என் சௌந்தரியமே...!


   வரைய தூரிகை எடுத்தேன் 
   வரைய மறுத்து
   வடிக்கிறது 
   உனக்கு ஒரு கவிதை ! 

   பாசத்தையும்  பரிவையும்  
   பாச கயிறாக்கி   
   என் நெஞ்சோடு 
   பிணைத்தாய் இறுக்கமாய் !  

   நீ பிறந்தாய் 
   உன் தாயின் மகனாக
   நான் பிறந்தேன் 
   என் தாயின் மகளாக

   இணையத்தால் இணைந்தோம்
   ஒரே தாயின் பிள்ளைகளாய் !
   இணைத்தது இறைவன் என்கிறேன் நான்
   விதி என்று சொல்லி சிரிக்கிறாய் நீ ! 

   வீட்டிற்கு வந்தேன்  உன்னை காண 
   தயங்கி வாசலுடன் திரும்பினேன் 
   சிறகொடிந்து  நீ  
   நிற்பதை  காண சக்தி அற்று !

   என்றாவது ஒரு நாள் என் வாசல் 
   வருவாய் நடந்து ! 
   அந்நாளும் வந்திடாதோ 
   என் மனமும் குளிர்ந்திடாதோ !


   என் மேல் நீ காட்டும் பாசம் 
   கண்டு என்னுள்ளம் கலங்குகிறது 
   என் பிள்ளையாய் நீ 
   பிறந்திருக்க கூடாதா என்று !! 


   என் சௌந்தரியமே
   உரக்க ஒருமுறை அழைத்திடு
   அம்மா என்றே
   பாலையிலும் பூ பூக்கட்டும் !!

44 comments:

வடை

 

என் மேல் நீ காட்டும் பாசம் கண்டு என்னுள்ளம் கலங்குகிறது என் பிள்ளையாய் நீ பிறந்திருக்க கூடாதா என்று !!//

வாவ் நல்ல இருக்கு சகோ

 

உறவுகள் பேணப்பட வேண்டியவை....! சிந்தாமல் சிதறாமல் அதன் அதன் அழகில்...!

பாசங்களிலும் அன்பிலும் எப்போதும் ஒழியட்டும் முரண்கள்..! தாய்மையை உணர முடிகிறது... அட்டகாசமாய்...! மாசற்ற எதிர்பார்காத அன்புதானே கடவுள்...!

வெல்டன் கெளசல்யா!

 

உங்கள் அன்பையும் அதன் குணங்களையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

 

உலகிலே அதிகம் பாசம் வைப்பது அம்மா தான் அந்த வார்த்தை மிகவும் பிடித்து இருக்கு அம்மா....

 

என் மேல் நீ காட்டும் பாசம்
கண்டு என்னுள்ளம் கலங்குகிறது
என் பிள்ளையாய் நீ
பிறந்திருக்க கூடாதா என்று !!


.....தாயன்போடு ஏங்கும் உணர்வுகளை அருமையாய் வெளிப்படுத்தும் வரிகள்.

 

ஓவியம் போல் உங்கள் கவிதையும் அழகு.அருமையான வரிகள்.

 

தாய் என்கிற உறவு ஒரு ஒப்பற்ற உறவு. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தாயன்போடு பழகுவது அருமை :-)

 

பாசம் அன்பும் கொட்டும் கவிதை.. ஏக்கம் தெரிகிறது வரிகளில்..

அருமை சகோ...

 

\\என் சௌந்தரியமே
உரக்க ஒருமுறை அழைத்திடு
அம்மா என்றே
பாலையிலும் பூ பூக்கட்டும் !!\\
பாசத்தை உணர்த்துகின்றன வரிகள்.

 

என் சௌந்தரியமே
உரக்க ஒருமுறை அழைத்திடு
அம்மா என்றே
பாலையிலும் பூ பூக்கட்டும் !

ஏக்கம்மிகு பாச வரிகள் மனம் பரிதவிக்கிறது ...........
தாயின் பாசத்தை எண்ணி ...........

 

//என்றாவது ஒரு நாள் என் வாசல்
வருவாய் நடந்து !
அந்நாளும் வந்திடாதோ
என் மனமும் குளிர்ந்திடாதோ !
///

வாசல் அப்படின்னா உங்க ப்ளாக் பேரா அக்கா ..?

 

Very nice and very proud to following you...

Kurinji

 

// என் சௌந்தரியமே
உரக்க ஒருமுறை அழைத்திடு
அம்மா என்றே
பாலையிலும் பூ பூக்கட்டும் !!//


சூப்பர் சகோ தயை பத்தி நீங்கள் கூறி இருக்கும் கவிதை .........

இந்த கவிதை நல்லா புரிந்தது சகோ ......மெய்யாலுமே .........நாட் ஜோக்

 

கடைசி வரி நெகிழ வைக்கிறது.

 

ஃஃஃஃஃஃ நீ பிறந்தாய்
உன் தாயின் மகனாக
நான் பிறந்தேன்
என் தாயின் மகளாகஃஃஃஃ

அங்க தொட்டு இங்க தொட்ட கடைசில மனதை தொட்டுவிட்டடீர்கள்..

 

உங்கள் அன்பான உள்ளம்
அழகாய் வரிகளில்.....
வாழ்த்துக்கள்..!!

 

பாசம்மிக்க பாசம் தேடும் கவிதை.படம் அதனை மெருகூட்டுகிறது கௌசி !

 

தாய்மை உணர்வுடன் அன்பை சொன்னது சூப்பர்

 

கல்பனா...

வாவ்...சீக்கிரமா உங்க கமெண்ட், சந்தோசமா இருக்கு தோழி. உங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.

 

dheva ...

//சிந்தாமல் சிதறாமல் அதன் அதன் அழகில்...!//

அந்த அழகு இன்னும் பேரழகாக மாறவேண்டும்...

//பாசங்களிலும் அன்பிலும் எப்போதும் ஒழியட்டும் முரண்கள்..!//

அன்பில் தூய்மை இருக்கும் பொது முரண்கள் பெரும்பாலும் தோன்றுவதே இல்லை...களங்கம் இல்லாத அன்பினால் பல உள்ளங்களையும் இந்த உலகத்தையும் ஆளலாம்.

புரிதலுக்கு நன்றி.

 

ஜீவன்பென்னி...

ரசனைக்கும் புரிதலுக்கும் நன்றி சகோ.

 

சௌந்தர் கூறியது...

//உலகிலே அதிகம் பாசம் வைப்பது அம்மா தான் அந்த வார்த்தை மிகவும் பிடித்து இருக்கு அம்மா....//

அம்மா வெறும் வார்த்தை மட்டும் இல்லை சௌந்தர் அது ஒரு உணர்வு... வார்த்தைகள் ஒழிந்து போகலாம் உணர்வுகள் நம்முடன் கலந்தது ...

நன்றி சௌந்தர்.

 

@Chitra ...

புரிதலுக்கு நன்றி சித்ரா.

@ஜீ...

thanks


asiya omar ...

புரிதலுக்கு நன்றி தோழி.

 

சுபத்ரா கூறியது...

//எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து தாயன்போடு பழகுவது //

ஆமாம் தோழி இது ஒரு உன்னத உறவு, அந்த உறவை நான் உணர்ந்த தருணம் அற்புதம்...அதை வார்த்தையில் சொல்ல தெரியவில்லை என்பதே உண்மை.

உங்களின் முதல் வருகைக்கு மகிழ்கிறேன் சுபத்ரா

 

வினோ...

புரிதலுக்கு நன்றி சகோ.

:)

 

அம்பிகா...

பாசத்தை முழுதும் உணர்த்தவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது தோழி...!!

புரிதலுக்கு நன்றி.

 

dineshkumar ...

உங்க அம்மாவை நினைக்க வச்சிட்டேன் போல...

நன்றி சகோ.

 

கோமாளி செல்வா...

//வாசல் அப்படின்னா உங்க ப்ளாக் பேரா அக்கா ..?//

இந்த பிளாகிற்கு தான் வந்திட்டு போயிட்டு இருக்கிறானே...?! :))

நான் வர சொல்றது என் வீட்டு வாசலுக்கு... புரிஞ்சுதா ?? :)))

 

Kurinji கூறியது...

//Very nice and very proud to following you...//

thank u for ur first visit and following me...

:))

 

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//இந்த கவிதை நல்லா புரிந்தது சகோ ......மெய்யாலுமே//

அப்படியா...?? நான் எழுதியதின் பலன் நிஜமா இப்பதான் தெரியுது பாபு.

//...நாட் ஜோக்//

அதை சொன்னதோட நிறுத்தி இருந்தா சந்தோசப்பட்டு இருந்திருப்பேன்...ஜோக் இல்லைன்னு சொன்னப்போது தான் டௌவுடே வருது...ம்...

:))

 

அன்பரசன் கூறியது...

//கடைசி வரி நெகிழ வைக்கிறது//

உங்களின் புரிதலுக்கு நன்றி சகோ. எழுதி முடித்து படித்து பார்த்தபோது எனக்கும் அத்தகைய நிலைதான் ஏற்பட்டது.

 

உணர்வுகளை அருமையாய் வெளிப்படுத்தும் கவிதை.

 

ம.தி.சுதா கூறியது...


//அங்க தொட்டு இங்க தொட்ட கடைசில மனதை தொட்டுவிட்டடீர்கள்..//

அம்மாவை ரொம்ப பிடிச்சவங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி கவிதை பிடிக்கும்.

சரிதானே சகோ நன்றி...

 

தாய்மை துளிர்க்கிற கவிதை.

நல்லாருக்கு கௌசல்யா!

 

Ananthi கூறியது...


//வாழ்த்துக்கள்..!!//

எங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சொன்னதுக்கு நன்றி தோழி.

 

ஹேமா கூறியது...

//பாசம்மிக்க பாசம் தேடும் கவிதை.படம் அதனை மெருகூட்டுகிறது கௌசி //

உண்மைதான் ஹேமா...இந்த படம் செலக்ட் பண்ணியதும் இந்த கவிதையின் நாயகன் சௌந்தர் தான்.
:))

 

பார்வையாளன் கூறியது...

புரிதலுக்கு நன்றி சகோ. தொடர் வருகைக்கு மகிழ்கிறேன்

 

பதிவுலகில் பாபு...

நன்றி சகோ.

 

தாய்மைக்கு மிஞ்சிய உறவேது

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

 

அருமையா இருக்கு சகோ கவிதை!
சாரி சகோ நான் லேட்..

 

இப்பெல்லாம் இப்படியான நெகிழ்வுகள், உறவுகளுக்கு வாய்ப்பே இல்லாம உலகம் வறண்டுகிட்டே வருது. அப்படியொரு நெகிழ்வுக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி.