'இனியது காதல்' தொடர் 2


காதலை பற்றி தொடர் எழுதத் தொடங்கியதும் புதிதாய் காதலிப்பவர்களை போல எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தொடங்கி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள் காதலின் வீரியத்தை...! காதல் என்பது வயதை, இயல்பை மறக்க செய்யும் !!

"நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக  இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக  நடைபெறும்" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்.

(இந்த தொடரை மேலும் தொடருவதற்கு முன் சில விளக்கங்கள். தொடரின் முதல் பதிவிற்கு வந்த கமெண்ட்ஸ் வச்சி பார்க்கிறப்போ காதல் வந்தால் பெத்தவங்களை பகைச்சிட்டு ஓடி போய்டுவாங்க, இது உடலை மட்டுமே சார்ந்தது, உண்மையான காதல் என்று ஏதும் இல்லைன்னு சொல்லி இருந்தாங்க....!!? நாட்டில காதலால் நொந்தவங்க தான் பாதி பேர் என்று நினைக்கிறேன்)

நான் இந்த தொடரில் சொல்ல இருப்பது அழகான மென்மையான காதல் உணர்வை பற்றியது  மட்டும்தான். மனதை என்றும் இளமையாகவே வைத்திருக்கும்  காதலை பற்றி மட்டுமே இங்கே பேசுவோமே....! காதலர்கள் செய்யும் தவறுக்கு காதல் என்ன செய்யும்....?

 'காதல் ஒரு போதும் தோற்பதில்லை' 'காதலர்கள் தான்  தங்களுக்குள் தோற்று போகிறார்கள் !!'

எனக்குள் எப்போதும்  இருக்கும் கர்வம் , கோபம், பிடிவாதம், வைராக்கியம், குரலில் எப்போதும் தொனிக்கும் ஆணவ தொனி அனைத்தும், காதல் என்னை அழைத்த மறுநொடியில் அப்படியே மறைந்து மண்டியிட்டு விழுந்து விடும் அதன் காலடியில், எந்த நிபந்தனையும் இன்றி.......!! ஒரு முறை இரு கண்களையும்  மூடி மெதுவாய் 'காதல்' என்று சொல்லி பாருங்கள்...... உடம்பில் ஒரு சிலிர்ப்பு மெதுவாய் பரவுவதை உணர முடியும்....


இதை காமம் என்று எள்ளி நகையாடி வசைபாடுகிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் ஒன்று காதலில் தோற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது  காதல் கிடைக்காமல் ஏங்குபவர்களாக இருக்க வேண்டும். அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு இருந்திருப்பார்கள்....! மனிதர்கள் பிறப்பதற்கு காதல் ஒரு வேளை காரணமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மனிதனாய் வாழ நிச்சயம் ஒரு காதல் வேண்டும்.

பலருக்கும் தங்களின் முதல் காதல் இன்றும் ஸ்பெஷல் பொக்கிஷம் தான். அதை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு துள்ளல் எழத்தான் செய்யும். பதின்ம வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியாக இருந்தாலுமே அதிலும் கொஞ்சமாவது  ஒரு காதல் இருக்கத்தானே செய்யும்.....கொட்டும் மழையும் இதம் தான், சுட்டெரிக்கும் வெயிலும் குளுமைதான்.....!

காதலை பார்க்கும் பார்வைகள் வேறு படலாம்...ஆனால் காதல் மட்டும் அதே அழகுடன்,  அதே துள்ளலுடன், அதே பரவசத்துடன், அதே இனிமையுடன், அதே இளமையுடன் நித்திய கன்னியாக இருக்கிறது.

காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை செடி கொடிகள் விலங்குகள்,பறவைகள் இனத்திலும் காதல் உண்டு. எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம், இருந்த கொஞ்ச நீரையும் தன் துணை அருந்தட்டும் என்று விட்டுக்கொடுத்த 'மான்கள் கதை'யை.....!இறுதிவரை இரண்டுமே ஒன்றுக்காக ஒன்று விட்டு கொடுத்து நீர் அருந்தவில்லை. குளத்தில் இருந்த சிறிய அளவு நீரும் அப்படியே குறையாமல் இருந்தது, அவை ஒன்றின் மேல் ஒன்று வைத்திருந்த காதலால் தான் !!

" நீரில் வாழும் அன்றில் பறவைகள் இணைந்தே நீந்தும், இணைந்தே இரையுண்ணும். ஒருமுறை நீந்தும் போது நீர் பூ ஒன்று நடுவில் குறுக்கிட்டுவிட்டது. பூவின் அகலம் கொஞ்சமே, சுற்றி வர இடைப்பட்ட நேரம் ஒரு நொடியே...ஆனால் அந்த அன்றில்கள் பல ஆண்டுகாலம் பிரிந்து விட்டது போன்று வருந்தினவாம்...! " என்னே அதன் அன்பு ! அதற்குள்ளும் காதலை வைத்து இருக்கும் இயற்கையை வியக்காமல் இருக்க இயலவில்லை...!

ஒரு ஜென் கவிதை

காதலன்

அன்பே !
இன்று இரவுக்குள் நான் சாகப் போகிறேன்
எனக்குத் தெரியும்
விடியலில் முதல் ஒளிக்கீற்றாய்
நீ வருவாய் !

காதலியின் பதில்

அன்பே !
இந்த இரவுக்குள் நீ சாகப் போகிறாய்
அந்தியின் முதல் இருளாய்
நான் வருவேன் !

இதுதான் காதலோட அழகான உண்மையான சுத்தமான அன்பு ! தூய அன்பு இப்படி தான் இருக்கும் !

காதல் வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டும் இது காதலின்  கட்டளை மீற முடியாதே....! காதலில் சோகம் என்றால் கவிதைகள் இப்படியும் எழுதப்படலாம்...!

நேற்று 
என்  விழிகள் சிரித்தது 
உன் இதழோர புன்னகையில்  
இன்று 
விழிகள் நீர் வார்க்கிறது 
அது ஏளன சிரிப்போ என்ற
சந்தேகத்தில் !?

நேற்று இன்று 
ஒரே வித்தியாசம் 
நேற்று வாழ்ந்தேன் 
இன்று மடிந்தேன் 

எனது மரணமோ 
உன் வருகை நாளோ 
எது முன்பு வந்து 
என்னை அழைத்திடுமோ !  

சாவின் 
கடைசி நொடியில்
காதலி...
'வேறு யாரும் என் அளவிற்கு
உன்னை காதலிக்க முடியாது'

சாகும் போதும் ஒரு காதலிக்கு எவ்வளவு நம்பிக்கை தன் காதலின் மீது...!

அந்தஸ்து, படிப்பு, வயசு, உடம்பு, அழகு இதெல்லாம் அன்புக்கு ஒரு தடை  கிடையாது....!

இந்த கவிதைகள் உங்கள் மனதை கொஞ்சமேனும் தொட்டு இருந்தால் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனதின் ஓரத்திலும் சொல்லபடாத ஒரு காதல், ஒரு நேசம்  ஒளிந்திருக்கலாம்.......! சொல்லி விடுங்கள்....சொல்லி விட்டு மனதை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.....!!பின் குறிப்பு....

நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லிய அன்றே மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....! அதை பற்றி தொடரும் தொடரில் சொல்கிறேன்....


மீண்டும் சந்திப்போம் காதலில்....!


33 comments:

காதல் மழை கொட்டுது இதை படித்தால் காதல் செய்பவர்களுக்கு காதல் இன்னும் அதிகம் ஆகும்...!

 

மனதை என்றும் இளமையாகவே வைத்திருக்கும் காதலை பற்றி மட்டுமே இங்கே பேசுவோமே....! காதலர்கள் செய்யும் தவறுக்கு காதல் என்ன செய்யும்....?


..... Beautiful thought!

 

காதல் ரசம் சொட்ட சொட்ட அற்புதமாக எழுதி இருக்கறீங்க...

கவிதை கலக்குது... கலக்குங்க கலக்குங்க...

 

//"நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக நடைபெறும்" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்.//

இது முழுக்க முழுக்க உண்மை...

உங்கள் காதல் தொடர் பரவசப்படுத்துகிறது உள்ளத்தை...

--
அன்புடன்
கவிநா...

 

தொடர் தொடரவேண்டும் இன்னும் இன்னும்...
--
அன்புடன்
கவிநா...

 

ஆரம்பமே அமர்க்களம் ..
தொடருங்கள்
தினமும் எழுதுங்கள்

 

//எனக்குள் எப்போதும் இருக்கும் கர்வம் , கோபம், பிடிவாதம், வைராக்கியம், குரலில் எப்போதும் தொனிக்கும் ஆணவ தொனி அனைத்தும், காதல் என்னை அழைத்த மறுநொடியில் அப்படியே மறைந்து மண்டியிட்டு விழுந்து விடும் அதன் காலடியில், எந்த நிபந்தனையும் இன்றி.......!! //

அருமை.. இது உண்மைதான்..காதல் மனிதனையே அல்ல.. அல்ல மனித இனத்தையே மாற்ற வல்லது..

வாழ்த்துக்கள்.

 

ஜென் கவிதையோட இன்றையகாதல் மலர்ந்திருக்கு :)
காதல் யாருக்குத்தான் பிடிக்காது? தமிழ் சினிமாவில் வரும் வில்லன்களைப் போலுள்ளவர்களுக்கு, அறிவு ஜீவி என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கு, தனக்கு மட்டும் மூளை இருநூறு கிராம் அதிகம் என்று சொல்பவர்களுக்கு, கடைசியாய் விட்டேத்தியாய் சிரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு..
விடுங்க சகோ! நம் பதிவுலக நண்பர்கள் யாரும் இந்தக் கேசில வரமாட்டங்கன்னு நம்புவோம் ;)
நீங்க ஆட்டத்த அருமையா ஆடுங்க :)

 

கண்டிப்பா அனைவருக்குள்ளும் காதல் இருக்கும்..

தொடர் அருமை.. தொடருங்கள்...

 

RASITHEN THODARUNGAL KOUSI!!!!!

 

தொடர் ஆரம்பித்தாயிற்றா?அருமை.ஒன்றை படிக்க வேண்டுமே!

 

ஃஃஃஃஃஃகாதலை பற்றி தொடர் எழுதத் தொடங்கியதும் புதிதாய் காதலிப்பவர்களை போல எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தொடங்கி விட்டதுஃஃஃஃ

உங்களுக்கு மட்டுமா அந்தச் சொல்லைச் சொன்னாலே போய்ஸ் வைரமுத்து பாட்டுத் தான்.. (எம்பி குதித்தேன்..)


அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception

 

//எனக்குள் எப்போதும் இருக்கும் கர்வம் , கோபம், பிடிவாதம், வைராக்கியம், குரலில் எப்போதும் தொனிக்கும் ஆணவ தொனி அனைத்தும், காதல் என்னை அழைத்த மறுநொடியில் அப்படியே மறைந்து மண்டியிட்டு விழுந்து விடும் //

:)

 

//அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு இருந்திருப்பார்கள்....! //

கண்டிப்பா

 

// காதலை பற்றி தொடர் எழுதத் தொடங்கியதும் புதிதாய் காதலிப்பவர்களை போல எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்கத்தொடங்கி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள் காதலின் வீரியத்தை...! //

ஆஹா... நீங்களுமா...

 

சௌந்தர்...

அப்படியா...பார்த்து மழையில் நனைஞ்சிடாதே...!!

:)

 

Chitra ...

உண்மைதானே சித்ரா...?!

:)

 

சங்கவி...

ரசனைக்கு நன்றி சகோ.


கவிநா...

//இது முழுக்க முழுக்க உண்மை..//

லேசா அனுபவம் தெரிகிறது தோழி.

:)

அழகான ரசனைக்கு நன்றி காயத்ரி.

 

பார்வையாளன்...

தினமும் எழுதவா...? அது சிரமம்...பதிலுக்கு நீங்க தினமும் வந்திடுங்க...

:)

 

வெட்டிப்பேச்சு...

//இது உண்மைதான்..காதல் மனிதனையே அல்ல.. அல்ல மனித இனத்தையே மாற்ற வல்லது//

வீரனையும் கோழையாக்கும், கோழையை வீரனாக்கும்.....! :)

 

Balaji saravana ...

//நம் பதிவுலக நண்பர்கள் யாரும் இந்தக் கேசில வரமாட்டங்கன்னு நம்புவோம் ;)
நீங்க ஆட்டத்த அருமையா ஆடுங்க//

நான் ரொம்ப விரக்தியா எழுதிட்டேனோ...?! ஆறுதல் பலமா இருக்கு பாலா...

ஆனா இங்கே நீங்க சொன்னதை வைத்து பார்க்கும் போது எங்கையோ வசமா மாட்டி அதனால் வந்த ஆதங்கம் போல இருக்கு... :))


ஒ.கே ஒ.கே ரிலாக்ஸ்...

 

வினோ...

நன்றி சகோ... :))


sakthi ...

இது உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். சரிதானே...?! :))

ரசனைக்கு நன்றி தோழி.

//KOUSI // ரசித்தேன்.

 

asiya omar ...

தொடர் ஒண்ணை படிக்கலையா...? படிச்சிடுங்க தோழி. :)

ரசனைக்கு நன்றிபா...

 

ம.தி.சுதா...

//உங்களுக்கு மட்டுமா அந்தச் சொல்லைச் சொன்னாலே போய்ஸ் வைரமுத்து பாட்டுத் தான்.. (எம்பி குதித்தேன்..)//

அட பார்த்துங்க சகோ...

:))

 

அன்பரசன்...

//கண்டிப்பா//

அது சரிதான் சகோ.

:))

 

philosophy prabhakaran கூறியது...

//ஆஹா... நீங்களுமா...//

அடடா அப்ப நீங்களுமா...??!!

:))

 

உண்மையிலேயே மிக அழகான மென்மையான காதலை அப்படியே அதன் ரசம் சொட்ட சொட்ட

வழங்கி உள்ளீர்..

நல்ல தொடர் ... மீண்டும் தொடர வாழ்த்துக்கள்..

 

//மூடி மெதுவாய் 'காதல்' என்று சொல்லி பாருங்கள்...... உடம்பில் ஒரு சிலிர்ப்பு மெதுவாய் பரவுவதை உணர முடியும்....//

அப்பாடி ஒண்ணும் வரலையே அக்கா ..?!

 

//காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை செடி கொடிகள் விலங்குகள்,பறவைகள் இனத்திலும் காதல் உண்டு. எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம்,//

இது உண்மைதான் ..!!

 

அரசன்...

உங்களின் முதல் வருகைக்கு நன்றி.


அமைதிசாரல்...

ரசனைக்கு நன்றி.


செல்வா...

//அப்பாடி ஒண்ணும் வரலையே அக்கா ..?!//

நல்ல கண்ணை மூடி சொன்னீங்களா செல்வா...? ஆமாம் யார் கண்ணை மூடினிங்க...?!! :))

//இது உண்மைதான் ..!!//

இதையாவது ஒத்துகிட்டீங்களே !


thanglish payan ...

உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

 

எப்படிங்க அது? கால எந்திரம் எதுவும் இல்லாமலே அவங்கவங்க காலத்துல பின்னாடி போக (பாஸ்போர்ட்,விசா)எளிமையா ஒரு காதல் பதிவு மூலமா வழி செய்றீங்க? பின்றீங்க போங்க....

//"நீரில் வாழும் அன்றில் பறவைகள் இணைந்தே நீந்தும், இணைந்தே இரையுண்ணும். ஒருமுறை நீந்தும் போது நீர் பூ ஒன்று நடுவில் குறுக்கிட்டுவிட்டது. பூவின் அகலம் கொஞ்சமே, சுற்றி வர இடைப்பட்ட நேரம் ஒரு நொடியே...ஆனால் அந்த அன்றில்கள் பல ஆண்டுகாலம் பிரிந்து விட்டது போன்று வருந்தினவாம்...! " என்னே அதன் அன்பு ! அதற்குள்ளும் காதலை வைத்து இருக்கும் இயற்கையை வியக்காமல் இருக்க இயலவில்லை...!//
ஒன்னும் சொல்றதுக்கில்ல....

பதிவு பிரமாதம், வாழ்த்துக்கள்!
பத்மஹரி,
http://padmahari.wordpress.com