யோசி....!



               மலை, காற்று, கடல்
               என்றும் உணர்த்துவதில்லை 
               தன் இருப்பை......!


               மலை 
               கம்பீரமாய் நின்றிருப்பதை
               ரசித்ததில்லை நாம் 
               கொதித்து  தன் உள்ளக்கிடங்கை
               வெளியிடும் ஒருநாள் 
               சீறும் எரிமலையாய் ! 


              காற்று
              தென்றலாய் வீசியும் அதில்
              லயிப்பதில்லை நாம்
              வெறுத்துப் போய் 
              சுழன்றடித்து  ஒருநாள் 
              புயலாய் ! 


             கடல் 
             அழகாய் அலை நடை பயின்றும்
             கண்டுகொள்வதில்லை  நாம்
             பொறுமை இழந்து ஒருநாள் 
             பொங்கி கொந்தளிக்கும்  
             பேரலையாய் ! 


             உன்னிடம் இருக்கும் 
             என்
             இருப்பையும் 
             உணரவில்லை நீ !
             எரிமலையாய், புயலாய்,பேரலையாய்
             விரைவில் 
             என் நேசமும்....!!?







17 comments:

மலை
கம்பீரமாய் நின்றிருப்பதை
ரசித்ததில்லை நாம்
கொதித்து தன் உள்ளக்கிடங்கை
வெளியிடும் ஒருநாள்
சீறும் எரிமலையாய் ! ///

அப்போ ஒரு நாள் சீரும்...

காற்று
தென்றலாய் வீசியும் அதில்
லயிப்பதில்லை நாம்
வெறுத்துப் போய்
சுழன்றடித்து ஒருநாள்
புயலாய் ! /////

அந்த புயல் பெயர் என்ன

கடல்
அழகாய் அலை நடை பயின்றும்
கண்டுகொள்வதில்லை நாம்
பொறுமை இழந்து ஒருநாள்
பொங்கி கொந்தளிக்கும்
பேரலையாய் ! ////

ஆமா யாரை மிரட்டுரிங்க

உன்னிடம் இருக்கும்
என்
இருப்பையும்
உணரவில்லை நீ !
எரிமலையாய், புயலாய்,பேரலையாய்
விரைவில்
என் நேசமும்....!!?/////


எல்லாம் ஒன்று சேர்ந்து வந்தா தாங்க முடியாது...!

 

நல்லாருக்கே!!

 

சில நேரங்களில் ஹிம்சை தேவைப்படுகிறது..

 

நல்லா இருக்கு கவிதை (ம் ம் என்ன செய்ய இவ்வளவு தன போடா முடியும் இதுக்கு மேல போட்ட இந்த டெர்ரர் பய வந்து எதாவது சொல்லுவான் ......நானும் கவிதை எழுத வேண்டும் ...........)அது எல்லாம் வேண்டாம் சகோ ......

 

ஒவ்வொரு வரிகளும் சுப்பர்

 

/காற்று தென்றலாய் வீசியும்
அதில் லயிப்பதில்லை நாம்
வெறுத்துப் போய்
சுழன்றடித்து ஒருநாள்
புயலாய் !//

நிஜம்தான்

 

அச்சோ...அச்சோ...
மிரட்டல் மிரட்டல் !

 

சாது மிரண்டால் காடு தாங்காதுன்னு சொல்லுவாங்க சகோ..
நேசமும் சில நேரம் சீற வேண்டியிருக்குது..
நல்லாயிருக்கு சகோ

 

//உன்னிடம் இருக்கும்
என்
இருப்பையும்
உணரவில்லை நீ !
எரிமலையாய்,
புயலாய்,
பேரலையா
விரைவில்
என் நேசமும்....!!?
//

ஆஹா

 

//உன்னிடம் இருக்கும்
என்
இருப்பையும்
உணரவில்லை நீ !//

பெரும்பாலானவர்களின் ஆதங்கம் இது

 

காற்று
தென்றலாய் வீசியும் அதில்
லயிப்பதில்லை நாம்
வெறுத்துப் போய்
சுழன்றடித்து ஒருநாள்
புயலாய் !


..... நல்லா எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்!

 

கவிதையின் உருவம்,உள்ளடக்கம் இரண்டுமே அருமை.வாழ்த்துகள்!

 

மிக மிக அருமையான கவிதை...

//கடல் அழகாய் அலை நடை பயின்றும்
கண்டுகொள்வதில்லை நாம்
பொறுமை இழந்து ஒருநாள் பொங்கி கொந்தளிக்கும் பேரலையாய் !//

சுனாமிக்கான வர்ணனை அபாரம்..

 

சுனாமி வர மாதிரி அறிக்கையா...? வார்த்தை வடிவம் நல்ல இருக்குங்க.. :-)

 

செல்ல மிரட்டல் அழகாக இருக்கிறது..