....!! ////

எப்படி யெல்லாம் வர்ணிக்கிறாங்க...

 

சகோ இரண்டாவது பாரா செம!

//நடையின் வழியே //
அழகு..

" காற்றில் அலையும் உன் பிம்பங்கள் "
உங்கள் கவிதைக்கு இந்தத் தலைப்பு எப்படி இருக்கு சகோ? (தவறாக நினைக்க வேண்டாம் சகோ :) )

 

//வெகு
தூரத்தில் நீ
இருந்தும்
உன் தோள்
சாய்கிறேன் இங்கே.....!!?

//
அது எப்படிங்க முடியும் .....கனவில்,கற்பனையில் இப்படி எதாவது சேர்த்திருக்கணும் .......சரி விடுங்க .......

கவிதை நல்ல இருக்கு (அதுக்காக யாராவது விளக்கம் கேட்டால் பிச்சு புடுவேன் பிச்சு............)

 

காதலின் வேகத்தில் வந்து விழுந்திருக்கும் வரிகளில் அலைமோதுவது ஏக்க அலைகள்.....சரியா?

எப்படிப் பார்த்தாலும் சுகமான உணர்வுகளை எப்படி தப்பாமால் கொடுக்கிறது காதல் அதுவும் யுகங்களாய்.....

சூட்சுமமாய் தோள் சாயும் யுத்திக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது ஒரு ராட்சச காதல்....!

வாழ்த்துக்கள்....கெளச்ல்யா!

 

//உன்
குரலின் கனிவு
பேச்சின் இனிமை
காந்த விழி வீச்சு
உதட்டு சுளிப்பு
இதழோர புன்னகை
எண்ணும்போதே
நான்
இருப்பேன் அங்கே.....!! //

எங்க தெரியுமா கல்அறையில் தான் இருக்கனும்

//உன்
வார்த்தைகளை
அணிந்திருக்கிறேன்
ஒவ்வொன்றாய் கோர்த்து
மாலையாக்கி !
ஒலிக்கிறது
என் காதில்
நீ
பேசாத போதும் ! //

அங்கேயும் உன்ன நிம்மதியா இருக்கா விட மாட்டேன் உன் எழும்ப புல்அ எடுத்து மலை ஆகி போட்டுகிடுவேன்

//புயல் வீசும் மனதால்
தடுமாறும்
என்னை
தாங்கிடும் நங்கூரமே !
இருள் சூழ்ந்த இதயத்தின்
இருள்
நீக்கும் சுடரே !
என்
நடையின் வழியே !//

இருட்டு ல தானே நீ பேய் ஆகுவ அப்போ கூட நீ வெளியே வர முடியாது ..........

சகோ எனக்கு இப்படி தான் புரிஞ்சது ........தப்பா நினைச்சிராதீங்க ...........

 

.. உதட்டு சுளிப்பு
இதழோர புன்னகை
எண்ணும்போதே
நான்
இருப்பேன் அங்கே.......

ரசித்தேன் இவ்வரிகளை...

 

//வெகு தூரத்தில் நீ
இருந்தும்
உன் தோள்
சாய்கிறேன் இங்கே.....!!?//

வாவ்

 

LK கூறியது...

//காதுல எதாவது பிரச்சனை இருக்கும். டாக்டர் கிட்ட காட்டுங்க//

:)))

 

சௌந்தர் கூறியது...

//எப்படி யெல்லாம் வர்ணிக்கிறாங்க...//

உண்மையை சொன்னேன்....!

:))

 

Balaji saravana கூறியது...

// காற்றில் அலையும் உன் பிம்பங்கள்//

//தவறாக நினைக்க வேண்டாம் சகோ//

முதல் தலைப்பு சூப்பர்...இரண்டாவது தலைப்பு நல்லா இல்லையே பாலா...?!

:))

 

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//அது எப்படிங்க முடியும் .....கனவில்,கற்பனையில் இப்படி எதாவது சேர்த்திருக்கணும் .......சரி விடுங்க ...//

கவிதை சொன்னா அனுபவிக்கணும்..... இப்படி கேள்வி கேட்டா இனி கவிதை எழுத வராது பாபு...!

:)))

 

dheva கூறியது...

//காதலின் வேகத்தில் வந்து விழுந்திருக்கும் வரிகளில் அலைமோதுவது ஏக்க அலைகள்.....சரியா?//

சரியே....புரிதலுக்கு மகிழ்கிறேன்.

//எப்படிப் பார்த்தாலும் சுகமான உணர்வுகளை எப்படி தப்பாமால் கொடுக்கிறது காதல் அதுவும் யுகங்களாய்.....//

உண்மை தான். யுகங்கள் கடந்தும் உயிர்ப்புடன் இருக்கும் இந்த காதல்...!

//சூட்சுமமாய் தோள் சாயும் யுத்திக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது ஒரு ராட்சச காதல்....!//

ராட்சசன் மேல் கொண்ட காதல்....!?

:)))

 

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//எங்க தெரியுமா கல்அறையில் தான் இருக்கனும்//

சரியாக இந்த இடத்தில என் கவிதை செத்து போச்சு.

//அங்கேயும் உன்ன நிம்மதியா இருக்கா விட மாட்டேன் உன் எழும்ப புல்அ எடுத்து மலை ஆகி போட்டுகிடுவேன்//

இவ்வளவு கொடூரம்....இந்த அளவு கொல வெறியா...?!

//இருட்டு ல தானே நீ பேய் ஆகுவ அப்போ கூட நீ வெளியே வர முடியாது ....//

முடியல.

//சகோ எனக்கு இப்படி தான் புரிஞ்சது ........தப்பா நினைச்சிராதீங்///

இது வேறயா ???

இந்த அளவு காதல் கவிதை யாரும் ரசிச்சி இருக்கவே முடியாது...சிலிர்த்து போச்சு பாபு....நன்றி வேற சொல்லனுமானு பார்கிறேன்....?

:))))

 

ஜெ.ஜெ கூறியது...

//superb//

வருகைக்கு நன்றிங்க

சங்கவி கூறியது...

//ரசித்தேன் இவ்வரிகளை.//

ரசனைக்கு நன்றி.


அன்பரசன்...

ரசனைக்கு நன்றி சகோ.


சே.குமார் கூறியது...

நன்றி குமார்

 

காதல் கவிதையை எப்படி எழுதினாலும் அழகாய்த்தான் வருகிறது கௌசி !