மனிதனாய்.....!

               
               இஸ்ரேலில் நடந்தாலும்
               இலங்கையில் நடந்தாலும்
               இழப்புகள் இழப்புகள் தான்....
               இறப்பவர்கள் யாராக இருப்பினும் 
               ஒரு தாயின் பிள்ளைகள் அன்றோ ?!
               நிறுத்தப்படுமா மனித அழிப்புகள் ?
               போர்களும், குண்டுகளும் யாருக்காக...?
               எதற்காக....? ஏன்.....? 
               தனிப்பட்ட விருப்பு வெறுப்பா ?
               விரோதமா....? 
               தன் வீடு மட்டும் பாதுகாப்பில்
               என்ற சுயநலமா ?
               நாளை பீரங்கி திரும்பும்
               உன் வீட்டையும் நோக்கி !?
               குண்டுகள் பாயும் உன் மீதும் ! 
               செத்து தானே ஆக வேண்டும்
               கத்தி எடுத்தவன் கத்தியால்...!!?
               எதை பெற இந்த போராட்டம்
               எல்லாம் இழந்தும்....!?
                ..............
                ...............
               அறுபது ஆண்டுகள் தான்
               சராசரி  ஆயுள்.....
               வாழ்ந்து விடுவோம்
               சாவதற்கு முன் கொஞ்சம்
               மனிதனாய்,  மனித நேயத்துடன்  !!19 comments:

இது ஏதோ உள்குத்து இருக்கே யாரை சண்டை போட வேண்டாம் சொல்றிங்க

 

போர்களும், குண்டுகளும் யாருக்காக...?
எதற்காக....? ஏன்..//

பதில் தெரியாத கேள்விகள்..

//சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!//
இதை கண்டிப்பாய் முயற்சி செய்கிறேன் சகோ :)

 

கடைசி வரிகள் அருமை

 

பட்டாலும் திருந்தாத ஒரு இனம் மனித இனம் தான்.

 

//அறுபது ஆண்டுகள் தான்
சராசரி ஆயுள்.....வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம் மனிதனாய்,மனித நேயத்துடன்!!//

பின்பற்ற வேண்டிய வாக்கியம்

 

//வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!//

சூப்பர் சகோ ..நல்லா இருக்கு

 

very nice kousalya.especially the last two lines

 

என்ன சொல்லி என்ன... ஒரு இடத்தில் ஒரு இனத்தையே அழித்து விட்டனரே...

 

// சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!

i like this statement. very nice. vazhthukkal.

 

மனிதநேயம் !

 

//வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய்//

ரசித்தேன்

 

வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!


...rightly said!

 

எதை பெற இந்த போராட்டம்
எல்லாம் இழந்தும்

நல்ல கேள்வி

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

 

//அறுபது ஆண்டுகள் தான்
சராசரி ஆயுள்.....
வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!//thamizheezham amaikka padu paduvom
polurdhayanithi

 

சண்டை வேண்டவே வேண்டாம்..

சமாதானமே சிறந்தது என்று நாம் சொன்னால் யார் கேட்க தயாராய் இருக்கிறார்கள்?

//அறுபது ஆண்டுகள் தான் சராசரி ஆயுள்..... வாழ்ந்து விடுவோம் சாவதற்கு முன் கொஞ்சம் மனிதனாய், மனித நேயத்துடன் !!//

இதை அனைவரும் உணரும் படி செய்வோம்...

 

//வாழ்ந்து விடுவோம்
சாவதற்கு முன் கொஞ்சம்
மனிதனாய், மனித நேயத்துடன் !!//

correct....

nalla kavithai...

 

http://asiyaomar.blogspot.com/2010/11/blog-post_27.html
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன்,பெற்று கொள்ளவும்.

 

பாதுகாப்பு படை என்று பெயர்வைத்துக்கொண்டு மற்றவர்களை சாகடிப்பது மனிதரில் மட்டும்தான் உண்டு. நல்ல கவிதை.