'இனியது காதல்' தொடர் - 3

நீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லிய அன்றே மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது.....!
என்று முந்தைய தொடரில் சொல்லி இருந்தேன்.  இங்கே அதை தொடருகிறேன்....





'காதல்'  நேசிக்க மறந்தவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.  
                                                                                                        - ஷேக்ஸ்பியர் 



சென்னையின் சந்தடி மிகுந்த பகுதிகளில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கும் ஒரு ஏரியா ஒன்றில் தான் நாங்கள் அப்போது குடியிருந்தோம். தனி தனி காம்பவுண்ட் வீடுகள் வரிசையாய் அணிவகுத்து ஒரு ஒழுங்கில் இருக்கும். தெருவின்  இரு மருங்கிலும் குல்மோகர் மரங்களும், கொன்றை மரங்களும் போட்டி போட்டுக்கொண்டு வளர்ந்து நிற்கும் அழகே அழகு. 


வசந்த காலத்தில் மரங்களில் சரம் சரமாக தொங்கும் கொன்றை மலர்களும், சிகப்பு நிற குல்மோகர் பூக்களும் மலர்ந்து மணம் வீசி அந்த ஏரியா முழுவதையும் ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடும். காலையில் வாக்கின் செல்பவர்கள் தரையில் படர்ந்திருக்கும் பூக்களின் மேல் தங்கள் கால்கள் படாதவாறு தட்டு தடுமாறி செல்வதை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும். 

"திங்கள் கிழமை வந்தாலே இப்படித்தான், முதல் நாள் லீவ் நினைப்புலேயே ரொம்ப நேரம் தூங்கிறது...நேரம் ஆச்சு எழுந்திரு, காலேஜ் போற வழிய பாரு " 


ச்சே நல்ல கனவை இந்த அம்மா கெடுத்திட்டாங்களே , இத்தனை நாளா முகம் காட்டாமல் பேசிட்டு மட்டும் போன என் கனவுக்காதலன் , இன்று தான் மெதுவா என் பக்கம் திரும்பினான், நல்லா முகத்தை பார்க்கலாம்னா இந்த அம்மாவால அதுவும் போச்சு....?!! 


"இன்னும் என்னடி பண்ற ?" "இதோ வந்திட்டேன்மா"  மிச்ச தூக்கத்தை போர்வையுடன் மடித்து கட்டிலில் ஓரமாய்ப் போட்டுவிட்டு எழுந்தேன். 


முகம் வரை இழுத்து போர்த்தி தூங்கிட்டு இருந்த என் தம்பியின் மேல ஜக்கில் இருந்த தண்ணிய ஊத்திட்டு, அவன் எழுந்து என்னை அடிக்க வருவதுக்குள் அங்கே இருந்து ஒரே ஓட்டம். எனக்கு என்னவோ இன்றைய விடியல் எனக்காத்தான் என்பது போல மனசு பூரா உற்சாகமாக இருந்தது.  

ஜன்னலை திறந்து சூரிய நண்பனுக்கு ஒரு குட் மார்னிங் சொல்லிட்டு வாசல் தெளிக்க பக்கெட் தண்ணியுடன் வெளியில் வந்தேன். பக்கத்து காம்பௌண்டில் ஒரே சத்தமாக கேட்டது...ரொம்ப நாளா பூட்டி  இருந்த வீட்டில் இப்ப என்ன சத்தம் என்று மெதுவா வாசல் தெளிச்சிட்டே எட்டி பார்த்தேன்...புதுசா குடி வந்திருக்காங்க போல...அடடா இது என்னடா என் தனிமைக்கு வந்த சோதனை...?!! பக்கத்தில் யாரும் இல்லாத தைரியத்தில் எப்பவும் மொட்டை மாடியே கதின்னு இருப்பேன்...நானும் நிலாவும் தனியா பேசிட்டு பல நாள் இருந்திருக்கோம்...இனி அப்படி முடியாதேனு இருந்த உற்சாகம் எல்லாம் அப்படியே வடிந்துவிட்டது. 

"கோலம் போட போனா அதை பண்ணாம என்ன யோசனை" உள்ளே இருந்து குரல் வர, வேகமா ஏதோ ஒரு கோலத்தை போட்டுட்டு வந்திட்டேன். 


வெளியில் வந்த என் அம்மா "என்னடி welcome கோலம் போட்டுட்டு வந்திருக்க , யாரை வரவேற்க போற" னு கேட்க, 


எனக்கு  ஒண்ணும்  புரியல, வேற ஒரு  கோலத்திற்கு தானே புள்ளி வச்சேன், எப்படி மாறியது  !?? 


"சரி விடுமா, இதும் கோலம் தானே !"  என்று சமாளிச்சிட்டு காலேஜ் கிளம்ப ரெடியானேன். 

காலேஜில் எனக்கு இது முதல் வருடம். எனக்கு பிடிச்ச மேஜர் பிசிக்ஸ்...அதனால அந்த சப்ஜெட் மட்டும் ஒழுங்கா படிச்சிடுவேன், மத்ததெல்லாம் ஏனோ தானோ தான்...! குளிச்சி ரெடி ஆகி எனக்கு ரொம்ப பிடிச்ச நீல கலரில் வெள்ளை பூக்கள் இறைத்த சுடிதார் அணிந்து துப்பட்டாவை வேகமா பின் குத்தினேன், ஆ பின் விரலில் குத்தி ஒரு துளி ரத்தம் வெளியில் ஹாய் சொல்லுது. ஸ் என்னாச்சு இன்னைக்கு எல்லாம் ஒரே ஏடாகூடமா இருக்கேன்னு யோசிச்சிட்டே அம்மா கொடுத்த இரண்டு இட்லியை நின்னுட்டே உள்ளே தள்ளிட்டு இருந்தேன். 

காலிங்பெல் குக்கூ னு கூப்பிட,  இதோ வரேன்னு சொல்லிட்டே கதவை திறந்தேன்... இந்த ஏரியாவில் இதுவரை பார்க்காத  இரு புது முகங்கள், இளைஞன் ஒருவனும் , நடுத்தர வயதில் ஒரு பெண்ணும் நின்றுகொண்டிருந்தார்கள்.  (நமக்கு தான் ஒரு  நிமிஷம் போதுமே அவங்களை ஸ்கேன் பண்ண.....!) 


அந்த பெண்ணிற்கு ஒரு 30 வயது இருக்கும் அழகா அம்சமா இருந்தாங்க.  அந்த பையனுக்கு அக்காவோ, அண்ணியாகவோ இருக்கலாம், அப்புறம் அந்த பையன், வயசு என்ன ஒரு 20 , 21 இருக்கும்...  அந்த கலரில் ஒரு பெண் என்றால் சூப்பர் பிகரா இருப்பா...ஆனா இப்படியா கோதுமை கலரில் பையன் இருக்கிறது...சுத்தமா நல்லா இல்லை...(பசங்க கொஞ்சம் மாநிறமா, லேசா கருப்பா இருந்தா ஓ.கே,  ஆனா இது ஒரு தேறாத கேஸ்...!) 


அந்த பெண் சிரிச்சிட்டே என் அம்மாவிடம், "வணக்கம். இந்தாங்க, குங்குமம் எடுத்துகோங்க... நாங்க பக்கத்து வீட்டுக்கு புதுசா குடி வந்திருக்கோம் "   (என் சுதந்திரத்தை கெடுத்திட்டு குங்குமம் வேற தரீங்களா...?!) நானும் வாங்கனு ஒரு வணக்கம் சொல்லி அந்த குங்கும சிமில்ல  இருந்து கொஞ்சம் தொட்டு நெத்தில வச்சிட்டு "சரிம்மா நீங்க பேசுங்க, எனக்கு நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்" னு பேக் எடுத்து மாட்டிட்டு வெளியில் வந்துவிட்டேன். 

வெளி கேட்டை  திறக்கும் போது அந்த இளைஞன்  பக்கம் பார்த்தேன் , இரண்டு பெண்கள் பேசும் போது நாம என்ன செய்யனு வாசலில் தொங்கிட்டு இருந்த மணி பிளானட் செடியை ஆராய்ச்சி செய்றார் போல...?!!   சரியான அம்மாஞ்சி போலன்னு நினைச்சிட்டு ஒரு முறை சத்தமா "போயிட்டு வரேன்" னு கத்தினேன். "ஏண்டி இப்படி கத்துற, சரி பார்த்து போயிட்டு வா" அம்மா. 

இந்த சத்தம் கூட காதில் விழாத மாதிரி ஆராய்ச்சி தொடர்ந்து  கொண்டிருந்தது. என்ன ஜென்மமோ, இப்படி ஒரு வயசு பொண்ணு பக்கத்தில் இருக்கிறதை கூட கண்டுக்காம, பெரிய திமிர் பிடிச்சவனா இருப்பான் போல...!? சரி நமக்கென்ன வந்தது ? வாசல் கேட்டை இழுத்து அடைச்சிட்டு தெருவில் இறங்கி  நடக்க தொடங்கினேன். வழி முழுவதும் எதையோ மறந்து விட்டுட்டு வந்ததை போலவே தோன்றியது.....?!!


அவஸ்தைகள் தொடரும்...... 




பின்குறிப்பு
(முதல் முறையாக ஒரு கதை (?) மாதிரி எழுத முயற்சி பண்ணி இருக்கிறேன்...குறை இருந்தால் தயங்காம சொல்லிடுங்க...இத்தோட இப்படி எழுதுறதை நிறுத்திக்கிறேன் ...!!?)

பிரியங்களுடன் கௌசல்யா


     

37 comments:

கதையா நான் என்னவோ உண்மையின்னு...
நல்ல நடையில் அழகாய் போகுது. தொடருங்க.

 

கதை மாதிரி இல்ல ... அசலா கதையே தான். தொடர்ந்து எழுதுங்க, கௌசல்யா!

 

கதை அருமையா போகுது!!!!!
எப்போ காதல் என்ட்ரி ஆகும்???????

 

'காதல்' நேசிக்க மறந்தவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.
ஷேக்ஸ்பியர்

உண்மையை சொன்னீர்கள்

 

கதை நன்றாக இருக்கிறது.
மணி ப்ளான்ட் கிட்ட மனதை விட்டு வந்திருப்பீங்களோ..!

 

நல்லாருக்குங்க எழுத்து நடை...

தொடர்ந்து எழுதுங்கள்

 

கதை நன்றாக இருக்கிறது கௌசல்யா.
தொடருங்க

 

//காலையில் வாக்கின் செல்பவர்கள் தரையில் படர்ந்திருக்கும் பூக்களின் மேல் தங்கள் கால்கள் படாதவாறு தட்டு தடுமாறி செல்வதை பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கும். //

அழகான காட்சி அக்கா...

//என் கனவுக்காதலன் , இன்று தான் மெதுவா என் பக்கம் திரும்பினான், நல்லா முகத்தை பார்க்கலாம்னா இந்த அம்மாவால அதுவும் போச்சு....?!! //

ஹை... அமாவுக்கு ஒரு சபாஷ்...

//மிச்ச தூக்கத்தை போர்வையுடன் மடித்து கட்டிலில் ஓரமாய்ப் போட்டுவிட்டு எழுந்தேன். //

அழகான சிந்தனை...

//எனக்கு ஒண்ணும் புரியல, வேற ஒரு கோலத்திற்கு தானே புள்ளி வச்சேன், எப்படி மாறியது !?? //

ம்ம்ம்... குழம்ப ஆரம்பிச்சுட்டாங்களா கதாநாயகி..?

//நீல கலரில் வெள்ளை பூக்கள் இறைத்த சுடிதார்//

அட, சுடிதார் ரொம்ப அழகா இருக்கே...

//வழி முழுவதும் எதையோ மறந்து விட்டுட்டு வந்ததை போலவே தோன்றியது.....?!!//

அக்கா, சீக்கிரமே கதாநாயகி மறந்துவிட்டதை தயவு செய்து எடுத்து கொடுத்துருங்க...பாவம்...

//கதை (?) மாதிரி//

கதை மாதிரியா... அற்புதமா ஆரம்பிச்சிருக்கீங்க... அடுத்த பதிவை எப்போ போடுவீங்கன்னு எதிர்பார்த்துட்டிருக்கேன்... ரொம்ப அருமையா இருக்கு அக்கா....

 

நல்ல நடை அழகாய் இருக்கிறது கதை வாழ்த்துக்கள்

 

கதை நல்லாவே இருக்கு.. தொடருங்கள் தோழி...

விரல்களுக்கும் இதழ்களுக்கும் சண்டை

 

கதை நல்லா இருக்கு.

தொடருங்க.

 

//டே அம்மா கொடுத்த இரண்டு இட்லியை நின்னுட்டே உள்ளே தள்ளிட்டு இருந்தேன்.//

இது சுத்த பொய் 10 இட்லி ன்னு சொன்ன தான் என்னவாம் ......

//(நமக்கு தான் ஒரு நிமிஷம் போதுமே அவங்களை ஸ்கேன் பண்ண.....!) //

பெண்களுக்கே உரிய குணம் .....

//ஆனா இப்படியா கோதுமை கலரில் பையன் இருக்கிறது...சுத்தமா நல்லா இல்லை...(பசங்க கொஞ்சம் மாநிறமா, லேசா கருப்பா இருந்தா ஓ.கே, ஆனா இது ஒரு தேறாத கேஸ்...!)//

கருப்பு தான் உங்களுக்கு பிடிச்ச கலரு .......

//நானும் வாங்கனு ஒரு வணக்கம் சொல்லி அந்த குங்கும சிமில்ல இருந்து கொஞ்சம் தொட்டு நெத்தில வச்சிட்டு "///

ஏன் கை நிறைய எடுத்து முகத்துல அப்பிக்க வேண்டியது தானே .....காலேஜ் போகும் பொது அம்மன் சாமி வருதுன்னு சொல்லுவாங்க இல்லையா .........

//வெளி கேட்டை திறக்கும் போது அந்த இளைஞன் பக்கம் பார்த்தேன் , இரண்டு பெண்கள் பேசும் போது நாம என்ன செய்யனு //

உண்மையான ஆண் மகன் (ஆண்மைக்கு இது தான் அழகு )

//சரியான அம்மாஞ்சி போலன்னு நினைச்சிட்டு ஒரு முறை சத்தமா "போயிட்டு வரேன்" னு கத்தினேன். "//

அந்த பையன் உங்களை சரியான சௌண்டு பார்ட்டின்னு நினைச்சி இருப்பான்

//இந்த சத்தம் கூட காதில் விழாத மாதிரி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. என்ன ஜென்மமோ, இப்படி ஒரு வயசு பொண்ணு பக்கத்தில் இருக்கிறதை கூட கண்டுக்காம, பெரிய திமிர் பிடிச்சவனா இருப்பான் போல//

வயசு பொண்ணா யாரு .யாரு ...ன்னு யோசித்து கொண்டு இருப்பானோ ......?

 

இம்சை பாபு இந்த லிங்க கொடுத்து போய் கலாய்ச்சிட்டு வா மக்கா சொன்னாரு. நானும் அதுக்கு தான் வந்தேன். ஆனா உங்க கதை நல்லா இருக்கு. அதுலையும் போர்வையோட சேர்த்து தூக்கத்தை மடிச்சி வைக்கிறது சூப்பர்... :)

(ஆனா இந்த லைன் நீங்க வேற எங்கையாவது இருந்து காப்பி அடிச்சி இருக்கிங்க தெரிஞ்சா பாபு தீ குளிப்பார்)

 

கௌசி...காதல் கதையா...
ம்ம்....நடக்கட்டும் தொடரட்டும் !

 

தொடர்ந்து எழுதுங்க,அருமையாக இருக்கு,உண்மையா?கறபனையா?

 

//(ஆனா இந்த லைன் நீங்க வேற எங்கையாவது இருந்து காப்பி அடிச்சி இருக்கிங்க தெரிஞ்சா பாபு தீ குளிப்பார்)//
நீதானட என் நண்பன் .போய் நாலு நல்ல வார்த்தை போடுன்னு சொன்ன என்னை மாட்டி விட்டு வந்திருக்கான் ......

 

@@ சே.குமார் கூறியது...

முதல் ஆளா வந்து படித்ததிர்க்கு நன்றி குமார்...


@@ Chitra கூறியது...

நன்றி தோழி.


@@ S Maharajan கூறியது...

//கதை அருமையா போகுது!!!!!
எப்போ காதல் என்ட்ரி ஆகும்??//

அடுத்த பாகத்தில்... நன்றி நண்பரே.


@@ யாதவன்...

நன்றி சகோ.


@@ sulthanonline கூறியது...

//கதை நன்றாக இருக்கிறது.
மணி ப்ளான்ட் கிட்ட மனதை விட்டு வந்திருப்பீங்களோ..!//

ம்...கொஞ்சம் அப்படிதான்...:))
நன்றி


@@ மாணவன்...

நன்றி சகோ.


@@ Harini Nathan...

நன்றி ஹரிணி.

 

@@ கவிநா கூறியது...

//ஹை... அமாவுக்கு ஒரு சபாஷ்...//

கனவுல பார்கலைனா என்ன அதுதான் நேரில் பார்திட்டேனே...பதில் ஒ.கேவா
?? :))

//அக்கா, சீக்கிரமே கதாநாயகி மறந்துவிட்டதை தயவு செய்து எடுத்து கொடுத்துருங்க...பாவம்...//

ம்...அடுத்த தொடரில் எடுத்து கொடுத்துடுறேன் காயத்ரி. :))

ரொம்ப அழகா ரசிச்சி படிச்சதுக்கு நன்றிபா.

 

@@ அன்புடன் மலிக்கா...

நன்றி தோழி. மகிழ்கிறேன்.


@@ கவிதை காதலன்...

நன்றி மணி.


@@ ஆயிஷா...

நன்றி தோழி.

 

@@ இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//இது சுத்த பொய் 10 இட்லி ன்னு சொன்ன தான் என்னவாம் ......//

அது இப்ப சாப்பிடுற அளவு...! :))

//பெண்களுக்கே உரிய குணம் .....//

நாங்கதான் புத்திசாலி ஆச்சே...

//கருப்பு தான் உங்களுக்கு பிடிச்ச கலரு .......//

நிறைய பொண்ணுங்களுக்கு பிடிச்ச கலர் தான்.


//ஏன் கை நிறைய எடுத்து முகத்துல அப்பிக்க வேண்டியது தானே .....காலேஜ் போகும் பொது அம்மன் சாமி வருதுன்னு சொல்லுவாங்க இல்லையா ....//

இருக்கன்குடி மாரியம்மன் நினைவுக்கு வந்துவிட்டதா பாபு...? :))

//உண்மையான ஆண் மகன் (ஆண்மைக்கு இது தான் அழகு )//

ஆமாம் ஆமாம்...!

//அந்த பையன் உங்களை சரியான சௌண்டு பார்ட்டின்னு நினைச்சி இருப்பான்//

பயத்தில கூட திரும்பாம இருக்கலாமே? :)

//வயசு பொண்ணா யாரு .யாரு ...ன்னு யோசித்து கொண்டு இருப்பானோ ......?//

இதெல்லாம் ரொம்ப ஓவர் பாபு...! :))

 

@@ T.V.ராதாகிருஷ்ணன்...

நன்றிங்க. மகிழ்கிறேன்.

 

@@ TERROR-PANDIYAN(VAS) கூறியது...

//இம்சை பாபு இந்த லிங்க கொடுத்து போய் கலாய்ச்சிட்டு வா மக்கா சொன்னாரு. நானும் அதுக்கு தான் வந்தேன்.//

இப்படி எல்லாம் கூட நடக்குதா ?? ஆனா உங்க உண்மை(நேர்மை) எனக்கு பிடிச்சிருக்கு. :))

நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி.

//(ஆனா இந்த லைன் நீங்க வேற எங்கையாவது இருந்து காப்பி அடிச்சி இருக்கிங்க தெரிஞ்சா பாபு தீ குளிப்பார்)//

பொதுவா எதுவுமே புதிதில்லை ஏற்கனவே இருந்ததை அதாவது ஏற்கனவே ஒருத்தர் அரைத்த மாவையே நாமும் அரைக்கிறோம்.

:)))

ஆனா இது காலையில் என் பசங்களை எழுப்பும்போது சொல்ற ஒரு வார்த்தை... அவங்க போர்வையை அவங்களே மடிக்கணும்னு நினைவு படுத்த சொல்றதுங்க.

 

@@ ஹேமா கூறியது...

//கௌசி...காதல் கதையா...
ம்ம்....நடக்கட்டும் தொடரட்டும்//

நல்லா இருக்குன்னு சொல்றீங்களா??இல்லைன்னு சொல்றீங்களா ?

ம்...நன்றி ஹேமா.

 

@@ asiya omar கூறியது...

//தொடர்ந்து எழுதுங்க,அருமையாக இருக்கு,உண்மையா?கறபனையா//

உண்மை, கற்பனை கலந்து...

நன்றி தோழி.

 

//'காதல்' நேசிக்க மறந்தவர்களை ஒரு போதும் ேசிப்பதில்லை. - ஷேக்ஸ்பியர்///

அவரு சொன்னது இருக்கட்டும், நீங்க என்ன சொல்ல வரிங்க...

 

நல்ல உரைநடை, நல்ல நீரோடை போல திரைக்கதை... நடத்துங்க...

 

//இந்த சத்தம் கூட காதில் விழாத மாதிரி ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருந்தது. என்ன ஜென்மமோ, இப்படி ஒரு வயசு பொண்ணு பக்கத்தில் இருக்கிறதை கூட கண்டுக்காம, பெரிய திமிர் பிடிச்சவனா இருப்பான் போல...!? ///

முதல் தடவை எழுதுற மாதிரி தெரியலேங்க.. செமயா இருக்கு மேல சொன்ன வரிய படிக்கும் போது சரியான ராட்சச காதலா இருக்கும் போல...

அசாத்தியமான எழுத்து நடை கெளசல்யா......

 

கதையா இது? அசலான உண்மை மாதிரில இருக்கு! :)

 

உண்மையச் சொல்லனும்னா, உங்க பதிவுல மேற்கோள் காட்டப்போனா, கவிநா அவர்களோட கமெண்ட் மாதிரி ஆயிடும். அதனால ஒரே ஒரு மேற்கோள் கீழே....

ஆனா, சும்மா சொல்லக்கூடாதுங்க, "காதலிக்கவே ஆரம்பிக்காத பசங்களையும், பொண்ணுங்களையும், ஏ....இன்னும் காதலிக்காம என்னப்பா பண்றீங்க? கெளம்புங்க கெளம்புங்க" அப்படீன்னு சொல்ற மாதிரி அட...அட!!
//ச்சே நல்ல கனவை இந்த அம்மா கெடுத்திட்டாங்களே , இத்தனை நாளா முகம் காட்டாமல் பேசிட்டு மட்டும் போன என் கனவுக்காதலன் , இன்று தான் மெதுவா என் பக்கம் திரும்பினான், நல்லா முகத்தை பார்க்கலாம்னா இந்த அம்மாவால அதுவும் போச்சு....?!!//
அடடா....கவிதை டா....!!

உங்க கதையை (?) படிச்சத்துக்கப்புறம் நண்பர் தேவா சொல்லியிருக்காருங்களே, அப்படித்தான் தோணுது!

//அசாத்தியமான எழுத்து நடை கெளசல்யா......//
உண்மைதாங்க! கலக்குங்க கலக்குங்க.....அடுத்த பாகத்துக்கு ஆவலோட வெயிட்டிங்கு.....

பத்மஹரி,
http://padmahari.wordpress.com

 

நடந்த கதையா? எதார்த்தம் தூக்கல்

 

@@ Sathishkumar கூறியது...

//அவரு சொன்னது இருக்கட்டும், நீங்க என்ன சொல்ல வரிங்க.//

பெரிய ஆள் அவர் சொன்னபிறகு நான் என்ன சொல்ல போறேன்...நானும் அதே அதே தான். :)

ரசிச்சி படிசிருப்பீங்கனு நம்புறேன். வருகையால் மகிழ்கிறேன் சதீஷ்.

 

@@ dheva கூறியது...

//மேல சொன்ன வரிய படிக்கும் போது சரியான ராட்சச காதலா இருக்கும் போல...//

தொடர்ந்து படிங்க கொஞ்சம் வித்தியாசமான காதலா(கதை)கூட இருக்கலாம். :))

என்னை ஊக்கபடுத்தும் உங்கள் வார்த்தைக்கு என் நன்றிகள் பல.

 

@@ Balaji saravana கூறியது...

//கதையா இது? அசலான உண்மை மாதிரில இருக்கு//

அடடா என்னவொரு ஒரு கண்டுபிடிப்பு பாலா ! ம்...புரிதலுக்கு நன்றி சொல்றேன், வேற என்ன சொல்றது...?!

:))

 

@@ பத்மஹரி கூறியது...

//இன்னும் காதலிக்காம என்னப்பா பண்றீங்க? கெளம்புங்க கெளம்புங்க" அப்படீன்னு சொல்ற மாதிரி//

ஏன் ஹரி ஒரு முடிவுல தான் இருக்கீங்களா?? என் சகோதரர்கள் ஏற்கனவே என் கவிதையை கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க...

நல்ல வேளை இன்னும் உங்க பின்னூட்டம் பார்க்கலைன்னு நினைக்கிறேன்... :))

உங்களின் அழகான ரசனைக்கு நன்றி ஹரி.

 

@@ சி.பி.செந்தில்குமார் கூறியது...

//நடந்த கதையா? எதார்த்தம் தூக்கல்//

இதை உங்களின் விமர்சனமா நான் எடுத்துக்கலாமா ?! :))

நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்னு ஒரு நம்பிக்கை...அடுத்த பாகம் எழுதலாமா?

 

நண்பருக்கு, இதழில் கட்டுரை எழுதுவது தொடர்பாக தங்களிடம் பேச விரும்புகிறேன். என்னுடைய இ-மெயிலில் தொடர்பு கொள்ளவும். இமெயில்: immanuelprabhu@puthiyavazhviyal.com