நம்பிக்கை...!

                                        
                                         தந்தை இறந்துவிட்டார்
                                         கைவிட்டு சென்ற அண்ணன்
                                       
                                         பசி ஏக்கம் தேக்கிய
                                         விழிகளுடன் தம்பி, தங்கை !
                                         
                                        நோய்களுடன் போராடி தினம்
                                         தோற்று கொண்டிருக்கும் தாய் !
                                        
                                         வேறு வழியில்லை
                                         எடுத்தேன் கையில் கத்தியை !?
                                        
                                        ஆத்திரத்தில் அல்ல
                                         நம்பிக்கையில் !!
                                         .........
                                         .........
                                         சலூன் கடையில் நான் !!







41 comments:

வேற வழியில்லை பாராட்டித்தான் ஆகவேண்டும் கெளசல்யா...

சோம்பித்திரியும் மனிதர்கள் செய்யும் தொழில்களில் இல்லை ஏற்றத் தாழ்வு..!

 

நல்ல நம்பிக்கை... நன்று அக்கா...

 

அவரின் முயற்சி, நம்பிக்கை பொய்க்காது. நல்ல கவிதை கௌசல்யா.

 

நம்பிக்கையே வாழ்க்கை என்ற உண்மையை இச்சிறு கவிதை மூலம் அழகாக சொல்லி விட்டீர்கள் சகோதரி.

 

நம்பிக்கையா இருக்குங்க கவிதை....

சூப்பர்

 

ஆஹா...

தன்னம்பிக்கை கடைசி வரியில் வந்தாலும் அந்த முடிவு பாராட்டத்தக்கது...

அருமையான தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை...

ஆயிரம் சொற்களால் ஆகாதது மட்டுமே சொல்லும் இந்த காலத்தில், சில வரிகளில் தன்னம்பிக்கையை சொன்ன இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்தது...

 

தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை...

 

எந்த தொழில இருந்த என்ன .........உழைக்கனும்னு முடிவு எடுத்துட்டா ?ஒன்னும் இல்லை .....ஏற்ற தாழ்வும் இல்லை .......

 

நெஞ்சை தொட்டகவிதை

 

கடைசி வரிகளில் துளிர்க்கும் தன்னம்பிக்கை மொட்டு!
தேவா அண்ணா சொன்னமாதிரி, வேற என்ன சொல்ல பாராட்டித்தான் ஆகவேண்டும் சகோ! :)

 

கவிதையில் ட்விஸ்ட் அருமை.

 

நல்ல நம்பிக்கை
நல்ல கவிதை கெளசல்யா...

 

SUPER

இறுதி வரியில் திருடன் என்ற வார்த்தை வரும் என்று நினைத்தேன்

அருமை

 

பசி பத்தையும் மறக்கச் செய்யும் கௌசி !

 

ரொம்ப நல்லா இருக்குங்க...

 
லாரன்ஸ்

அற்புதமான கவிதை. ஆக்கபூர்வமான சிந்தனை. பிரமாதம், தொடர்ந்து கலக்குங்க.....

இந்த கவிதை வாசிக்கும் போது, இப்படி தொடங்கலாமோ என தோன்றியது. நினைத்ததை இங்கு பகிர்ந்து விட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.


ஒரே நாளில்
என் கை
கத்தி எடுத்தது....
தொழிலுக்காக.... !!!!

அந்த நாள்...


தந்தை இறந்துவிட்டார்
கைவிட்டு சென்ற அண்ணன்

பசி ஏக்கம் தேக்கிய
விழிகளுடன் தம்பி, தங்கை !

நோய்களுடன் போராடி தினம்
தோற்று கொண்டிருக்கும் தாய் !

வேறு வழியில்லை
எடுத்தேன் கையில் கத்தியை !?

ஆத்திரத்தில் அல்ல
நம்பிக்கையில் !!
.........
.........
சலூன் கடையில் நான் !!

 
லாரன்ஸ்

அற்புதமான கவிதை. ஆக்கபூர்வமான சிந்தனை. பிரமாதம், தொடர்ந்து கலக்குங்க.....

இந்த கவிதை வாசிக்கும் போது, இப்படி தொடங்கலாமோ என தோன்றியது. நினைத்ததை இங்கு பகிர்ந்து விட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.


ஒரே நாளில்
என் கை
கத்தி எடுத்தது....
தொழிலுக்காக.... !!!!

அந்த நாள்...


தந்தை இறந்துவிட்டார்
கைவிட்டு சென்ற அண்ணன்

பசி ஏக்கம் தேக்கிய
விழிகளுடன் தம்பி, தங்கை !

நோய்களுடன் போராடி தினம்
தோற்று கொண்டிருக்கும் தாய் !

வேறு வழியில்லை
எடுத்தேன் கையில் கத்தியை !?

ஆத்திரத்தில் அல்ல
நம்பிக்கையில் !!
.........
.........
சலூன் கடையில் நான் !!

 

நல்ல நம்பிக்கையூட்டும் கவிதை. நன்றாக இருந்தது!!

 

இந்தக்கவிதை புதுசான இடத்துக்குள் நுழைகிறது.ஏனையவற்றில் சிதறிக்கிடக்கும் வண்ணங்கள் இங்கே ஒற்றைச்சிவப்பாய் தெறிக்கிறது தோழமையே.
முன்னாடி உள்ள கவிதைகளில் சில வாசித்தேன் படங்கள் கவிதையோடு மல்லுக்கட்டி கண்ணைப்பறிக்குது.
எங்கள் ப்ராயத்தில் கலர்ப்பெண்சில்கொண்டு திணரிக்கொண்டிருந்த இந்த வாலிப வண்ணங்கள் கணினியால் ஜொலிக்கிறது.
காதல் எப்படிச்சொன்னாலும் குறுகுறுக்கும்.
ரொம்ப ரசித்தேன் சகோதரி.

 

Confidence. its not a word.
its a tablet for diffidence.
Really superb lines..

 

சூப்பர்ப் கௌசல்யா :) ஒரு சிறிய சிரிப்புடன் ரசித்தேன்..!! :)

 

ஒரு நிமிஷம் பயப்பட வச்சிட்டீங்க...
கையில் கத்தி எடுத்ததும்.....! ஹ்ம்ம்.. நல்லா இருக்குங்க..

நல்ல முடிவு.. ;-))

 

@@ dheva said...

//சோம்பித்திரியும் மனிதர்கள் செய்யும் தொழில்களில் இல்லை ஏற்றத் தாழ்வு//

ஆமாம். சும்மா இருந்து பொழுது போக்கும் பலரை விட இந்த பெண்ணை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த கவிதையின் கரு ஒரு நிஜ நிகழ்வு.

கருத்திற்கு நன்றி தேவா.

 

@@ கவிநா...

நன்றி காயத்ரி.


@@ Starjan ( ஸ்டார்ஜன் )...

நன்றி நண்பரே.


@@ ஸாதிகா கூறியது...

//நம்பிக்கையே வாழ்க்கை//

நிதர்சனம் தோழி. நன்றி.



@@ அமைதிசாரல்...

நன்றி


@@ மாணவன்...

நன்றி சகோ.

 

@@ R.Gopi கூறியது...

//தன்னம்பிக்கை கடைசி வரியில் வந்தாலும் அந்த முடிவு பாராட்டத்தக்கது...//

தன்னம்பிக்கை கடைசியா வந்தாலும் அந்த நம்பிக்கை அற்புதம் இல்லையா கோபி ?? :))))

// சில வரிகளில் தன்னம்பிக்கையை சொன்ன இந்த கவிதை எனக்கு மிகவும் பிடித்தது.//

கவிதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மகிழ்ச்சியே...

 

@@ S Maharajan...

வாங்க நண்பரே...எங்க ரொம்ப நாளாய் ஆளை காணும்...?

வந்ததிற்கு மகிழ்கிறேன்.

 

@@ இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//எந்த தொழில இருந்த என்ன .........உழைக்கனும்னு முடிவு எடுத்துட்டா ?ஒன்னும் இல்லை .....ஏற்ற தாழ்வும் இல்லை//

உண்மைதான் பாபு...சோம்பி இருக்கத்தான் கூடாது.

 

@@ யாதவன்...

நன்றி சகோ.


@@ Balaji saravana கூறியது...

//கடைசி வரிகளில் துளிர்க்கும் தன்னம்பிக்கை மொட்டு!
தேவா அண்ணா சொன்னமாதிரி, வேற என்ன சொல்ல பாராட்டித்தான் ஆகவேண்டும்//

அந்த பெண்ணை பாராட்டனும் பாலா.
தன்னம்பிக்கையின் மொத்த உருவம் அந்த பெண். அந்த பெண்ணின் புகைப்படம் கிடைக்கவில்லை. கிடைத்தால் போட்டு இருப்பேன்.

 

@@ Chitra...

நன்றி தோழி.


@@ asiya omar...

ரசனைக்கு நன்றி தோழி


@@ தோழி பிரஷா...

நன்றி தோழி.

 

@@ THOPPITHOPPI கூறியது...


//இறுதி வரியில் திருடன் என்ற வார்த்தை வரும் என்று நினைத்தேன்//

கத்தி என்றால் திருடன் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது தானே...

வருகைக்கு நன்றி

 

@@ ஹேமா...

வாழ்ந்தாக வேண்டுமே ஹேமா...?!!

நன்றி தோழி.


@@ கமலேஷ்...

உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன் . நன்றி

 

@@ லாரன்ஸ் கூறியது...


//இந்த கவிதை வாசிக்கும் போது, இப்படி தொடங்கலாமோ என தோன்றியது. நினைத்ததை இங்கு பகிர்ந்து விட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.//

மன்னிப்பு ஏன்?? படித்துவிட்டு செல்வது பொதுவாய் எல்லோரின் பழக்கம் நான் உள்பட...ஆனால் அதில் சில மாற்றங்களை யோசித்து சொல்வது இன்னும் சிறப்பல்லவா...?!!

பாலா இந்த மாதிரி முயற்சி பண்ணுவார்..இப்ப நீங்க...மகிழ்கிறேன்.

உங்களின் முதல் வருகைக்கு நன்றிகள் பல.

நீங்கள் முதலில் முடிவை சொல்லிவிட்டு தொடருவது நன்றாகவே உள்ளது. வாழ்த்துக்கள்.

:))

 

@@ ஆயிஷா...

நன்றி தோழி.



@@ கோவை ஆவி கூறியது...

//நல்ல நம்பிக்கையூட்டும் கவிதை//

ஆவி சொன்னா சரிதான். நன்றி.

:))

 

@@ காமராஜ்...

எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது
முதலில் நீங்கள் என் தளம் வந்தது, அப்புறம் சில கவிதைகளை வாசித்தது, அதை அழகாய் விவரித்தது எல்லாமே.
மனதின் உணர்வுகளை கவிதை என்ற பெயரில் எழுதி கொண்டிருக்கிறேன், இலக்கணம் எங்கே என்று தேட வேண்டி இருக்கும்.

உங்களை போன்றோரின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த பொறுப்பை கொடுக்கிறது. அதுக்காக நன்றி நன்றி நன்றி.

 

@@ Thanglish Payan கூறியது...

//Confidence. its not a word.
its a tablet for diffidence.
Really superb lines..//

உங்களின் கருத்திற்கு நன்றி

 

@@ பால் [Paul] கூறியது...

//சூப்பர்ப் கௌசல்யா :) ஒரு சிறிய சிரிப்புடன் ரசித்தேன்..!! //

சரி. சிரிக்கிற மாதிரி இருக்கா ?? புரியலையே பால் ?

எப்படியோ ரசித்தீர்கள் அது போதும்..
:))

 

@@ Ananthi (அன்புடன் ஆனந்தி) கூறியது...

//ஒரு நிமிஷம் பயப்பட வச்சிட்டீங்க...
கையில் கத்தி எடுத்ததும்.....! ஹ்ம்ம்.. நல்லா இருக்குங்க..//

பயமா, யாருக்கு ஆனந்திக்கா ?? நம்புற மாதிரி சொல்லுங்கபா !!

:)))

 

//பயமா, யாருக்கு ஆனந்திக்கா ?? நம்புற மாதிரி சொல்லுங்கபா !!

:))) //

:-)))

 

வழியே இல்லை...வாழ வழியா இல்லை அருமையான கவிதை