வெறுமை...!

                          
                          என் மௌனம் எனக்காய்
                          உன்னிடம் சண்டை பிடிக்கிறது
                          மௌனமே பதிலாய் வரும்
                          என்பதை அறியாமல் !!


                          உன் கை பிடித்து மழையில் நடக்க 
                          கனா நிதம் கண்டும்
                          மழை வந்துவிட்டது
                          நீ....!!?


                          உன் நினைவுகள் எப்போதும்
                          எனக்கு !
                          என்னை தவிர
                          அனைத்தும்
                          நினைவாய் உனக்கு !?

                          
                         தீபம் நீ ! 
                         உன்னில்   
                         எரிந்து  போகும்  
                         விட்டில் பூச்சியாகி  
                         போனேன்  நான் !! 


                         இறுதிவரை உறுதியாய்
                         இருப்பேன் என்றாய் - யார்
                         இறுதி வரை என்று  - என்
                         இறுதி யாத்திரையில்
                         தெரிந்துவிட்டது !!?


                          எழுதப்படாத  காகிதமாய்
                          பிரிக்கப்படாத  புத்தகமாய்
                          வாசிக்கப்படாத  கவிதையாய்
                          வெறுமையாய், 
                          செல்லரித்துப் போன என் காதல் !!31 comments:

//இறுதிவரை உறுதியாய்

இருப்பேன் என்றாய் - யார்
இறுதி வரை என்று - என்
இறுதி யாத்திரையில்
தெரிந்துவிட்டது !!?//

இது ரொம்ப டச்சிங்கா இருக்கு ...........சூப்பர்

 

// எழுதப்படாத காகிதமாய்

பிரிக்கப்படாத புத்தகமாய்
வாசிக்கப்படாத கவிதையாய்
வெறுமையாய்,
செல்லரித்துப் போன என் காதல் !!//

போச்சா .....போச்சா ....எலேய் சௌந்தர் கேட்டுக்கோ ......வேண்டாம் ...வேண்டாம் ன்னு இதுக்கு தான் சொல்லுறது ....(எப்பாட கோர்த்து விட்டாச்சு ...இனி எல்லோரும் கேளுங்க சௌந்தர் கிட்ட யாருன்னு ....).

 

எழுதப்படாத காகிதமாய்
பிரிக்கப்படாத புத்தகமாய்
வாசிக்கப்படாத கவிதையாய்
வெறுமையாய்,
செல்லரித்துப் போன என் காதல் !!////

மருந்து வாங்கி அடிங்க .....

 

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

 

அடிக்கடி நான் சொல்றதுதான்...

கவிதையின் வரிகளில் ஆளுமையும் உணர்வும் நல்லா இருக்கு. ஆமா இப்போ எல்லாம் நல்லா எழுத ஆரம்பிச்சுட்டீங்க!

 

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html

 

அருமை, போட்டோவும் நல்ல இருக்கு .

Kurinji kathambam

குறிஞ்சி குடில்

 

// உன் நினைவுகள் எப்போதும்
எனக்கு !
என்னை தவிர
அனைத்தும்
நினைவாய் உனக்கு !?
//

அட இந்த வரிகள் நல்லா இருக்கு அக்கா !

 

//இறுதிவரை உறுதியாய்
இருப்பேன் என்றாய் - யார்
இறுதி வரை என்று - என்
இறுதி யாத்திரையில்
தெரிந்துவிட்டது !!?//

அட பாவமே ?!

 

/// எழுதப்படாத காகிதமாய்
பிரிக்கப்படாத புத்தகமாய்
வாசிக்கப்படாத கவிதையாய்
வெறுமையாய்,
செல்லரித்துப் போன என் காதல் !!//

மிகவும் ரசித்தேன்!

 

ரொம்ப அருமையா உணர்வுகளை எழுத்தில் கொண்டு வந்துட்டீங்க சகோ!
ஒவ்வொன்றிலும் தெறிக்கிறது உங்கள் காதலின் ஆழம்!
அசத்தல் :)

 

சிறப்பான கவிதை
வரிகள் ஒவ்வொன்றும் அழகான ரசனை புகைப்பட தேர்வும் அருமை

 

மிகவும் ரசித்தேன்!

 

எழுதப்படாத காகிதமாய்
பிரிக்கப்படாத புத்தகமாய்
வாசிக்கப்படாத கவிதையாய்
வெறுமையாய்,
செல்லரித்துப் போன என் காதல் !!


//ரொம்ப அருமை கவுசல்யா..

 

கவிதை அருமை

 

கடைசி பாரா பலமுறை படிக்க வைத்தது

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

 

கடைசி வரிகள் மிக அழகிய தத்துவம்.... பாராட்டுக்கள்.

 

சொல்லி முடித்த ஆதங்க வரிகளில் அமுங்கிப்போனேன் கௌசி !

 

//உன் கை பிடித்து மழையில் நடக்க
கனா நிதம் கண்டும்
மழை வந்துவிட்டது
நீ....!!?//

ரசித்தேன்.. உங்களின் ஏக்கம் ஒவ்வொரு வரிகளிலேயும் நன்றாக தெரிகிறது..!!

// எழுதப்படாத காகிதமாய்
பிரிக்கப்படாத புத்தகமாய்
வாசிக்கப்படாத கவிதையாய்
வெறுமையாய்,
செல்லரித்துப் போன என் காதல் !!//

ஹ்ம்ம்.. அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்..!!


எழுத்துப் பிழையோ என்று தோன்றியது பின்வரும் வார்த்தை..!

//எறிந்து போகும்// ->> எறிந்து போகுமா இல்லை எரிந்து போகுமா..?

 

@@ இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//இது ரொம்ப டச்சிங்கா இருக்கு//

எப்படியோ புரிஞ்சிடுச்சே சந்தோசம்.

//எலேய் சௌந்தர் கேட்டுக்கோ ......வேண்டாம் ...வேண்டாம் ன்னு இதுக்கு தான் சொல்லுறது //

அவனுக்கு நீங்க வேற சொல்றீங்களா...கேட்டும் திருந்த மாட்டரானே பாபு...?!! :))

 

@@ சௌந்தர் கூறியது...

//மருந்து வாங்கி அடிங்க .....//

நல்ல யோசனைதான். நன்றி சௌந்தர்.@@ தோழி பிரஷா கூறியது...

//உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்//

பெற்று கொண்டாச்சு...வாசலில் வைத்து விட்டாச்சு... ரொம்ப நன்றி தோழி

 

@@ dheva கூறியது...

//அடிக்கடி நான் சொல்றதுதான்...//

அடிக்கடி சொன்னாலும் மறந்து விடுகிறதே...!? :))

உங்களின் வருகைக்கு நன்றிகள் பல.

 

@@ Kurinji ...


நன்றி தோழி. கவிதை எழுதுறதை விட படம் எடுக்கத்தான் சிரமமா இருக்கு !! :)@@ கோமாளி செல்வா கூறியது...

//அட இந்த வரிகள் நல்லா இருக்கு அக்கா !//

//அட பாவமே ?//


உணர்விற்கு நன்றி செல்வா

 

@@ எஸ்.கே கூறியது...

//மிகவும் ரசித்தேன்//

ரசனைக்கு நன்றி சுரேஷ்.

 

@@ Balaji saravana கூறியது...

//ஒவ்வொன்றிலும் தெறிக்கிறது உங்கள் காதலின் ஆழம்! //

புரிதலுக்கு நன்றி பாலா...உணர்வுகளே வார்த்தைகளாய் !!

 

@@ மாணவன்...

உங்களின் அனைத்து ரசனைக்கும் நன்றி.


@@ வெறும்பய...

நன்றி ஜெயந்த்.

 

@@ தேனம்மை லெக்ஷ்மணன்...

இந்த வாசலுக்கு உங்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கிறது.

 

@@ Meena...

நன்றி தோழி.


@@ விஜய் கூறியது...

//கடைசி பாரா பலமுறை படிக்க வைத்தது //

ரசனைக்கு நன்றி விஜய்.


@@ சி. கருணாகரசு கூறியது...

//கடைசி வரிகள் மிக அழகிய தத்துவம்//

நன்றி நண்பரே.

 

@@ ஹேமா கூறியது...

//சொல்லி முடித்த ஆதங்க வரிகளில் அமுங்கிப்போனேன் கௌசி //

அட என்ன ஹேமா...மெதுவா எழுந்திருங்கபா . . .! உங்களை கவிதை எழுத சொல்லி வானம் காத்திருக்கிறது

 

@@ பால் [Paul] கூறியது...

//எழுத்துப் பிழையோ என்று தோன்றியது //

எழுத்து பிழைதான், நான் கவனிக்க வில்லை, மன்னிக்கவும். தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி.

 
லாரன்ஸ்

நெகிழ்ச்சி, இதம்....

ஒரு உன்னத உணர்வின்
உறியடி உற்சவம்....