உன்னால்...!

                               
                               போராட்டங்கள் சங்கிலி தொடராய் தொடர 
                               தனிமையில் வெறுமையை தேடி மனம் அலைய  
                               சிந்தனை செய்தே செத்து கிடக்கிறது அறிவும் !

                               அகலக்கால் வைக்காதே விரைவில் அடிவிழும்
                               பெரியோர் அறிவுரை சரிதானோ 
                               என்றே பிதற்றுகிறது மனம் !

                                கண்ணீரால் கவலைகளை கழுவிவிட 
                                முயன்றும் கவலை தொலையவில்லை
                                கண்ணீரும் நிற்கவில்லை !

                                தட்டினேன் திறக்கவில்லை
                                கேட்டேன் கிடைக்கவில்லை
                                தேடினேன் கண்டடையவில்லை !

                                வெளிவர  வகையற்று ஓட்டுக்குள் 
                                நத்தையாய் ஒளிந்து கிடக்கிறேன் !
                                எதற்கும்  கலங்காத என்னை கதற 
                                வைக்கிறது வாழ்க்கை !
                                 
                                பற்றி கொள்ள உன்னிடம் கரம் நீட்டினேன் 
                                கரம் விடுத்து உயிர் பற்றினாய் உறுதியாய் !
                                ஒரே ஆறுதலாய், உயிராய் நீ இருக்கையில் 
                                இனி உதிரம் வற்றியும் துக்கம் இல்லை !

                                என் காயங்களை உன் கண் அசைவில் 
                                கவசமாய் மாற்றி விட்டாய் ஒரு நொடியில் !
                                நெருப்பை ஒரு போதும் கரையான்கள் அரிக்காது 
                                என்று சொல்லியே குளிர வைக்கிறாய் என்னை !

                               'எனதுயிரே ! துயரங்களை தூரப்போடு 
                               நாளையும் இருக்கிறது ஒரு போராட்டம் 
                               சந்திக்க வேண்டும் உற்சாகமாய்' 
                               என்றே திடப் படுத்துகிறாய் தினமும் !

                               'இன்னும் கொஞ்சம் அமைதி கொள்   
                               என் தோள் இருக்கிறது' என்றே 
                               சாய்த்து கொள்கிறாய் என்னை !
                               
                               சோகம் இடியாக நெஞ்சில் 
                               இறங்கும் போதெல்லாம்  
                               என் மனம் தளராமல் தாங்குகிறாய் !

                               அவமான கல்லில் அழகு சிலை 
                               அற்புதமாய் செதுக்குகிறேன் 
                               உன்னால் இன்று !!  

                                                                   ******************






எனக்கு முதல் வாழ்த்து சொல்லிய சௌந்தருக்கு என் அன்பான நன்றிகள் !!  
                      அனைவருக்கும்  என் அன்பான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் !!


11 comments:

துயரங்களை தூக்கி போட்டு உற்சாகமாய் எழுந்த இந்த நாள் உண்மையில் ஒரு நல்ல நாள்தான் !! பழைய சோகங்கள் இனி இல்லை என்பதையே இந்த கவிதை எனக்கு உணர்த்துகிறது..

கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...

 

//வெளிவர வகையற்று ஓட்டுக்குள் நத்தையாய் ஒளிந்து கிடக்கிறேன் !//

//என் காயங்களை உன் கண் அசைவில்
கவசமாய் மாற்றி விட்டாய் ஒரு நொடியில் !
நெருப்பை ஒரு போதும் கரையான்கள் அரிக்காது
என்று சொல்லியே குளிர வைக்கிறாய் என்னை !//


அருமையான வரிகள்.. சோகத்திலும் ஒரு சுகம்,, ஆறுதல் கரம் நீள்வதே...


//இன்னும் கொஞ்சம் அமைதி கொள்
என் தோள் இருக்கிறது' என்றே
சாய்த்து கொள்கிறாய் என்னை !//


மொத்தத்தில் கவிதை, ஒரு உணர்வுக்குவியல்...


சௌந்தர் சொன்னதைப்போல, பழைய சோகம் இனி வேண்டாம் அக்கா... இன்றுமுதல் இன்னன்னாள் முதல்....


**** இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் ****

 

அழகான இளந்தளிர் படம் அருமை அக்கா...

 

இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்..அக்கா..

கவி சொன்னா மாதிரி "உணர்வுக்குவியல்..."
"அமைதிக்குவியல்.."
இந்த மாதிரி எல்லாம் சொல்லலை..

பிரச்சினை வந்தா மனம் கலங்காமல் எதிர்கொண்டுவிட்டு..முடிந்தவுடன் மறப்பது நல்லது...forgot past ..use pain...இந்த வரி பொருத்தம் நிறையா சொல்லும்..(எனக்கு மிக பிடித்த வரி)

எங்கள் ஊர் பக்கம் வாழ்த்துக்கள் சொன்னா இனிப்பு கொடுப்பது வழக்கம்...ஆனா இங்கே கிடைக்குமா தெரியலை..)))

 

சகோ படித்தவுடன் என்ன சொல்வது என்று தெரியவில்லை..
இதே அனுபவத்தில் இப்பொழுது நகர்கிறது என் வாழ்க்கை..

கவிதைக்கு நன்றி...

 

கவிதை மிகவும் அருமை
உங்களுடைய உணர்வுகள் தெரிகிறது
ஆறுதல் இருக்க பழைய சோகங்கள் எதற்கு பிறர் சோகங்களை களைய முனையுங்கள்

ஏறக்குறைய உங்கள் இடத்தில் தான் நானும் இருக்கிறேன். சோகம் நம் மனதில் நாமே உண்டாக்கியது தானே அதை நாமே வெளியேற்றவும் தெரிந்திருப்போம்

 

அருமையான கவிதை... ரொம்ப ப்ராக்டிக்கலா இருந்துச்சு...

 

கவிதை அருமை

 

அவமானக் கல்லில்
அழகு சிலை
அருமை.

 

//வெளிவர வகையற்று ஓட்டுக்குள்
நத்தையாய் ஒளிந்து கிடக்கிறேன் !
எதற்கும் கலங்காத என்னை கதற
வைக்கிறது வாழ்க்கை !//

நன்றாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் தோழி..!!

 

துயரங்கள் தொடரும் நேரங்களில் உற்றதுணையின் இருப்பே பலநூறு யானையின் வலிமைக்கு ஒப்பாகும்.
இதுவும் கடந்து போகும் சகோ!