தேடல்......!



  

  காணவில்லை எனது  ஊர்....!?
  ஆடி கூடி மகிழ்ந்து வாழ்ந்த ஊர்
  பாவாடையில் ஒட்டிய மண்
  இன்னும் ஈரத்துடன் வாசமாய்  ! 
  என் தாய் அழைத்த குரல் 
  இன்னும் கேட்கிறது காற்றில் ! 

  என் நினைவோடும் உணர்வோடும்
  வாழ்வோடும் கலந்திருந்த ஊர்
  இன்று காணவில்லை....!? 
  மரங்கள் கோயில்கள் வீடுகள்
  தெருக்கள் பள்ளிகூடங்கள் கட்டிடங்கள்
  பாலங்கள் குளங்கள் கடைகள்
  ஏதும் இல்லை....!?

  போரால் பழிவாங்கப்பட்ட ஊர் 
  சாட்சியாய் பரந்த வெளி !
  எல்லா நினைவுகளுக்கும் 
  சாட்சியமற்ற பரந்த வெளி !
  
  மிச்சமாய்   
  அழிவின் சுவடுகள்
  என் உறவில் நான் மட்டும் !
  இன்றைய 
  ஒரே தேடல் என் ஊர் !

  போரென்றால் அழிவு நிதர்சனம்
  குண்டுவீச்சில் சிதைவு யதார்த்தம்
  ஊர் காணவில்லை எப்படி ?
  எங்கே போனது என் ஊர் ?

  உணவுக்கு மாற்றாய்
  தட்டில் நிறைந்த துயரம் ! 
  எதுவும் இல்லாத போதும்
  எல்லாம் இழந்த போதும் 
  வாழ்ந்தாக வேண்டுமே !!

  ****************************************

   ஈழம்
  ஆளும் கட்சிக்கு  உண்ணாவிரதம் 
  எதிர்கட்சிக்கு அறிக்கைகள் 
  பத்திரிகைக்கு சில நாள் செய்திகள் 
  என் போன்றோருக்கு கவிதைகள் !?





34 comments:

மனம் கனக்கும் கவிதை..
" என் தாய் அழைத்த குரல் இன்னும் கேட்கிறது காற்றில் !
என் நினைவோடும் உணர்வோடும் வாழ்வோடும் கலந்திருந்த ஊர் இன்று காணவில்லை....!"

"பழய வாழ்வு மீண்டம் கடைத்திடுமா?"
கவிதை அருமை தோழி...

 

இது வரை ஓடி ஆடிய விளையாடிய
இடம் எங்க...?
ஆசையாக பருகி வந்த
ஆற்று நீர்
இப்போது ரத்த ஆறாக...!
அழகிய மண் வாசயை
இப்போது இல்லை
காரணம் மண்னை விட மனிதர்களின் பிணமே அதிகம் இருக்கிறது....

 

மனதை கனமாக்குகிறது வரிகள்...

 

உணவுக்கு மாற்றாய்
தட்டில் நிறைந்த துயரம் !


வலி!!!

 

உணவுக்கு மாற்றாய்
தட்டில் நிறைந்த துயரம் !
எதுவும் இல்லாத போதும்
எல்லாம் இழந்த போதும்
வாழ்ந்தாக வேண்டுமே !!


..... மனதில் வலியும் பாரமும்.

 

//ஈழம்
ஆளும் கட்சிக்கு உண்ணாவிரதம்
எதிர்கட்சிக்கு அறிக்கைகள்
பத்திரிகைக்கு சில நாள் செய்திகள்
என் போன்றோருக்கு கவிதைகள் !?//

அப்பட்டமான உண்மை உங்கள் வரிகளில்....

 

அற்புதமான கவிதை!
மனம் கனக்கிறது!

 

//உணவுக்கு மாற்றாய்
தட்டில் நிறைந்த துயரம் !
எதுவும் இல்லாத போதும்
எல்லாம் இழந்த போதும்
வாழ்ந்தாக வேண்டுமே !!//

தட்டில் மட்டுமல்ல கவிதையிலும் நிறைந்துள்ளது துயரம்...

ஒட்டிக்கொண்டது மனதில் கவிதையும், அதன் வலியும்.

--
அன்புடன்
கவிநா...

 

ஈழத்தின் சோகம் தெறிக்கிறது கவிதை வரிகளில்....ஏன்? இந்த அவலத்துக்குள் எம் இனம் தள்ளப்பட்டது என்பது புரியாத புதிர் என்று சொல்லிக் கொண்டாலும் பெரும் வஞ்ச்சிப்பு நிகழ்ந்தேறியுள்ளது....

கவிதையாவது எழுதுவோம் என்ற வார்தைகளுக்குப் பின்னால் இருக்கும் இயலாமையில் மனம் வெம்பித்தான் போகிறது...காலம் மாறும்...காத்திருப்போம்...! கவிதை வெளிப்பாட்டின் சோகத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறேன்...!

 

//உணவுக்கு மாற்றாய்
தட்டில் நிறைந்த துயரம் ! //

கனமான வரிகள்

 

//மிச்சமாய்
அழிவின் சுவடுகள்
என் உறவில் நான் மட்டும் !
இன்றைய
ஒரே தேடல் என் ஊர் !
//

வலியுள்ள கவிதை அக்கா ..!!

 

நெஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது நண்பா நாம் நச்சுப்பாம்புகளை பாலூட்டி வளர்க்கிறோமே

 

இலங்கை தமிழர்களை பற்றி அருமையாக எழுதி உள்ளீர்கள் ....கடைசி பாரா நன்றாக உள்ளது ........

 

எங்கள் மனதை அப்படியே பிரதியெடுத்த வரிகள் கௌசி !

 

//உணவுக்கு மாற்றாய்
தட்டில் நிறைந்த துயரம் !
எதுவும் இல்லாத போதும்
எல்லாம் இழந்த போதும்
வாழ்ந்தாக வேண்டுமே !!//

"நரகத்தில் வாழும் உணர்வு..
கண்முன் நிகழும் குற்றங்கள்..
இயலாமை நினைத்து வருத்தம்தான்..
ஈழத்தில் பிறந்திருந்தால்
ஒரு குண்டையாவது நெஞ்சில் தாங்கிருக்கலாம்..

மிகுதியான வலியுடன்.."

 

தேடலுக்கு ஒரு நாள் நிச்சயம் வழி பிறக்கும், பதில் கிடைக்கும் சகோ.

 

ஆழ்ந்த பெருமூச்சு மட்டுமே மிச்சமிருக்கிறது சகோ :(
நம் உறவுகளின் வலிகள் மிகுந்த வாழ்க்கை.
புது விடியல் மலரட்டும் என்ற ஏக்கத்தோடு..

 

ஈழம் - கவிதை அருமை! :-)

 

ஆழமான கவிதை...

அர்த்தமுள்ள வரிகள்

 

கடைசி வரிகள் அர்த்தமுள்ளதாக இருந்தன...

// ஈழம்
ஆளும் கட்சிக்கு உண்ணாவிரதம்
எதிர்கட்சிக்கு அறிக்கைகள்
பத்திரிகைக்கு சில நாள் செய்திகள்
என் போன்றோருக்கு கவிதைகள் !? //
என் போன்றோருக்கு பின்னூட்டம்...

 

//ஈழம்
ஆளும் கட்சிக்கு உண்ணாவிரதம்
எதிர்கட்சிக்கு அறிக்கைகள்
பத்திரிகைக்கு சில நாள் செய்திகள்
என் போன்றோருக்கு கவிதைகள் !?//

உங்கள் ஊர் தேடும் கவிதையில் மனது வலிக்கிறது என்றால்... மேல உள்ள வரிகள் என்ன சொல்ல...எல்லாரும் அரசியல் நடத்துவது போல் நாமும் பதிவெழுதி அரசியல் நடத்துகிறோமோ என்று என்னத் தோன்றுகிறது.

 

பிரஷா...

முதல் கமெண்ட் மகிழ்கிறேன் தோழி. நன்றி.

 

vinu ...

நன்றி


சௌந்தர்...

கவிதைக்கு பதில் கவிதையாய் ஆனால் அதிக வலியுடன்...

நன்றி


வெறும்பய...

நன்றி.


முனைவர் இரா.குணசீலன்...

வருகைக்கு நன்றி.


Chitra ...

உணர்வு.

 

கவிநா...

விரிவான கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தோழி.


எஸ்.கே...

உணர்வின் வார்த்தைக்கு நன்றி

 

dheva ...

//கவிதையாவது எழுதுவோம் என்ற வார்தைகளுக்குப் பின்னால் இருக்கும் இயலாமையில் மனம் வெம்பித்தான் போகிறது.//

கவிதையின் புரிதலுக்கு நன்றி...உள் உணர்வுகளை நீங்கள் கருத்தாய் சொன்ன விதம் பிடித்து இருக்கிறது.

நம்மால் சோகத்தோடு பங்கெடுக்க மட்டும் தான் முடிகிறது... :(

 

அன்பரசன்...

நன்றி சகோ.



ப.செல்வகுமார்...

நன்றி செல்வா.


dineshkumar ...

புரிதலுக்கு நன்றி சகோ.

 

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//கடைசி பாரா நன்றாக உள்ளது,//

புரிதலுக்கு நன்றி பாபு.

 

ஹேமா...

அதே உணர்வுகள் தானேபா எனக்கும்...இந்த உணர்விலாவது நாம் தமிழன் என்று காட்டுவோமே... :(

 

க.மு.சுரேஷ்...

//நரகத்தில் வாழும் உணர்வு..
கண்முன் நிகழும் குற்றங்கள்..
இயலாமை நினைத்து வருத்தம்தான்..
ஈழத்தில் பிறந்திருந்தால்
ஒரு குண்டையாவது நெஞ்சில் தாங்கிருக்கலாம்..//

உங்கள் எழுத்தில் ஆதங்கம், கோபம்
தெறிக்கிறது சகோ.

உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

 

வினோ கூறியது...

//தேடலுக்கு ஒரு நாள் நிச்சயம் வழி பிறக்கும், பதில் கிடைக்கும் சகோ.//

வலி பிறக்க வேண்டும் என்பது தான் நம் எல்லோரின் வேண்டுதலும்...

நன்றி வினோ.


Balaji saravana கூறியது...


//நம் உறவுகளின் வலிகள் மிகுந்த வாழ்க்கை.
புது விடியல் மலரட்டும் என்ற ஏக்கத்தோடு..//

நம்பிக்கை இருக்கிறது இன்னும்...

நன்றி பாலா.

 

ஜீ...

நன்றி.


பார்வையாளன்...

தொடரும் வருகைக்கு நன்றி.

philosophy prabhakaran

//என் போன்றோருக்கு கவிதைகள் !?
என் போன்றோருக்கு பின்னூட்டம்...//

நமக்கு இதுதான் முடியும்....என்னே நம் இயலாமை....?!

நன்றி பிரபாகர்.

 

சே.குமார்...

//எல்லாரும் அரசியல் நடத்துவது போல் நாமும் பதிவெழுதி அரசியல் நடத்துகிறோமோ என்று என்னத் தோன்றுகிறது.//

இது எப்படி அரசியல் ஆகும் குமார்...?அவர்களுக்கு அந்த அரசியலால் ஆதாயம் கிடைக்கிறது, நமக்கு அப்படி இல்லை, நம் ஆதங்கத்தை இப்படி எழுதி தீர்த்துகிறோம். நம் வேதனையை இப்படி காட்டி கொள்கிறோம். நம் இயலாமை இது.

நன்றி குமார்.

 

மிகவும் அருமையான வரிகள். எப்படி இப்படியெல்லாம் எழுத முடிகிறதோ?