ஏனடா...?!

            
            உன் மீதான என் அன்பு  
            புரிந்தும்  சில நேரம்
            எதிர்வாதம் செய்வாய் !
            வேண்டுமென்றே 
            முரண்பாடாய் பேசி 
            சண்டையிடுவாய் !
            இப்படி சின்ன சின்ன 
            சண்டைகள் வந்தாலும் 
            இறுதியாக நான் 
            சொல்லியபடி  செய்துவிட்டு
            'உனக்காகத்தான் செய்தேன்' 
            என்று சொல்லி
            வெறுப்பேற்றுவாய்...!
            என்னை தவிக்க வைத்து 
            வேடிக்கை பார்ப்பதில் 
            என்ன சுகம் கண்டாயடா !?


            
            பேசி விடைப்பெற்று செல்லும் 
            ஒவ்வொரு முறையும்
            கவிதை ஒன்றை  
            எழுத வைத்து விட்டே 
            செல்கிறது உன் குரல் !!



20 comments:

"ஏனடா...?///

நல்ல கேள்வி

 

உன் மீதான என் அன்பு
புரிந்தும் சில நேரம்
எதிர்வாதம் செய்வாய் !///

எதிர் வாதம் செய்ய வேண்டாமா

வேண்டுமென்றே
முரண்பாடாய் பேசி
சண்டையிடுவாய் !///

அது ஒரு ஜாலி தான்


என்னை தவிக்க வைத்து
வேடிக்கை பார்ப்பதில்
என்ன சுகம் கண்டாயடா !?
/////
எந்த சுகம் இருக்காது...

 

தினம் நடப்பதை
அருமையாக
கவியில் கொட்டி
இருக்கிறீர்கள்

இந்தக் கவிதையின்
கருத்து பலருக்கு
பரிச்சயம் ஆனதே

 

நல்ல கவிதை

 

இந்த ஏண்டா அப்டீங்கிரதுக்கு பதிலா,ஏண்டி..போட்டா இன்னும் பொருத்தமா இருந்திருக்கு,,,

ஆனா அதுல இந்த வரிய எடுக்கவேண்டி இருக்கும்..
இறுதியாக நான்
சொல்லியபடி செய்துவிட்டு
'உனக்காகத்தான் செய்தேன்'


ஆ ஆஆ..அதுமட்டும் நடக்காது இந்த பொண்ணுங்கல்ட்ட...

டக்கால்டி பார்ட்டிங்க...

மற்றபடி கவிதை நல்லா இருக்கு....

 

அன்பு வழியும் நிலைகளை அதிர வைப்பதையே சிரத்தையாகச் செய்யும் நம் அன்புள்ளங்களின் முரண்கள் எப்போதும் நமக்கு அன்னியமாகவோ கோபமூட்டுவதாகவோ இருக்காது.
அவ்வழியே இக்கவிதையும் உங்கள் சிறு தவிப்பையும் அன்பின் பாங்கையும் அழகாய் வெளிக்காட்டியுள்ளது சகோ!
சூப்பர் :)

 

ஃஃஃஃகவிதை ஒன்றை
எழுத வைத்து விட்டே
செல்கிறது உன் குரல் !!ஃஃஃஃ

அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்..

 

நல்ல கவிதை ..

 

தினசரி வாழ்க்கையே கவிதை மயம் தான் போல...

 

ஊடலுடன் கூடிய காதல்! :-)

 

கவிதை எழுதச்செய்யும் குரலுக்கு வாழ்த்துக்கள்

விஜய்

 

அவர் எழுதிவிட்டுப்போன கவிதைகள்தானே உங்கள் எண்ணங்களில்...பின்னர் பதிவாக எங்களுக்கு !

 

:-) கவிதை நல்லா இருக்குங்க.. :-)

 

/ இப்படி சின்ன சின்ன
சண்டைகள் வந்தாலும்
இறுதியாக நான்
சொல்லியபடி செய்துவிட்டு
'உனக்காகத்தான் செய்தேன்'
என்று சொல்லி
வெறுப்பேற்றுவாய்...! /

இதுவும் ஒரு வகை அன்பின் வெளிப்பாடு தானே...

கவிதை அருமைங்க...

 

கவிதை நன்றாக இருந்தது!!

 

நல்ல கவிதை! :-)

 

//என்னை தவிக்க வைத்து
வேடிக்கை பார்ப்பதில்
என்ன சுகம் கண்டாயடா !?//

அதுதானே சுகம்....

 

நல்ல கவிதை... கலக்குங்க...

 

//பேசி விடைப்பெற்று செல்லும்
ஒவ்வொரு முறையும்
கவிதை ஒன்றை
எழுத வைத்து விட்டே
செல்கிறது உன் குரல் !!
/

அப்படின்னா இங்க எழுதுற கவிதை எல்லாம் உங்களது இல்லையா அக்கா ..?
ஹி ஹி ஹி

 

அருமையான வரிகள் கௌசல்யா...

//என்னை தவிக்க வைத்து
வேடிக்கை பார்ப்பதில்
என்ன சுகம் கண்டாயடா//

இது என்னை கவர்ந்த வரிகள்...