நினைவுகள்....!

    
      கொட்டும் மழை 
      சில்லென்ற காற்று 
      நடுங்க வைக்கும் குளீர்
      எதுவும் 
      பாதிக்கவில்லை !
      மனதில் நெருப்பாய் 
      உன் நினைவுகள் !!


     
      நீ
      ரோஜாவை 
      பறித்தபோது 
      வலித்தது எனக்கு !
      உன்
      கையில்  
      முள் குத்தியபோது
      சிரிக்கிறது
      என் வலி !!


      
      காலி கோப்பையை
      பருகக் கொடுத்தேன்
      தேநீர் என்று !
      ரசித்து குடித்து  
      சொல்கிறாய் 
      நன்றி !
      வெட்கத்தில் 
      பூக்கத் தொடங்கியது 
      காதல் !!







52 comments:

/////காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
ரசித்து குடித்து
சொல்கிறாய் /////

அருமையான வரிகள்.. வாழ்த்துக்கள்...

 

காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
ரசித்து குடித்து
சொல்கிறாய்
நன்றி !
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல் !!

.... ;-)

 

கவிதை ஒண்ணுமே புரியல ..புரிஞ்சிதுன்னு சொன்ன டெர்ரர் ,சௌந்தர் எல்லோரும் என்ன புரிஞ்சிது ன்னு கேப்பாங்க ..............மொத்தத்தில் கவிதை புரியல

 

பூக்க தொடங்கிய காதல் எப்பொழுதும் வாடாமல் இருக்க

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

 

//நீ
ரோஜாவை
பறித்தபோது
வலித்தது எனக்கு !
உன்
கையில்
முள் குத்தியபோது
சிரிக்கிறது
என் வலி//


என்னா ஒரு வில்லத்தனம்..

 

காதல் வரிக்கு வரி வந்து இங்கதனிருக்கேன் இங்கதன் இருகேன்னு சொல்லிட்டு போதுங்க......................கவிதைவரிகள் நிஜமாவே கவிதையாகவே இருக்கு....

செம.. செம...உணர்வுகளின் செம வெளிப்பாடு....கெளசல்யா!

 

செதுக்கி எடுக்கப்பட்ட அருமையான கவிதை படைத்த கவுசல்யாவுக்கு பூங்கொத்து!

 

//வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல் !!//

அடி தூள்.. செம சகோ!

//நினைவுகள்.. //
உங்கள் வாழ்க்கை :)

 

மூன்று கவிதைகளும் அருமை...

 

இங்க என்னதான் நடக்குது?? ஆள் ஆளுக்கு அருமை அட்டகாசம் புகழராங்க. நமக்கு தான் ஒன்னும் பிடிபடல...

 

//கொட்டும் மழை
சில்லென்ற காற்று
நடுங்க வைக்கும் குளீர்
எதுவும்
பாதிக்கவில்லை !//

எங்க ஊர்ல கருப்பா நாலு கால் வச்சிட்டு ஒரு விலங்கு இருக்கும். அதுக்கு வால்கூட இருக்கும். பால் கொடுக்கும். அதுக்கும் நீங்க சொல்லி இருக்க எதுவும் தெரியாது. அப்பொ அதுக்கு காதலா?? டவுட்... :))

 

//காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
ரசித்து குடித்து
சொல்கிறாய்
நன்றி !//

நீங்க போடற தேனீர் அம்புட்டு நல்லா இருக்கும் போல. அதுக்கு காலி கோப்பை மேல் சொல்லி நன்றி சொல்லி இருக்காரு. கில்லாடி....

 

அழகிய காதல் கவிதை..

 

எங்க ஊர்ல கருப்பா நாலு கால் வச்சிட்டு ஒரு விலங்கு இருக்கும். அதுக்கு வால்கூட இருக்கும். பால் கொடுக்கும். அதுக்கும் நீங்க சொல்லி இருக்க எதுவும் தெரியாது. அப்பொ அதுக்கு காதலா?? டவுட்... :))////

ஏம்பா நீ சொல்றவர் இம்சை அரசன் தானே அவர் அவரை என் வம்புக்கு இழுக்குரே

 

அட....கௌசி கையிலயும் உயிர்ப்பூ !

 

கொட்டும் மழை
சில்லென்ற காற்று
நடுங்க வைக்கும் குளீர்
எதுவும்
பாதிக்கவில்லை !
உள்ளே நெருப்பாய்
ஒரு பெக் விஸ்க்கி !!


நீ
ரோஜாவை
பறித்தபோது
வலித்தது எனக்கு !
உன்
முகத்தில்
ஓங்கி குத்தியபோது
எரிகிறது
என் வயிறு !!(தோட்டக்காரன் தோட்டத்துல பூவா பரிச்ச அவன் வயிறு எரிய தான் செய்யும் )


காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
கீழ போட்டு
உடைத்தேன்
நன்றி என்றாய் !
கோபத்தில்
சிவக்க தொடங்கியது
முகம் !!

 

ம.தி.சுதா கூறியது...

வருகைக்கு நன்றி...

 

Chitra...

இது என்ன சித்ரா...? சந்தோசபடுரீங்களா...? இல்லை சிரிக்கிற மாதிரி கவிதை இருக்கா?

 

இம்சை அரசன் பாபு கூறியது...

//மொத்தத்தில் கவிதை புரியல//

உங்களுக்கு புரிகிற மாதிரி எப்படி கவிதை எழுதனு எனக்கு தெரியலையே...!

 

விஜய் கூறியது...

//பூக்க தொடங்கிய காதல் எப்பொழுதும் வாடாமல் இருக்க//

உங்கள் வாழ்த்திற்கு நன்றி.....

:)))

 

இந்திரா கூறியது...

//என்னா ஒரு வில்லத்தனம்...//

ஆமாம்பா...! பக்கா கிரிமினல் தான் !!

:))

 

@ dheva

ரசனைக்கு ஒரு நன்றிங்க...!

 

ஸாதிகா கூறியது...

//செதுக்கி எடுக்கப்பட்ட அருமையான கவிதை படைத்த கவுசல்யாவுக்கு பூங்கொத்து//

அழகான புரிதலுக்கும, நீங்கள் கொடுத்த பூங்கொத்துக்கும் நன்றி.

 

Balaji saravana கூறியது...

//அடி தூள்...//

அட என்னப்பா அடி கொடுக்கிறீங்க... :))

//உங்கள் வாழ்க்கை :)//

இப்படியும் சொல்லலாமோ...ஒ.கே இருக்கட்டும்...

 

வெறும்பய...

ரசனைக்கு நன்றி.

 

Kousalya சொன்னது…
Chitra...

இது என்ன சித்ரா...? சந்தோசபடுரீங்களா...? இல்லை சிரிக்கிற மாதிரி கவிதை இருக்கா?////

அவங்களாவது சிரிக்குறாங்க நாங்க இங்க ரெண்டு மூணு பேர் அழுவுறோம்

 

TERROR-PANDIYAN(VAS)

//எங்க ஊர்ல கருப்பா நாலு கால் வச்சிட்டு ஒரு விலங்கு இருக்கும். அதுக்கு வால்கூட இருக்கும். பால் கொடுக்கும். அதுக்கும் நீங்க சொல்லி இருக்க எதுவும் தெரியாது. அப்பொ அதுக்கு காதலா?? டவுட்...//

கண்டிப்பா காதலா தான் இருக்கும், உங்களுக்கு தான் அது பேசுற பாசை புரியுமே கேட்டு பாருங்க, ஆமாம்னு சொல்லும்... :))

//நீங்க போடற தேனீர் அம்புட்டு நல்லா இருக்கும் போல. அதுக்கு காலி கோப்பை மேல் சொல்லி நன்றி சொல்லி இருக்காரு. கில்லாடி....//

இது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா...?

 

Riyas கூறியது...

//அழகிய காதல் கவிதை..//

ரசனைக்கு நன்றி சகோ.

 

சௌந்தர் கூறியது...

//ஏம்பா நீ சொல்றவர் இம்சை அரசன் தானே அவர் அவரை என் வம்புக்கு இழுக்குரே//

இப்ப நீதான் வம்புக்கு இழுக்கிற மாதிரி தெரியுது...

 

ஹேமா கூறியது...

//அட....கௌசி கையிலயும் உயிர்ப்பூ !//

ம்...என்ன சொல்லனும்னு தெரியல ஹேமா...

:)

 

// காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
ரசித்து குடித்து
சொல்கிறாய்
நன்றி !
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல் !!//

அடடா ..?!

 

காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
ரசித்து குடித்து
சொல்கிறாய்
நன்றி !
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல் !!/////

என்ன நக்கல் காலி கப்பை கொடுத்துவிட்டு இதுல காதல் பூத்து தாம் ம்ம்ம்

 

காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
ரசித்து குடித்து
சொல்கிறாய்
நன்றி !
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல் !!/////

அதை குடித்து விட்டு ஒரு ஆல் நல்லா இருக்கு சொல்லி இருக்கார் அவரை சொல்லணும்

 

ப.செல்வக்குமார் கூறியது...
// காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
ரசித்து குடித்து
சொல்கிறாய்
நன்றி !
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல் !!//

அடடா ..?!////

@@@செல்வா
என்ன கப் சூடா இருக்கா

 

இம்சை அரசன் பாபு கூறியது...

//உள்ளே நெருப்பாய்
ஒரு பெக் விஸ்க்கி !//

யாருக்கு எப்படி புரியும் என்று இன்னைக்கு ரொம்ப நல்லா புரிஞ்சிகிட்டேன் பாபு. :)

//ஓங்கி குத்தியபோது
எரிகிறது
என் வயிறு !!(தோட்டக்காரன் தோட்டத்துல பூவா பரிச்ச அவன் வயிறு எரிய தான் செய்யும் )//

அடடா என்ன சொல்ல பாபு...இனி கவிதை எழுதுவ அப்படின்னு என்னை நானே கேட்டுகிறேன்...

//கீழ போட்டு
உடைத்தேன்
நன்றி என்றாய் !
கோபத்தில்
சிவக்க தொடங்கியது
முகம் !!//

இது கவித கவித...!

 

சௌந்தர் சொன்னது…

//அவங்களாவது சிரிக்குறாங்க நாங்க இங்க ரெண்டு மூணு பேர் அழுவுறோம்//

ஒன்னு நீ மத்த இரண்டு பேர் யார்...??

 

ப.செல்வக்குமார் கூறியது...

ரசனைக்கு நன்றி...

 

மூன்றிலும் காதல் கொட்டுகிறது... கடைசி கவிதை அருமை சகோ...

 

முத்துக்கள் மூன்று

 

//மனதில் நெருப்பாய்
உன் நினைவுகள் !!//

அப்பப்ப கொஞ்சம் தண்ணி குடிங்க.

 

//காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
ரசித்து குடித்து
சொல்கிறாய்
நன்றி !
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல் !!//

அருமை...
அனைத்தும் நல்லாயிருக்கு.

 

//காலி கோப்பையை
பருகக் கொடுத்தேன்
தேநீர் என்று !
ரசித்து குடித்து
சொல்கிறாய்
நன்றி !
வெட்கத்தில்
பூக்கத் தொடங்கியது
காதல் !!
//


"காத‌ல்"..... ஒரே வார்த்தை... பின்னிட்டீங்க‌ போங்க‌!!! :)

 

மிக அழகான கவிதை! அருமை!

 

மனதில் நெருப்பாய்
உன் நினைவுகள் !


கதகதகதகதகதகதகப்பாய்!!!

 

வினோ கூறியது...

//மூன்றிலும் காதல் கொட்டுகிறது... கடைசி கவிதை அருமை சகோ...//

ரசனைக்கு நன்றி சகோ.

 

பார்வையாளன் கூறியது...

//முத்துக்கள் மூன்று//

உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

 

அன்பரசன் கூறியது...


//அப்பப்ப கொஞ்சம் தண்ணி குடிங்க.//

இந்த மாதிரி யோசனை கொடுக்க இத்தனை நாள் ஆள் இல்லைப்பா..... :)) நன்றி சகோ.

 

சே.குமார்...

ரசனைக்கு நன்றி குமார்.

 

பிரபு . எம் கூறியது...



//"காத‌ல்"..... ஒரே வார்த்தை... பின்னிட்டீங்க‌ போங்க‌!!! :)//

அட....இது நல்லா இருக்கே....வருகைக்கு மகிழ்கிறேன் நன்றி

 

எஸ்.கே கூறியது...

//மிக அழகான கவிதை! அருமை!//

நீங்களும் கவிதை எழுதலாமே சகோ...

 

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...


//கதகதகதகதகதகதகப்பாய்!!!//

ஆமாம்ம்ம்ம்ம்ம் :))

 

காதல் பூத்த விதம் நல்லா இருக்குங்க :-))
வெரி நைஸ்..