பிழையாய் நீ...!  எனக்கு அலுக்கவில்லை 
  இந்த காதலும்...கவிதையும் !


  நம் இரு விழிகள் சந்தித்தபோது 
  மனதில் பூ பூக்கவில்லை !
  என் பெயர் சொல்லி அழைத்த போது 
  பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை என்னுள் !
 
  உன்னை எண்ணி உறங்கியபோதும்
  கனவில் நீ இல்லை !
  என்னை பிடித்திருக்கிறது என்ற போதும்
  வானில் மிதக்கவில்லை மனது !


  நான் அங்கே இருக்கிறேன் குறிப்பால் நீ 
  உணர்த்தியும் மௌனம் காத்தேன் !
  கவிதை ஒன்றை எழுதி முடித்தேன் ....
  கவிதை சொன்னது இது காதல்...!!


  அன்றில் இருந்து தொடர்கிறது 
  இந்த காதலும் கவிதையும்.....
  கவிதையில் இலக்கணம் இல்லை 
  நீ இருக்கிறாய் இலக்கண பிழையாய் !?


  ****************************************************


  தினம்  உன் முகம் பார்த்து  
  உறங்க செல்லும் எனக்கு 
  ஒரு நாளும் விடை 
  கொடுத்தது இல்லை நீ !!? அடுத்தது 'இனியது காதல்' தொடர்....காத்திருங்கள்....!!34 comments:

//நான் அங்கே இருக்கிறேன் குறிப்பால் நீ
உணர்த்தியும் மௌனம் காத்தேன் !
கவிதை ஒன்றை எழுதி முடித்தேன் ....
கவிதை சொன்னது இது காதல்...!!//

ரசித்தேன் இவ்வரிகளை...

 

"நம் இரு விழிகள் சந்தித்தபோது
மனதில் பூ பூக்கவில்லை !
என் பெயர் சொல்லி அழைத்த போது
பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை என்னுள் !" -காதலின் இலக்கணம் மீறிய இவ்வரிகள் அருமை வாழ்த்துக்கள்

 

அன்றில் இருந்து தொடர்கிறது
இந்த காதலும் கவிதையும்.....
கவிதையில் இலக்கணம் இல்லை
நீ இருக்கிறாய் இலக்கண பிழையாய் !?


......வித்தியாசமான காதல் கவிதைங்க. நல்லா இருக்குதுங்க.

 

கவிதை அருமை.இனிய காதல் தொடரை விரைவில் ஆரம்பியுங்கள்.

 

//உன்னை எண்ணி உறங்கியபோதும்
கனவில் நீ இல்லை !
என்னை பிடித்திருக்கிறது என்ற போதும்
வானில் மிதக்கவில்லை மனது !//

பொய்யுரைக்காமல் அதீத ஆர்ப்பாட்டமில்லாத காதல்.. அழகு :)

// நீ இருக்கிறாய் இலக்கண பிழையாய் //
பிழையே இவ்வளவு அருமையா இருக்கே! :)

//அன்றில் இருந்து தொடர்கிறது
இந்த காதலும் கவிதையும்..//

என்றும் நீடித்திருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றறியேன் பராபரமே!

//தினம் உன் முகம் பார்த்து
உறங்க செல்லும் எனக்கு
ஒரு நாளும் விடை
கொடுத்தது இல்லை நீ !!?//

ஆஹா.. நீங்க போருக்கு எங்கயும் போலயே அப்புறம் ஏன் இந்த பில்டப்பு ;)
நீங்க தூங்கறதுக்கு முன்னாடியே அவரு தூங்கிடுறாரோ.. # டவுட்டு

 

சொந்தங்கள் சதமடித்ததற்கு வாழ்த்துக்கள் சகோ :)

 

//எனக்கு அலுக்கவில்லை
இந்த காதலும்...கவிதையும் !
//

எங்க‌ளுக்கும்தான்... இதே சிற‌ப்புட‌ன் தொட‌ருங்க‌ள் ச‌கோதிரி...

 

கவிதை அருமை...

தொடர் ஆரம்பியுங்கள்.. காத்திருக்கிறோம்

 

ஒரு சின்ன முரண்....

காதலும் கவிதையும் அலுக்கவில்லை என்று சொல்லிவிட்டு.. ஆச்சர்யப்படாமல் அலுத்துக் கொண்டதுபோல தொடர்ந்த வரிகளில் பயணித்த நான்... என்ன இது அப்டி சொல்லிட்டு இப்டி எழுதுறாங்களேன்னு.. நினைச்சேன்...

கடைசியில் சொல்லியிருக்கும் வரிகளில் பிழைகளுக்கு எல்லாம் காரணம் நீ என்று தெரிந்து முடித்தீர்களோ இல்லையோ.. ஆனால் மேலே எழுந்த கேள்வி கேள்விக்கு பதிலாய் போய்விட்டது...!

ஒரு நாளும் விடை கொடுக்காமல் கேள்விகள் மட்டும் கொடுக்கிறாங்களா..?

பரவாயில்லை கவிதை இப்போ எல்லாம் செமயா எழுத ஆரம்பிச்சுட்டீங்க.. உங்களுக்கு ஒரு விருது ஏற்பாடு பண்ணிடுவோம்...!

அப்போ வர்ர்ர்ர்ட்ட்டா....!

 

@கௌசல்யா

ஆக அருமை அட்டகாசம். இது கவிதையிம் ஒரு மைல் கல். தொடர்ந்து எழுதுங்க. படிக்க ஆவலாய் காத்து இருக்கிறேன்... எதாவது சொல்லாம விட்டு இருந்தா நீங்க சேர்த்துகோங்க.. ஆங்... செம... செம...

@தேவா

மாப்பு நாங்களும் பாராட்டுவோம் இல்ல.... :)))

 

//தினம் உன் முகம் பார்த்து
உறங்க செல்லும் எனக்கு
ஒரு நாளும் விடை
கொடுத்தது இல்லை நீ !!?//

சூப்பர் அழகான ரசனையுடன் அருமையாக உள்ளது

தொடருங்கள்........

 

சங்கவி...

ரசனைக்கு நன்றி.


சி.பிரேம்குமார் கூறியது...

முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி


Chitra ...

நன்றி தோழி.


asiya omar ...

தொடருகிறேன் தோழி. நன்றி.

 

எனக்கு அலுக்கவில்லை
இந்த காதலும்...கவிதையும் !

கலக்கல்....கவிதை

 

//கவிதையில் இலக்கணம் இல்லை
நீ இருக்கிறாய் இலக்கண பிழையாய் !?//

செம...

 

@தேவா @@டெரர் போட்டி போட்டு பாராட்டுறிங்க

 

// நம் இரு விழிகள் சந்தித்தபோது
மனதில் பூ பூக்கவில்லை !
என் பெயர் சொல்லி அழைத்த போது
பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை என்னுள் ! //

பொய்யில்லா கவிதையும் ... போலியில்லா காதலும் இந்த வரிகளில்...

//கவிதையில் இலக்கணம் இல்லை
நீ இருக்கிறாய் இலக்கண பிழையாய் !?//

ஆஹா அழகான வரிகள்...

//தினம் உன் முகம் பார்த்து
உறங்க செல்லும் எனக்கு
ஒரு நாளும் விடை
கொடுத்தது இல்லை நீ !!?//

அழகுக்காதலின் கண்ணாடி வரிகள்....

ரொம்ப ரொம்ப பிடிச்சதுங்க இந்த கவிதை...

அடுத்த தொடரை எதிர்பார்த்து...
--
அன்புடன்
கவிநா...

 

//தினம் உன் முகம் பார்த்து
உறங்க செல்லும் எனக்கு
ஒரு நாளும் விடை
கொடுத்தது இல்லை நீ !!?//

nice! :-)

 

Balajisaravana கூறியது...

//பொய்யுரைக்காமல் அதீத ஆர்ப்பாட்டமில்லாத காதல்.. அழகு :)//

என்ன அழகான ரசனை...!!

//பிழையே இவ்வளவு அருமையா இருக்கே! :)//

அருமை மட்டும் இல்லை ரொம்ப அழகாகவும்...!

//என்றும் நீடித்திருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றறியேன் பராபரமே!//

என் வேண்டுதலும் அதுவே தான்... :)

//ஆஹா.. நீங்க போருக்கு எங்கயும் போலயே அப்புறம் ஏன் இந்த பில்டப்பு ;)//

இது பில்டப் இல்லை.பீலிங் சகோ !

//நீங்க தூங்கறதுக்கு முன்னாடியே அவரு தூங்கிடுறாரோ.. # டவுட்டு//

இப்படி எல்லாம் ஒரு சந்தேகமா...??
பதில் சொல்லி முடியல பாலா..கௌசல்யா பாவம் !

100 இதுக்கு வாழ்த்தினதுக்கு நன்றி சொல்லிட்டு மீ எஸ்கேப்..

 

பிரபு.எம்...

உங்களுக்கு கவிதை அலுக்கவில்லையா..? தலை எழுத்தை மாத்த முடியுமா...அனுபவிங்க...கவிதைகள் தொடரும். :)

நன்றி பிரபு.

 

பார்வையாளன்...

தொடர் ஆரம்பித்துவிட்டேன்..இனி வருவது இரண்டாம் பாகம்.

நன்றி சகோ.

 

//அன்றில் இருந்து தொடர்கிறது
இந்த காதலும் கவிதையும்.....
கவிதையில் இலக்கணம் இல்லை
நீ இருக்கிறாய் இலக்கண பிழையாய் !?///

அவர் இல்லைனா நீங்க பிழை இல்லாம எழுதுவீங்க அப்படின்னு சொல்ல வரீங்களா அக்கா ..?! சும்மா ஒரு டவுட்டு ..!!

 

வித்தியாசமான காதல் கவிதைங்க. நல்லா இருக்குதுங்க.

 

dheva ...

//ஒரு சின்ன முரண்....//

ஏதோ கூட குறைய இருந்தா அட்ஜெஸ்ட் பண்ணிகோங்க...நான் எழுதுறதை கவிதைன்னு ஒத்துகிட்டதே பெரிசு...

நீங்க பின்னூட்டத்தையே கவிதை மாதிரி எழுதுற படைப்பாளி...

(எப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க வேண்டி இருக்கு...)

//ஒரு நாளும் விடை கொடுக்காமல் கேள்விகள் மட்டும் கொடுக்கிறாங்களா..?//

அதே அதே...!

//உங்களுக்கு ஒரு விருது ஏற்பாடு பண்ணிடுவோம்...!//

தேவா நிறுத்துங்கனா நிறுத்திடுறேன் அதுக்காக இப்படி எல்லாம் கிண்டல் பண்ணகூடாது... :))

 

TERROR ...

//ஆக அருமை அட்டகாசம். இது கவிதையிம் ஒரு மைல் கல். தொடர்ந்து எழுதுங்க. படிக்க ஆவலாய் காத்து இருக்கிறேன்... எதாவது சொல்லாம விட்டு இருந்தா நீங்க சேர்த்துகோங்க.. ஆங்... செம... செம...//

ஒரு பத்து கவிதைக்கு சொல்றதை ஒண்ணா சொன்னதுக்கு உங்களை தான் பெரிசா பாராட்டனும்...
(ஆமா கவிதையை படிசீங்களா...டவுட்டு) :)

 

மாணவன்...

ரசனைக்கு நன்றிங்க...

 

யாதவன்...

நன்றி சகோ.


அருண் பிரசாத்...

வருகைக்கு நன்றி

சௌந்தர்...

//@தேவா @@டெரர் போட்டி போட்டு பாராட்டுறிங்க//

அடுத்து பெரிசா ஏதோ கலவரம் நடக்க போகுதுன்னு அர்த்தம்.

 

கவிநா... கூறியது...

//பொய்யில்லா கவிதையும் ... போலியில்லா காதலும் இந்த வரிகளில்...//

அடடா என்ன அழகா புரிஞ்சிருகீங்க...
ம்..

//அழகுக்காதலின் கண்ணாடி வரிகள்....

ரொம்ப ரொம்ப பிடிச்சதுங்க இந்த கவிதை...//

பெயருக்கு ஏற்றபடி நல்ல ரசனை தோழி உங்களுக்கு.

//அடுத்த தொடரை எதிர்பார்த்து...//

முடிந்தால் நாளையே...

ரசனைக்கு நன்றி.

--

 

கவிதை அருமை..

எங்க‌ளுக்கும் அலுக்கவில்லை
இந்த காதலும்...கவிதையும் !

 

அருமை :)

 

அருமை.....அருமை.....அருமை.....அருமை.....அருமை.....அருமை.....அருமை.....

 

முதல் கவிதையின் கடைசி வரிகள் அருமை சகோ...

தேவா அண்ணா கமெண்ட் ரிபீட்...

 

//கவிதையில் இலக்கணம் இல்லை
நீ இருக்கிறாய் இலக்கண பிழையாய்!?//

ரசித்தேன்

 

நல்லா இருக்குங்க

 

காதலில் இலக்கணப் பிழையும் அழகுதான் கௌசி !