காதலே என் காதலே !

                       
                      
                      என் காதல் என்னவென்று சொல்ல !!

                      தொட்டதற்கு எல்லாம் சுணங்கி கொள்ளும்
                      தொட்டாசிணுங்கி காதல் அல்ல !

                      அழுது அரற்றி ஆர்ப்பாட்டம் செய்யும்
                      ஆவேசக் காதல் அல்ல !

                      ஆத்மார்த்தமான ஆன்மாவின்
                      தேடலாம் அந்த  காதல் அல்ல !

                      கைவிட்டு விடாதே என்று இரஞ்சுகிற
                      பரிதாப காதலும் அல்ல !

                     நீ இன்றி நான் இல்லை என்று
                     விசும்புகிற தத்துவக் காதல் அல்ல !

                     இழுத்து என்னுள் அமிழ்த்தி 
                     மூச்சு திணறடிக்கும் முரட்டு காதல் அல்ல !

                     மரித்தபின்னும் வாழும் என்று புலம்பும்
                     காவிய காதலும் அல்ல !

                     என் உயிர் பிரியும் கடைசி தருணத்தில்  
                     உன் உயிர் பறித்து
                     என்னுடன் அழைத்து செல்லும் 
                     ஒரு  'ராட்சஸக் காதல்'  !!


38 comments:

பாவம் நீங்கள் காதலிப்பவரின் நிலைமை...!

 

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

 

துரோக காதலை விட்டு விட்டீர்களே

 

பார்வையாளன் கூறியது...

//துரோக காதலை விட்டு விட்டீர்களே//

இந்த தலைப்பில் ஒரு கவிதை தனியா எழுதியாச்சு...! விரைவில் வாசல் வரும்...! :))

 

அதாவது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஒரு வித வேதனை .இது சில பேருக்கு அந்த வேதனை சந்தோசம் .என்னை போன்றவர்களுக்கு .அப்படி வேதனை படுபவர்களை பார்த்து ஒரு சந்தோசம் ....இனி இப்படி காதல் செய்வியா காதல் செய்வியா ....ன்னு ....

 

சௌந்தர் கூறியது...

//பாவம் நீங்கள் காதலிப்பவரின் நிலைமை...!//

அவருக்கு என்ன ? தனியா விட்டுட்டு போனா ரொம்ப கஷ்டபடுவார்ல, அதுதான் கூடவே கூட்டிட்டு போறது :))

 

Tamilulagam ...

நன்றிங்க

 

//என் உயிர் பிரியும் கடைசி தருணத்தில் உன் உயிர் பறித்து என்னுடன் அழைத்து செல்லும் ஒரு 'ராட்சஸக் காதல்' !!//

மொத்தத்தில் இது மனிதம் உணர்ந்துகொள்ள மனித காதல் அல்ல என்று சொல்ல வர்றீங்களா?

ஹிஹிஹி

நல்லாருக்குங்க உங்க காதல்.....

 

இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//அதாவது மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஒரு வித வேதனை .இது சில பேருக்கு அந்த வேதனை சந்தோசம் //

அட பாபுவா இப்படி சொல்றது ?? உணர்வை அப்படியே சொல்றீங்களே!!

//அப்படி வேதனை படுபவர்களை பார்த்து ஒரு சந்தோசம் ....இனி இப்படி காதல் செய்வியா காதல் செய்வியா//

என்ன ஒரு கெட்ட எண்ணம் இது ?? நீங்க என்ன தான் சந்தொசபட்டாலும் நாங்கலாம் திருந்திற மாதிரி இல்ல...!!?

:))

 

மாணவன் கூறியது...

//மொத்தத்தில் இது மனிதம் உணர்ந்துகொள்ள மனித காதல் அல்ல என்று சொல்ல வர்றீங்களா?//

அதே அதே !!

//நல்லாருக்குங்க உங்க காதல்..//

ரொம்ப நன்றிங்க :))

 

நல்ல காதலுங்க.. பாவம் அவரு.... உங்க பாசம் இப்படியா....

 

//என் உயிர் பிரியும் கடைசி தருணத்தில்
உன் உயிர் பறித்து
என்னுடன் அழைத்து செல்லும்
ஒரு 'ராட்சஸக் காதல்' !!//

யார் அந்த அதிஷ்டசாலி
புத்தாண்டிலாவது பழிதீர்க்கும் எண்ணம் எம்மை விட்டு நீங்கட்டும்

 

இதுதான் காதல் சூப்பர் சகோ...

 

unga lover paavam kousalya ,,,
but kavithai super

 

சூப்பர் கவிதை... அக்கா

 

நல்லா இருக்கு ஆனா பாவம்ல! :-)

 

ராட்சசி !!!!!

வாழ்த்துக்கள்

விஜய்

 

ராட்சக்காதல் புதுசாக இருக்கு கௌசல்யா.

 

////பாவம் நீங்கள் காதலிப்பவரின் நிலைமை...!//

அவருக்கு என்ன ? தனியா விட்டுட்டு போனா ரொம்ப கஷ்டபடுவார்ல, அதுதான் கூடவே கூட்டிட்டு போறது :))///

ஹா ஹா ஹா.. என்னங்க.. இப்படி பின்றீங்க.. செம கமெண்ட் :-))

 

ராட்சசக் காதல்... ஹ்ம்ம்ம்.. புதுமையான...காதல் தான்.. :-)

 

அப்போ நீங்களும் காதல் ராட்சசியோ....!

தமிழ்மண ஓட்டுப் போடமுடியவில்லை கௌசி !

 

கவிதை புதுமையாகவும் அருமையாகவும் இருந்தது...

 

//Kousalya சொன்னது…

அவருக்கு என்ன ? தனியா விட்டுட்டு போனா ரொம்ப கஷ்டபடுவார்ல, அதுதான் கூடவே கூட்டிட்டு போறது :))//
ரைட்டு! எவ்வளோ அன்பு உங்களுக்கு!
விதவிதமான வார்த்தைகளில் சொன்னாலும் காதல் காதல் தான்! :)

 

@Kousalya

// உன் உயிர் பறித்து
என்னுடன் அழைத்து செல்லும்
ஒரு 'ராட்சஸக் காதல்' !!
//

இதுக்கு பேரு ராட்சஸக் காதல் இல்லை. கொலைகார காதல். உங்க கடைசி காலத்துல உங்க பக்கத்துல இருக்கரது அவருக்கு பாதுகாப்பு இல்லை. ரைட்டு.. :)

 

அருமையா எழுதியிருக்கீங்க... ராட்சஸ காதலை சொன்ன விதம் அருமை.

 

என் உயிர் பிரியும் கடைசி தருணத்தில்
உன் உயிர் பறித்து
என்னுடன் அழைத்து செல்லும்
ஒரு 'ராட்சஸக் காதல்' !!/////////ராட்சஸக் காதல் நல்லா இருக்கு... :)

 

@@வினோ கூறியது...

///நல்ல காதலுங்க.. பாவம் அவரு.... உங்க பாசம் இப்படியா....//

ஹி..ஹி ஆமாம் சகோ :))


@@டிலீப் கூறியது...

//யார் அந்த அதிஷ்டசாலி//

யாரா...அவர்தான் அவரே தான்... அந்த அதிர்டசாலி தான் !! :))

@@dineshkumar ...

நன்றி சகோ


@@கல்பனா கூறியது...

//unga lover paavam kousalya //

என்னபா எல்லோரும் சொல்லி வச்ச மாதிரி சொல்றீங்க...!! :)))


Kurinji கூறியது...

//Paavam ..//

நீங்களும் அதே தானா...?!!

சந்தோசம் தோழி உங்களின் தொடர் வருகை பார்த்து !!

 

பிரஷா கூறியது...

//சூப்பர் கவிதை... அக்கா//

நன்றி பிரஷா.

@@ஜீ... கூறியது...

//நல்லா இருக்கு ஆனா பாவம்ல//

ஆமாம்க ரொம்ப பாவம் தான் நான் ?!
:))@@விஜய் கூறியது...

//ராட்சசி !!!!!//

அதே அதே !!

:))


@@asiya omar கூறியது...

//ராட்சக்காதல் புதுசாக இருக்கு கௌசல்யா.//

அப்படியா தோழி?? :))

 

@@Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...

//ஹா ஹா ஹா.. என்னங்க.. இப்படி பின்றீங்க.. செம கமெண்ட்//

நான் சொல்றது சரிதானே ஆனந்தி...தனியா எப்படிப்பா விட்டுட்டு போறது...?! :)))

//ராட்சசக் காதல்... ஹ்ம்ம்ம்.. புதுமையான...காதல் தான்//

உண்மைதான் தோழி. நல்லா ரசிக்கிறீங்க... :))

 

@@ஹேமா கூறியது...

//அப்போ நீங்களும் காதல் ராட்சசியோ....!//

அப்ப நீங்களும் அப்படிதானா ??
same blood !! :))

 

Philosophy Prabhakaran கூறியது...

//கவிதை புதுமையாகவும் அருமையாகவும் இருந்தது//

ரசனைக்கு நன்றி பிரபாகர்.

 

@@Balaji saravana கூறியது...

//ரைட்டு! எவ்வளோ அன்பு உங்களுக்கு!//

சரியா சொல்லிடீங்க பாலா...நல்ல புரிதல். :))

//விதவிதமான வார்த்தைகளில் சொன்னாலும் காதல் காதல் தான்! :)//

ஆமாம் அதே தான்.

 

@@TERROR-PANDIYAN(VAS) கூறியது

//இதுக்கு பேரு ராட்சஸக் காதல் இல்லை. கொலைகார காதல். உங்க கடைசி காலத்துல உங்க பக்கத்துல இருக்கரது அவருக்கு பாதுகாப்பு இல்லை. ரைட்டு.//

இது தெரிஞ்சிட்டே தைரியமா இருக்கிறாரே...?! he is great தானே !! :)))

 

@@சே.குமார் கூறியது...

//ராட்சஸ காதலை சொன்ன விதம் அருமை.//

ரசனைக்கு நன்றி குமார்.


@@ஜெ.ஜெ கூறியது...


நன்றிங்க

 

அழகான ராட்சசியே,

ஹ்ம்ம்.. அருமையான கவிதை!! :)

 

நானும் உங்களை போல் தான்

 

unmaiyaana kaathal raatcasiyetaan !!

santegamillai