என்னவனே....!


     இரவில் தூங்கும் முன்
     ரகசியமாய் ஒருமுறை
     உன் பெயர் உச்சரித்தே
     இதழ்கள்  மூடுகிறேன்....!
     ஆழமாய் ஒருமுறை
     உன் முகம் பார்த்தே
     விழிகள் மூடுகிறேன்...!
     ...........
     ...........
     தூங்கியவள்
     தூங்கியே விட்டால்.....?
     கடைசியாய்
     உச்சரித்தது, பார்த்தது
     உன் பெயராய், உன் முகமாய் 
     இருக்கட்டுமே.....!!
     


33 comments:

தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?
கடைசியாய்
உச்சரித்தது, பார்த்தது
உன் பெயராய், உன் முகமாய்
இருக்கட்டுமே.....!////

சரி சரி ஏதோ ஆசை பட்டு கேக்குரிங்க பொழைச்சு போங்க...

 

//தூங்கியவள்
தூங்கியே விட்டால்....//
காலைல ரொம்ப நேரம் தூங்கிட்டீங்களா சகோ.. ;)

ஒன்றெனச் சேர்ந்த உயிரை தனியே பிரித்துக்கொண்டோடிட முடியாது சகோ..

 

@கௌசல்யா

அதிகாலயில் எழுந்து
அதிராமல் என் பெயர் அழைக்கிறேன்
ஆசையாய் என் முகம் பார்க்கிறேன்.
....................
...................
ஆரம்பிக்கும் நாள்
முன்னிரவில் முழித்த மூதேவியின்
முகம் மறந்து
அதிஷ்ட்டாமாய் அமையட்டும் என்று!!


கவிதை எழுதிய இம்சை அரசனுக்கு வாழ்த்துகள்... :))

 

இவன் தலையில் எப்படி
கல்லை தூக்கி போடுவது என்று .......
உன் முகம் பார்த்து
பயந்து நடுங்குகிறேன்
------------
------------------------
தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?
கடைசியாய்
உச்சரித்தது, பார்த்தது
ஹாய் ஜாலி ......
இனி இந்த முகம் வேண்டவ வேண்டாம் ........

இந்த கவிதையை எழுதிய டெர்ரர் அவர்களுக்கு நன்றி ................

 

@@@TERROR- அட டா TERROR-கவிதை எழுதிவிட்டு பாபு மேல் பழி போடுறார்... நீங்க கவிதை எழுதினேன் சொலுங்க நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம், வாசல்க்கு வருகிறவர்கள் எல்லாம் கவிதை எழுதுறாங்க....

 

தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?////



காலையில் நெடுநேரம் தூங்கி விட்டால் ...குழந்தை குட்டிகள் பட்டினியாக பள்ளி போவார்கள்..வேறென்ன..))))

 

ganesh சொன்னது…
தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?////



காலையில் நெடுநேரம் தூங்கி விட்டால் ...குழந்தை குட்டிகள் பட்டினியாக பள்ளி போவார்கள்..வேறென்ன..))////

கணேஷ் இவங்க தினமும் இப்படி தான் பாவம் குழந்தைகள்

 

கணேஷ் இவங்க தினமும் இப்படி தான் பாவம் குழந்தைகள்///

உன்கிட்டேயும் அந்த குழைந்தைகள் சொல்லிட்டாங்களா என்ன??)))

 

தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?////

காலையில் எழுந்து வேலையை பார்ப்பதை விட்டு விட்டு என்ன கவிதை....ம்ம்ம்ம்

 

ganesh சொன்னது…

உன்கிட்டேயும் அந்த குழைந்தைகள் சொல்லிட்டாங்களா என்ன??)))///
@@@ganesh
பெரிய குழந்தையும் சொல்லி அழுவுது

 

சௌந்தர் கூறியது...
பெரிய குழந்தையும் சொல்லி அழுவுது////

இதை எல்லாம் செஞ்சிட்டு அதை என்ன அருமையாக கவிதை எழுதியிருக்காங்க))))

 

இதை எல்லாம் செஞ்சிட்டு அதை என்ன அருமையாக கவிதை எழுதியிருக்காங்க))))////

யார் யார் யார் கவிதை அருமை சொன்னது கணேஷ் கோபப் படுறான் இல்லையா

 

பிரியும் போதும் சேர்ந்தே விரிவோம்.. அருமை சகோ...

 

தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?
கடைசியாய்
உச்சரித்தது, பார்த்தது
உன் பெயராய், உன் முகமாய்
இருக்கட்டுமே.....!/////

நீங்க போறது தான் போறீங்க, அவனும் உங்க முகத்தை பார்த்து உங்க கூடவே கூப்பிட்டு போகணும் நினைப்பது நியமா...?

 

அங்கயும் இதேதானா !

 

//தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?
கடைசியாய்
உச்சரித்தது, பார்த்தது
உன் பெயராய், உன் முகமாய்
இருக்கட்டுமே.....!//

நல்ல இருக்குங்க.

இறக்கும் தருவாயில் என்னையே நினைப்பவருக்கு நான் மோட்சம் தருகிறேன் என்று கீதையில் கண்ணன் சொல்கிறார். அப்படி நினைக்க வேண்டும் என்றால் வாழ்நாள் முழுதும் கண்ணனையே நினைத்ததாக வேண்டும்.

 

இன்பத்திலும் துன்பத்திலும் விழிப்பிலும் உறக்கத்திலும் என்ன்வனாக ...........பாராட்டுக்கள்


ஈருடலும் ஒருயிருமாக் வாழ் வாழ்த்துக்கள்.

 

//தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?
கடைசியாய்
உச்சரித்தது, பார்த்தது
உன் பெயராய், உன் முகமாய்
இருக்கட்டுமே.....!!//
அழகான வெளிப்பாடு.

 

//சரி சரி ஏதோ ஆசை பட்டு கேக்குரிங்க பொழைச்சு போங்க...//

 

அருமையான பகிர்வு.

 

//தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?
கடைசியாய்
உச்சரித்தது, பார்த்தது
உன் பெயராய், உன் முகமாய்
இருக்கட்டுமே.....!!//

அருமை! நெஞ்சை தொட்ட வரிகள்!
சீரியல் பார்க்கும் பழக்கம் இருந்தால் குறைத்துக் கொள்ளவும்! :-)

 

அட.. இதுக்கு இப்படிக் கூட விளக்கம் சொல்ல முடியுமா???
ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

 

ரசித்து எழுதிய வரிகளை, ரசித்து படிக்க முடிகிறது

 

கவிதை அருமை......

 

//தூங்கியவள்
தூங்கியே விட்டால்.....?
கடைசியாய்
உச்சரித்தது, பார்த்தது
உன் பெயராய், உன் முகமாய்
இருக்கட்டுமே.....!!
//

உண்மைலேயே கலக்கிட்டீங்க அக்கா ., நல்லா இருக்கு ..!!

 

எதார்த்தமான கவிதை.

தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...!

http://erodethangadurai.blogspot.com/

 

உறங்கும் முன்..... வரிகள் எல்லாம் அழகு...

உங்க ப்ளாக் கமெண்ட்ஸ் இன்னும் சூப்பர்... :-))

 

// உச்சரித்தது, பார்த்தது
உன் பெயராய், உன் முகமாய்
இருக்கட்டுமே.....!!
//

வாழ்த்துக்கள். கவிதை அருமை.